34.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
hatta payaru kulambu 6600
சமையல் குறிப்புகள்

சுவையான தட்டைப்பயறு குழம்பு

பேச்சுலர்கள் பலர் வீடு எடுத்து தங்கியிருப்பதால், அவர்களுக்காக ஒரு அருமையான மற்றும் ஈஸியான ஒரு குழம்பை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அது தான் தட்டைப்பயறு குழம்பு. வீட்டில் அம்மா சமைத்து கொடுத்து சாப்பிட்டிருப்பீர்கள்.

இங்கு அதனை பேச்சுலர்கள் மிகவும் சிம்பிளாக எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து தான் பாருங்களேன்…

Thattapayaru Kulambu
தேவையான பொருட்கள்:

தட்டைப்பயறு – 100 கிராம்
வெங்காயம் – 1
தக்காளி – 1
குழம்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் தட்டைப்பயறை நீரில் கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து மூடி, அடுப்பில் வைத்து, 4-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்துவிட்டு, வேக வைத்த தட்டைப்பயறுடன், வெங்காயம், தக்காளி, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் மீண்டும் வைத்து, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள குழம்பை வாணலியில் ஊற்றி, ஒருமுறை கொதிக்க விட்டு இறக்கினால், தட்டைப்பயறு குழம்பு ரெடி!!!

Related posts

சுவையான மசாலா சீயம்

nathan

சூப்பரான சத்தான தக்காளி கோதுமை தோசை..

sangika

சுவையான வெஜிடேபிள் குருமா

nathan

சுவையான மலபார் அவியல்

nathan

உடுப்பி சாம்பார்

nathan

சுவையான தக்காளி குருமா

nathan

பன்னீர் சீஸ் டோஸ்ட்

nathan

ஒயிட் சாஸ் பாஸ்தா

nathan

சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி தால்

nathan