25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
04 1423044240 p
ஆரோக்கியம் குறிப்புகள்

கர்ப்பமாக இருக்கும் மனைவி கணவரிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கிய ஆறுதல் மொழிகள்!தெரிந்துகொள்வோமா?

கர்ப்பம் என்பது மிகவும் முக்கியமான விஷயம்; பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அவர்களின் மனதில் பல விதமான எண்ணங்கள் தோன்றி மறையும்; அவர்தம் உடலிலும் மனநிலையிலும் கூட தொடர்ந்து மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கும். இந்த மாற்றங்களுக்கு எல்லாம் மணிமுடியாக பெண்களின் மனதில் பிரசவம் எப்படி இருக்கும் என்பது பற்றிய பயமும் குழந்தையின் நலம் பற்றிய பயமும் இருந்து கொண்டே இருக்கும்.

How To Help Your Wife Pregnant To Overcome Pregnancy Fear?
பெண்களின் மனம் இந்த மாதிரியான பயம், மாற்றங்கள் மற்றும் குழந்தை பெற போகும் சந்தோசம் போன்ற உணர்வுகளை கலவையாக அனுபவித்து, அந்த அனுபவத்தின் வெளிப்பாடாக தங்கள் செயல்களை வெளிப்படுத்துவர். இந்த மாதிரியான நேரத்தில் பெண்கள் தங்களது கணவர்களின் அரவணைப்பையும் அன்பையும் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

கர்ப்பமாக இருக்கும் மனைவி கணவரிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கிய ஆறுதல் மொழிகள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கரு கலைந்து விடுமோ?
கரு கலைந்து விடுமோ?
முதன் முறையாக கர்ப்பம் தரிக்கும் பெருமபலன பெண்களின் மனதில் இந்த பயம் அதாவது கரு கலைந்து விடுமோ என்ற பயம் இருக்கும். கர்ப்பிணி பெண்கள் எதை செய்யவும் பயப்படுவர்; நின்றால் கரு கலையுமோ, நடந்தால் கலையுமோ அல்லது படுத்தால் கலைந்து விடுமோ என்று ஒவ்வொரு செயலையும் பயந்து பயந்தே செய்வர்.

கணவர் செய்ய வேண்டியது!
கணவர் செய்ய வேண்டியது!
பெண்களின் மனதில் ஏற்படும் பயம் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு; இப்படிப்பட்ட மனநிலையில் இருக்கும் கர்ப்பிணிகளை அவர்தம் கணவன்மார்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆறுதலாக பேசி, அவர்களை தைரியமூட்ட வேண்டும்; மேலும் அவர்களின் மனதில் எந்த எண்ணம் தோன்றாமல் இருக்க அவர்களை திசை திருப்ப வேண்டும்.

சத்துக்கள் பத்துமா?
சத்துக்கள் பத்துமா?
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் குழந்தையை குறித்து அதிகம் யோசிப்பதால், எவ்வளவு உண்டாலும் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறதா? குழந்தைக்கு உணவு பத்துகிறதா? என்ற கவலை இருக்கும். கர்ப்பிணி மனைவி இவ்வாறு கவலைப்படும் பொழுது, கணவன்மார்கள் அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.

மாறாக மனைவியை பார்த்து கத்தக்கூடாது; ஏனெனில், அவர்களின் உள்ளே நடைபெறும் ஹார்மோன் மாற்றங்கள் தான் அவர்களை இவ்வாறு கவலையுற செய்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

குறைப்பிரசவமாகி விடுமா?
குறைப்பிரசவமாகி விடுமா?
குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்து விடுமா? அப்படி வேகமாக பிறந்தால் அது முழுதாக வளர்ந்து இருக்குமா? என்று தேவையற்ற பயம் மற்றும் கேள்விகளை மனத்தில் கொண்டு இருப்பார்கள் கர்ப்பிணிகள். ஆகையால் அடிக்கடி அவர்களுடன் நேரம் செலவழித்து, அவர்களின் எண்ண ஓட்டங்களை பற்றி அறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.

தாயே இப்படி குழம்பி பதறி, பயந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தான் ஆபத்து என்பதை கணவன்மார்கள் மனைவி தெளிவு பெறும் வகையில் எடுத்துக் கூற வேண்டும்.

மேலும் படிக்க: பிறப்புறுப்பு மற்றும் கருப்பை இன்றி பிறந்து, வாரத்திற்கு 4 முறை கலவி கொள்ளும் பெண்மணி!

