women with ve
ஆரோக்கிய உணவு

கருப்பையை பலப்படுத்தும் ஆரோக்கிய உணவுகள்!தெரிந்துகொள்வோமா?

கருப்பை என்பது பெண்ணின் உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும். இது தான் பெண்ணின் இனப்பெருக்க அமைப்பு என்ற ஒரு கட்டமைப்பையே உருவாக்குகிறது. இது தான் அடுத்த சந்ததிக்கான அஸ்திவாரமாக செயல்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். எனவே எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

Top 10 Foods To Eat For A Healthy Uterus
சீக்கிரம் கருவுற நினைப்பவர்கள் இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, அவர்களது கருப்பை நன்றாக பலப்படும். இதனால் கரு தங்குவது எளிதாகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்து
நார்ச்சத்து
நார்ச்சத்து உள்ள உணவுகள் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவும். எனவே ஒரு நாளைக்கு 2-3 பெளல் அளவு நார்ச்சத்து உள்ள உணவுகளை நீங்கள் எடுத்துக்

கொள்ளலாம். அதிக நார்ச்சத்துக்கள் பெண்களின் உடம்பில் உள்ள அதிகளவு ஈஸ்ட்ரோஜன் அளவை நீக்குகிறது. மேலும் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் உருவாக்கத்தை தடுக்கிறது.

நார்ச்சத்து உணவுகளான பீன்ஸ், பயிறு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் எடுத்துக் கொள்ளும் போது கெமிக்கல்கள் கலந்த உணவுகள் வேண்டாம். ஆர்கானிக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கெமிக்கல்கள் நீங்கள் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அதற்கு தகுந்த மாதிரி 8-10 கிளாஸ் தண்ணீர் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நீர்ச்சத்து நார்ச்சத்து உணவுகளை எளிதாக செரிக்க உதவும்.

காய்கறிகள்
காய்கறிகள்
காய்கறிகளில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் அதிகமான காய்கறிகளை எடுத்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை விரட்டி விடலாம்.

பருப்பு வகைகள், முட்டைகோஸ், போக் சோய், ப்ராக்கோலி போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த காய்கறிகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் அதிகளவு உள்ளது. பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நமது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இது ஈஸ்ட்ரோஜன் அளவை குறைத்து கருப்பையில் கட்டிகள் வளர விடாமல் தடுக்கும்.

பழங்கள்
பழங்கள்
பழங்களில் வைட்டமின் சி, பயோப்ளேவோனாய்டு போன்றவைகள் உள்ளன. இவைகளும் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை தடுக்கிறது. இது உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை இயல்பாக்கும். எனவே தினமும் பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பயோப்ளேவோனாய்டு உங்கள் கருப்பை புற்றுநோயை தடுக்கிறது. இது உங்கள் இனப்பெருக்க மண்டலத்திற்கு உதவுகிறது. எனவே பசிக்கும் போது பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஜங்க் உணவுகளை தவிர்த்து, ஊட்டச்சத்து உணவுகளை எடுத்து கொண்டு வந்தால், உங்கள் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும்.

பால் பொருட்கள்
பால் பொருட்கள்
பால் பொருட்களான யோகார்ட், சீஸ், பால் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவும். இந்த பால் பொருட்களில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் உள்ளன. கால்சியம் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வைட்டமின் டி கருப்பை நார்த்திசுக்கட்டிகளை விரட்டுகிறது. மேலும் கால்சியம் சத்தை உறிஞ்சவும் வைட்டமின் டி உதவுகிறது.

