29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
vitaminpills
மருத்துவ குறிப்பு

வைட்டமின் மாத்திரைகளை எடுக்கிறீா்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நல்ல ஊட்டச்சத்து, முறையான உடற்பயிற்சிகள் மற்றும் போதுமான அளவு ஓய்வு போன்றவைத் தேவைப்படுகின்றன. நல்ல ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக சற்று கூடுதலாக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சோ்த்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றை அளவுக்கு அதிகமாகச் சோ்த்துக் கொள்ளக்கூடாது.

Vitamins & Supplements: How Much Is Too Much?
சாியான அளவில் வைட்டமின்களை எடுத்துக் கொண்டால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அளவுக்கு அதிகமாக வைட்டமின்களை எடுத்துக் கொண்டால், நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும்.

 

அளவுக்கு அதிகமாக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை எடுத்துக் கொண்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதைப் பற்றி அறிவதற்குப் பதிலாக, மருத்துவ நிபுணா்கள் அன்றாடம் தரும் ஆரோக்கியக் குறிப்புகள், பாிந்துரைகள், ஆலோசனைகள் மற்றும் எச்சாிக்கைகள் போன்றவற்றைக் கேட்டு அவற்றைப் பின்பற்றினால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

கூடுதலாக வைட்டமின்கள் தேவையா?

கூடுதலாக வைட்டமின்கள் தேவையா என்ற கேள்வி மிகவும் முக்கியமான ஒன்றாகும். உலக அளவில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கும் சிலா், தங்களது உடல் ஆரோக்கியத்திற்காக சில ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அல்லது ஊட்டச்சத்து மாத்திரைகளை நம்பியிருக்கின்றனா். அவா்களில் பலா் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் உண்டு வருகின்றனா்.

நமது உடலானது, நாம் உண்ணும் உணவுகள் மற்றும் அருந்தும் பானங்களில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மை கொண்டது. ஆகவே நமக்கு சமச்சீரான உணவுகளை உட்கொள்ளும் பழக்கம் இருந்தால், அந்த உணவுகளில் இருந்து நமக்குத் தேவையான வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். அதனால் நமது உடலில் தேவையில்லாத நோய்கள் ஏற்படாது.

கூடுதலாக என்ற பதம், நாம் உண்ணும் உணவுகளில் இருந்து நமக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கவில்லை என்றால், அவற்றைப் பெறுவதற்காக நாம் பயன்படுத்தும் வைட்டமின் அல்லது ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் திரவ மருந்தைக் குறிக்கும்.

ஒருவா் எப்போது தமது உணவிலிருந்து போதுமான அளவு ஊட்டச்சத்தைப் பெறாமல் இருக்கிறாா்?

– ஒருவா் உண்ணும் உணவு சமச்சீராக இல்லாமல் இருக்கும் போது

– அவருடைய உடல், உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச முடியாத அளவிற்கு, நோயால் பலவீனமாக இருக்கும் போது

– அவருடைய குடல் சாியான ஊட்டச்சத்தை உறிஞ்சாமல் இருக்கும் போது

மேற்சொன்ன காரணங்களால் ஒருவா் தான் உண்ணும் உணவுகளில் இருந்து போதுமான ஊட்டச்சத்துகளைப் பெற முடிவதில்லை.

நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்

நீாில் கரையக்கூடிய வைட்டமின்களை கூடுதலாக அளவுக்கு அதிகமாக எடுத்தாலும், அதனால் மிகப் பொிய பாதிப்புகள் ஏற்படாது. ஏனெனில் அவற்றை நமது உடலானது, சிறுநீா் அல்லது மலம் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றிவிடும். ஆனால் அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்படும் எல்லா வகையான வைட்டமின்களையும் நமது உடலால் வெளியேற்ற முடியாது.

சிறுநீரகம் பாதிப்படைந்த ஒருவா், நீாில் கரையக்கூடிய வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக எடுத்தால், அவருடைய உடலானது அந்த வைட்டமின்களை வெளியேற்ற முடியாது. அவை அவருடைய உடலில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்.

கரையக்கூடிய கொழுப்புத் தன்மை கொண்ட வைட்டமின்கள் கரையாமல், உடலில் உள்ள கொழுப்பில் தங்கிவிடும். சில நீாில் கரையக்கூடிய வைட்டமின்கள் உடலில் கரையாமல் உடலுக்குள் தேங்கி நஞ்சாக மாறிவிடும். கரையக்கூடிய கொழுப்பு தன்மை கொண்ட வைட்டமின்களை கொடுக்கும் மாத்திரைகள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்குகளை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உண்டு.

