28.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
1451287086 0546
அசைவ வகைகள்

அனைவருக்கும் பிடித்த சுவையான சிக்கன் பிரியாணி

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணி என்றால் ஒரு தனி பிரியம் உண்டு. அவற்றை அவ்வப்போது வீட்டிலேயே செய்து அனைவருக்கும் கொடுத்து அசத்துவோம்.

தெவையான பொருட்கள்:

வெங்காயம் – 3
தக்காளி – 1
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 7
இஞ்சி,பூண்டு விழுது – 5 ஸ்பூன்
தயிர் – சிறிதளவு
எலுமிச்சை பழம் – பாதி
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
சிக்கன் – அரை கிலோ
கொத்தமல்லி தழை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்
பட்டை – 2
ஏலக்கய் – 3
உப்பு – தேவையான அளவு
லவங்கம் – சிறிதளவு
கிராம்பு – 2
பிரியாணி இலை – 2

தயார் செய்து கொள்ள வேண்டியவை:

சிக்கனை நன்றாக அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போன்றவற்றை அறிந்து வைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லி, புதினா இவற்றை சுத்தம் செய்து, கட் செய்து வைத்து கொள்ளவும்.

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை:

அதன் பிறகு குக்கரில் அல்லது பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.

இஞ்சி, பூண்டு விழுது, கொத்தமல்லி இலை, புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போன்றவற்றை போட்டு வதக்க வேண்டும். அதன் பிறகு சிக்கனையும் அதில் போட்டு சுருள வதக்க வேண்டும். பின்பு அரிசியையும் போட்டு நன்கு கிளற வேண்டும். பிறகு தயிர் ஊற்ற வேண்டும்.

எலுமிச்சை பழம் பிழிந்து ஊற்ற வேண்டும். கடைசியாக இரண்டு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். பின்பு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு போட்டு குக்கரை மூடி வைக்க வேண்டும். மூன்று விசில் வந்ததும் இறக்கவும். பிரியாணி வெந்ததும் குக்கரைத் திறந்து நன்கு கிளறி விட்டு சிறிது நேரம் கழித்து சாப்பிடவும். மிகவும் சுவையாக இருக்கும்.
1451287086 0546
குறிப்பு:

1. 1 லம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

2. பிரியாணி பாத்திரத்தில் செய்யும் போது, தம் போடுவதற்கு பிரியாணி பாத்திரத்திற்கு அடியில் தோசைக்கல்லை வைத்து தம் போடலாம்.
10 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து இறக்கவும்.

3. பிரியாணி உடையாமல் இருக்க, அரிசியை கழுவியப் பிறகு, நெய் விட்டு வறுத்து சேர்த்தால் பிரியாணி(சாதம்) உடையாமல் வரும்.

4. சிக்கனை தயிர் மற்றும் சிறிது உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்து சேர்த்தால் சிக்கன் மிருதுவாக இருக்கும்.

Related posts

மட்டன் மிளகு கறி

nathan

காடை முட்டை குழம்பு

nathan

சிக்கன் ரோஷ்ட்

nathan

இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கைக்கீரை முட்டை பொரியல்

nathan

தந்தூரி சிக்கன்

nathan

சுவையான ஹரியாலி முட்டை கிரேவி

nathan

முட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல்

nathan

மொச்சை நெத்திலி மீன் குழம்பு

nathan

சிக்கன் சால்னா: பேச்சுலர் ரெசிபி

nathan