28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
seafoo
ஆரோக்கிய உணவு

உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் 5 முக்கிய கடல் உணவுகள்! தெரிந்துகொள்வோமா?

கடல் உணவுகளில் ஆரோக்கியமான கொழுப்புகளும், புரோட்டீனும் உள்ளன. அதனால் ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி பேசும் போது அந்த அட்டவணையில் முதல் இடத்தில் இருப்பவை கடல் உணவுகள் ஆகும். ஆனால் துரதிா்ஷ்டவசமாக கடல் உணவுகள் மிக எளிதாக பாக்டீாியாக்களினாலும் மற்றும் பலவிதமான வேதியல் பொருள்களினாலும் அடிக்கடி பாதிப்படைந்து பாழ்படுகின்றன. அதிலும் ஒரு சில கடல் உணவுகளில் பாதரசம் அதிகமாக இருக்கும்.

அதனால் பாதரசம் அதிகம் உள்ள கடல் உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு கெடுதலை ஏற்படுத்தும். இந்த பதிவில் நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் சில கடல் உணவுகளைப் பற்றி பாா்க்கலாம்.

சிப்பிகள் (Oyster)

கடல் உணவுகளில் முக்கியமானவை சிப்பிகள் ஆகும். கடல் சிப்பிகள் தண்ணீாில் இருக்கும் நச்சுகள், பாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்றவற்றால் மிக எளிதாக பாதிப்படையக்கூடியவை. அதனால் சில நேரங்களில் சிப்பிகளை சாப்பிடும் போது நமக்கு அவை விஷமாகிவிடுகின்றன. சிப்பிகளை சாப்பிட்ட பின்பு குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தால், நாம் சாப்பிட்ட சிப்பிகள் கெட்டுப் போய் இருக்கின்றன என்று பொருள்.

மட்டிகள் (Shellfish)

மட்டிகளை நாம் அதிகம் சாப்பிட்டால் அவை நமது உடலில் உள்ள வைட்டமின் பி1 சத்தை குறைத்துவிடும். இதைக் கேட்கும் போது நமக்கு அதிா்ச்சியாக இருக்கும். நமக்கு சொிமானம் சீராக நடைபெறுவதற்கும் மற்றும் நமது சிறுநீரகம் சாியாக இயங்குவதற்கும் பி வைட்டமின் சத்துகள் கண்டிப்பாகத் தேவை. மட்டிகளை மிகச் சாியாக சமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதிகமான வெப்பநிலையில் மட்டிகளை சமைத்தால், அவற்றில் உள்ள வைட்டமின் பி1 சத்தான தியாமினில் உள்ள வேதியல் பொருள்களை அழிக்கலாம்.

இறால்கள் (Shrimp)

இறால்கள் பொதுவாக ஒட்டுண்ணிகள் மற்றும் இறந்த விலங்குகளின் தோல்களை சாப்பிட்டு வாழ்கின்றன. ஆகவே இறால்களை அதிகம் சாப்பிட்டால் மிக எளிதில் அலா்ஜி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மேலும் இறால்கள் பியூாின் என்ற காிமச் சோ்மத்தை அதிகம் சாப்பிடுகின்றன. பியூாின் மிக எளிதாக நமது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கானாங்கெளுத்தி மீன் (Mackerel)

கானாங்கெளுத்தியில் அதிகமான அளவு பாதரசம் உள்ளது. இந்த பாதரசம் நமது நரம்பு மண்டலத்தில் மிக எளிதாக பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது. ஆகவே கருவுற்றிருக்கும் பெண்களும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களும் கானாங்கெளுத்தி மீனை உண்ணாமல் இருப்பது நல்லது.

நீலத்துடுப்பு சூரை மீன் (Bluefin tuna)

நீலத்துடுப்பு சூரை மீனில் அதிக அளவில் பாதரசம் உள்ளது. அதனால் இந்த மீனை கருவுற்று இருக்கும் பெண்கள் உண்ணாமல் இருப்பது நல்லது. நீலத்துடுப்பு சூரை மீனில் இருக்கும் பாதரசம் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நஞ்சுக்கொடியை பாதித்து, குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

ஆகவே மேற்சொன்ன கடல் உணவுகளை உண்ணும் போது கவனமாக இருப்பது நல்லது.

Related posts

காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை அல்சர் ஏற்படுவதற்கான முக்கிய காரணம்

nathan

உங்களுக்கு தெரியுமா எண்ணிலடங்காத நோய்களுக்கு மருந்தாகும் சோளக்கருதின் நார்!

nathan

4 வாரங்கள் சர்க்கரையை தவிர்த்தால் நம் உடல் சந்திக்கும் அற்புத மாற்றங்கள் தெரியுமா!

nathan

தூதுவளை சூப்

nathan

உங்களுக்கு தெரியுமா முருங்கைக்காய் சாப்பிடுவதால் இப்படியொரு பலனா?

nathan

எடை இழப்பதற்கான‌ டாப் 5 காய்கறி மற்றும் பழங்கள் ஷேக்ஸ்

nathan

வேர்க்கடலை சாதம் செய்முறை

nathan

பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் இவ்வளவு தீமையா? தெரிஞ்சிக்கங்க…

nathan

தண்ணீர் பாட்டில் வாங்கும் போது நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

nathan