க்ரீன் டீ
க்ரீன் டீ
க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது ஆரோக்கியமான கருப்பைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை களையவும் உதவுகிறது. பெண்கள் 8 வாரங்கள் தொடர்ந்து க்ரீன் டீ குடித்து வந்தால் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை குறைத்து விடலாம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளிர்ந்த நீரில் வாழும் மீன்கள்
குளிர்ந்த நீரில் வாழும் மீன்கள்
கானாங்கெளுத்தி மற்றும் சால்மன் போன்ற குளிர்ந்த நீரில் வாழும் மீன்களில் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை பெண் உடம்பில் உள்ள புரோஸ்டாக்லாண்டின் உற்பத்தியை குறைக்க உதவுகிறது. இந்த ஹார்மோன் தான் கருப்பையை வேகமாக சுருங்கி விரிய வைக்கும். இப்படி வேகமாக சுருங்கி விரியும் போது கருப்பை தவறாக மாறக் கூடும்.

எலுமிச்சை
எலுமிச்சை
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. இது நோயெதிப்பு மண்டலத்தை வலுவாக்க பயன்படுகிறது. இந்த வைட்டமின் கருப்பையின் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்கிறது. கருப்பையில் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடுதல், நோய்த்தொற்று போன்றவற்றை தடுக்கிறது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து குடியுங்கள். தினமும் காலையில் குடித்து வாருங்கள். இது உங்கள் கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கீரைகள்
கீரைகள்
கேல் கீரை, கொலார்டு கீரைகள் மற்றும் பசலைக் கீரைகள் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொண்டு வரலாம். இதிலுள்ள அல்கலைன் உங்கள் கருப்பையை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதிலுள்ள மினரல்கள் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவுகிறது. எனவே ஒரு நாளைக்கு 2-4 கப் கீரை டீ குடித்து வாருங்கள். அதே மாதிரி பச்சை காய்கறிகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உங்கள் கருப்பையின் ஆரோக்கியத்திற்கு தேவையான போலிக் அமிலம் போன்றவைகள் உள்ளன. இவை உங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை வளர உதவி புரிகிறது.

நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ் மற்றும் விதைகள் உங்கள் ஹார்மோன்களை சரியான அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. எனவே பாதாம் பருப்பு, ஆளி விதைகள் மற்றும் முந்திரி பருப்பு போன்றவற்றை எடுத்து சாப்பிடுங்கள். இதில் அதிகளவு ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது. இந்த ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் கருப்பை நார்த்திசுக்கட்டிகளை விரட்டுகிறது. நல்ல கொலஸ்ட்ரால் உங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சரியாக பராமரிக்க உதவி செய்யும். இதனால் வளர்ச்சி குறைவான குழந்தைகள் பிறக்காது. குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவி செய்யும்.

விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்
மலச்சிக்கலுக்கு பொதுவாக விளக்கெண்ணெய்யை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இந்த விளக்கெண்ணெய் கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் கருப்பை நீர்க் கட்டிகளை போக்க உதவுகிறது. இதிலுள்ள ரிகோனோலிக் அமிலம் உங்கள் நோயெதிப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது கருப்பை தொற்றுகளை போக்கும்.

மேற்கண்ட உணவுகள் உங்கள் கருப்பையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே உங்கள் உணவுப் பழக்கத்தில் இது போன்ற உணவுகளை சேர்த்து ஆரோக்கியமாக வாழ முற்படுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமாநண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா இதை மென்று தின்றால் ஆண்மை அதிகரிக்குமாம்?

nathan

வீட்டில் போடும் சாம்பிராணியில் இந்த பொருள்களை சேர்ப்பதால் உண்டாகும் பலன்கள் என்ன தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இரவில் பிரியாணி சாப்பிடலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த நேரத்தில் கிரீன் டீ குடிப்பது உங்களுக்கு பல ஆபத்தை ஏற்படுத்தும்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஆரோக்கியமான முறையில் உடற்கட்டை மேம்படுத்துவது எப்படி?

nathan

க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கீழாநெல்லி…!

nathan

தினமும் வெறும் 6 பாதாம்! நீரிழிவு நோயாளிகளுக்கு நிகழும் அதிசயம் -தெரிஞ்சிக்கங்க…

nathan