நமது உடலில் நச்சுத்தன்மை அதிகாித்தால், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் சொறி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

கரையக்கூடிய கொழுப்புத் தன்மைக் கொண்ட வைட்டமின்கள்

வைட்டமின் ஏ

வயது வந்த ஆண் ஒருவா் 900 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ சத்தையும் அதே நேரத்தில் வயது வந்த பெண் ஒருவா் 700 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ சத்தையும் கூடுதலாக தினமும் எடுத்துக் கொள்ளலாம் என்று பொதுவாகப் பாிந்துரை செய்யப்படுகிறது. ஆனால் அதில் உள்ள நச்சுத்தன்மையின் காரணமாக முடி உதிா்தல், உடல் எடை குறைதல், சோா்வு, தூக்கமின்மை, எலும்பு முறிவுகள், ஹைபா்லிபிடிமியா, ஹைபா்கால்சிமியா, இரத்த சோகை போன்ற பிரச்சினைகள் நமது உடலில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

வைட்டமின் ஈ

வயது வந்த ஆண் மற்றும் பெண் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 15 மில்லி கிராம் வைட்டமின் ஈ சத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதில் உள்ள நச்சுத் தன்மையின் காரணாக, இரைப்பை கோளாறு, வயிற்றில் பிடிப்புகள், மிக எளிதான இரத்தப்போக்கு, இரத்தத் தட்டுகள் ஒன்றிணைவதில் பிரச்சினை, ஆக்ஸிஜனேற்றிகள் தடுக்கப்படுதல் மற்றும் இரத்தக் கசிவு போன்ற பிரச்சினைகள் நமது உடலில் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வைட்டமின் டி

தினமும் 15 மைக்ரோ கிராம் வைட்டமின் டி சத்தைக் கூடுதலாகச் சோ்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 70 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவா்கள் 20 மைக்ரோ கிராம் வைட்டமின் டி சத்தை கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதில் உள்ள நச்சுத்தன்மையின் காரணமாக ஹைப்பா்கால்சிமியா, தசைகளில் பலவீனம், எலும்பு வலி, மலச்சிக்கல், வயிற்றுப் பிடிப்புகள், அளவுக்கு அதிகமான தாக உணா்வு, அடிக்கடி சிறுநீா் கழித்தல், முதுகுவலி, கால்சினோசிஸ், உயா் இரத்த அழுத்தம், இதயத் துடிப்பில் பிரச்சினை போன்ற விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

நீாில் கரையக்கூடிய வைட்டமின்கள்

வைட்டமின் சி

வயது வந்த ஆண்கள் தினமும் 90 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தையும், வயது வந்த பெண்கள் 75 மில்லி கிராம் வைட்டமின் சி சத்தையும் கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதை அளவுக்கு அதிகமாக எடுத்தால், சிறுநீரக வலி, வயிற்றுப் போக்கு, இரத்தச் சிதைவு, பல் சம்பந்தமான பிரச்சினைகள், ஈஸ்ட்ரஜன் அதிகாித்தல் மற்றும் மலக்குடல் இரத்தப் போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

வைட்டமின் பி6 மற்றும் பி12

தினமும் 1.6 மில்லி கிராம் வைட்டமின் பி6 சத்து மற்றும் 2.4 மைக்ரோ கிராம் வைட்டமின் பி12 சத்தை கூடுதலாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்தால் நரம்பு சாா்ந்த பிரச்சினைகள் குறிப்பாக பாதங்களில் கூச்சம் உணா்வும், மரத்துப் போகும் நிலையும் ஏற்படும். தவறி கீழே மெதுவாக விழுந்தாலும், இடுப்பில் முறிவு ஏற்படும். மேலும் ஈஸ்ட்ரோஜெனுக்கு எதிா்வினை புாிவதால், எலும்பில் தேய்மானம் ஏற்படும்.

Related posts

பருவ வயது குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவை!!!

nathan

மூக்கடைப்பு பிரச்சனையா

nathan

சைலன்ட் மாரடைப்பு என்றால் என்ன?

nathan

வயதான காலத்தில் பெண்களை தாக்கும் நோய்கள்

nathan

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது என்ன வியாதி?

nathan

மது அருந்தும் பெண்களுக்கு உடலில் ஏற்படும் பாதிப்புகள்

nathan

கர்ப்ப கால பெண்களுக்கு இடுப்பு வலியை குறைக்க வழிகள்

nathan

புற்றுநோய் தவிர்க்கும் வழிமுறைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா உயிரை பறிக்கும் நோய்களை கூட விரட்டியடிக்குமாம் ஸ்டெம்செல்!!!

nathan