பெண்கள் மகப்பேறு காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக்கூடாது. மாறாக, டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை தவறாமல் சாப்பிட வேண்டும்.
மகப்பேறு காலத்தில் ஒட்டுக்குடல், பித்தப்பையில் கல், தொடர் குமட்டல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் டாக்டர்களை அணுகுவதுடன் தேவைப்படும் பட்சத்தில் ஸ்கேன், ரத்தப் பரிசோதனைகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும்.
ரத்த அழுத்தம் இருக்கும் பெண்கள் தங்கள் உடல் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். உணவில் உப்பை அறவே தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பின் மாத்திரைகள் சாப்பிடுவதை விட உணவு வகைகள் மூலம் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
கர்ப்பிணிகள் மருத்துவர் பரிந்துரைக்காத மருந்துகளை எடுக்க வேண்டாம். வயிற்றுப் பகுதியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் மேற்கொண்டு ஏற்படும் இடர்பாடுகளை முன்கூட்டியே தவிர்க்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.