பிரசவ வலி – பிரசவம்!
பிரசவ வலி – பிரசவம்!
இது அநேக கர்ப்பிணி பெண்கள் கொள்ளும் பயம் தான்; தான் பிரசவத்தில் இறந்து விடுவோமா? பிரசவம் அதிக வலியை கொடுக்குமா? அதை தன்னால் தாங்க முடியுமா? என்ற பல கேள்விகள் அவர்தம் மனதில் எழுந்து அவர்களை பயம் கொள்ள செய்யும். இந்த மாதிரியான சூழலில் கர்ப்பிணி மனைவியின் பயத்தை போக்க கணவன்மார்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு வலிக்குமோ?
குழந்தைக்கு வலிக்குமோ?
தான் ஏதேனும் செய்தால் அது குழந்தைக்கு வலி ஏற்படுத்தி விடுமோ மற்றும் யாரேனும் அல்லது தனது காய் வயிற்றினை அழுத்தி குழந்தைக்கு வலியை, வேதனையை கொடுத்து விடுமோ என்ற பயம் கர்ப்பிணிகளுக்கு இருக்கும். இந்த பயத்தை போக்கி அவர்களின் மனதை தெளிய வைக்க கணவன்மார்கள் கண்டிப்பாக முயற்சி மேற்கொண்டு, கர்ப்பிணி பெண்களை இயல்பாக வைத்து இருக்க முயல வேண்டும்.

குழந்தையின் ஆரோக்கியம்!
குழந்தையின் ஆரோக்கியம்!
குழந்தை சரியான ஆரோக்கியத்தோடு பிறந்து விடுமா? இல்லை அதற்கு ஏதேனும் குறைபாடு ஏற்பட்டு இருக்குமா? என்று குழந்தையின் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த பயம் கர்ப்பிணி பெண்களின் மனதில் அதிகமாக இருக்கும். இத்தகைய எண்ணங்கள் அவர்களின் மனதில் தோன்றக்கூடாது; அப்படி தோன்றினாலும் அது நிலைபெற்று இருக்க கூடாது என்பதனை கணவர்கள் கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு நினைவுறுத்த வேண்டும்.

மேலும் படிக்க: உங்கள் படுக்கை அறையில் உள்ள இந்த பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமாம்…! அதிர்ச்சி தகவல்..!

சிறந்த அன்னை?!
சிறந்த அன்னை?!
குழந்தை பிறந்த பின் அதனை எப்படி பார்த்து கொள்வது, தன்னால் ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியுமா போன்ற எண்ணங்கள் பெண்களின் மனதில் தோன்றி அவர்களை குழப்பம் அடைய செய்யும்; மேலும் வேலைக்கு செல்லும் பெண்ணாக இருந்தால் வேலையையும், குழந்தையையும் ஒருசேர பார்த்து கொள்வது எப்படி, குழந்தையை சரியாக வளர்த்து விட முடியுமா என பல வித குழப்பங்களை கொள்வர்.

கர்ப்பிணிகளின் கணவன்மார்களே!
கர்ப்பிணிகளின் கணவன்மார்களே!
பெண்களின் இந்த குழப்பங்களை போக்கி அவர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு ஆதரவு அளித்து அன்பால் அரவணைத்து கர்ப்பிணி மனைவியரை பார்த்து கொள்ள வேண்டியது கணவன்மார்களின் முக்கிய கடமை ஆகும். இந்த கடமையை ஆண்கள் சரிவர செய்தால் தன பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியத்துடன், நலத்துடன் பிறக்கும். ஆகையால் கணவன்மார்களே கர்ப்பிணி மனைவியரை இமைக்குள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்..!

Related posts

இந்த 5 ராசிக்காரங்களுக்கு அடுத்தவங்க மனசுல இருக்கிறத படிக்கும் சக்தி இருக்காம்…

nathan

தெரிஞ்சிக்கங்க…மன அழுத்தம் மூலமாக உங்கள் உடலில் ஏற்படும் விசித்திர மாற்றங்கள்!!!

nathan

உங்க மனைவி உங்களோட சண்டை போடமா இருக்க என்ன பண்ணனும் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உண்மையான காரணம் மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது..

nathan

இவ்ளோ இருக்கா மணத்தக்காளி கீரைல .?

nathan

இந்த 5 ராசிக்காரங்களோட பொறாமைக்கு அளவே இல்லையாம்…

nathan

சூப்பரான டிப்ஸ்! வயிற்று சதையை குறைக்கணுமா! வெங்காயம், பசுவின் நெய், பனங்கற்கண்டு போதும்!

nathan

அதிக பேராசைக் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி?

nathan