ிregnant second trimester
மருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!தெரிந்துகொள்வோமா?

இக்காலத்தில் கர்ப்பிணிகள் மனதளவில் அதிகமாக கஷ்டப்பட்டாலும் அது சிசுவை உடனே பாதிக்கும். அதுமட்டுமின்றி, உணவுகளில் கவனமாக இல்லாதது, சரியான நேரத்தில் மருத்துவரை அணுகாதது போன்றவைகளும் கருச்சிதைவை ஏற்படுத்தும். மேலும் வேலை செய்யும் அலுவலகங்களில் ஏதேனும் கெமிக்கலை சுவாசிக்க நேர்ந்தாலும், அதுவும் கருவை பாதிக்கும். மேலும் கடந்த சில வருடங்களாக கருச்சிதைவு ஏற்படுவது அதிகரித்துள்ளது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகளைக் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்தால், கருச்சிதைவைத் தடுக்கலாம்.

வெப்பத்தை தூண்டும் உணவுகள்

உடலின் வெப்பத்தைத் தூண்டும் உணவுகளான பச்சை பேரிச்சை, அன்னாசி, பப்பாளி மற்றும் அளவுக்கு அதிகமான குங்குமப்பூ எடுப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், உடல் வெப்பமானது தூண்டப்பட்டு, கருச்சிதைவு ஏற்படக்கூடும்.

பயணங்களை தவிர்க்கவும்

கர்ப்ப காலத்தில் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். அதிலும் முதல் மூன்று மாத காலத்தில் கரு சரியாக கருப்பையில் சேராமல் இருப்பதால், இக்காலத்தில் பயணங்களை மேற்கொண்டால், அது எளிதில் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். வேலைக்கு செல்லும் பெண்களால் பயணங்களை தவிர்க்க முடியாது தான். ஆனால் மேடு பள்ளங்களாக இருக்கும் பாதைகளில் பயணம் மேற்கொள்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

ஜங்க் உணவுகள்

ஜங்க் உணவுகளில் கெமிக்கல்களான பதப்படுத்தும் பொருட்கள், ப்ளேவர்கள் போன்றவைகள் சேர்த்திருப்பதால், அவற்றை கர்ப்பிணிகள் உட்கொண்டு வந்தால், அவை கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கர்ப்ப காலத்தில் ஜங்க் உணவுகளை தவிர்ப்பது மட்டுமின்றி, நல்ல பிரஷ்ஷான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

தடுப்பூசிகள்

இன்றைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மருத்துவரிடம் போதிய ஆலோசனை பெற்று, கர்ப்ப காலத்தில் போட வேண்டிய தடுப்பூசிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்

மன அழுத்தம் மற்றும் டென்சன் போன்றவை கருச்சிதைவு ஏற்படுவதை அதிகரிக்கும். ஆகவே கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் மனதில் போட்டு கஷ்டப்படுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு தினமும் யோகா, தியானம் போன்றவற்றை செய்து வர வேண்டும்.

Related posts

சில பேர் எவ்வளோ புகைப் பிடிச்சாலும் புற்றுநோய் வராது? அது ஏன்’னு தெரியுமா??

nathan

இதய நலம் காக்க எளிய வழிமுறைகள்

nathan

சிறுநீரக நோயில் இருந்து மீட்க உதவும் சிறப்பான 5 உணவுகள்!!!

nathan

மருத்துவ செய்தி ஆரோக்கியம் தரும் சோளம்

nathan

சூப்பர் டிப்ஸ்! வெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

பெண்களே தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்

nathan

சர்க்கரை நோய் கட்டுக்குள் இல்லையா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள் !

nathan

உங்களுக்கு தெரியுமா குதிரைமுள்ளங்கி வேர்ல இவ்ளோ நோயை குணப்படுத்த முடியுமா?

nathan