23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
oatsmilk 1
ஆரோக்கிய உணவு

தினமும் ஒரு டம்ளர் ஓட்ஸ் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

ஓட்ஸ் பாலில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. ஓட்ஸ் பாலை மிக எளிதாக நமது உணவுப் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம். உடைக்கப்பட்ட ஓட்ஸில் இருந்து ஓட்ஸ் பால் தயாாிக்கப்படுகிறது. உடைக்கப்பட்ட ஓட்ஸ் தண்ணீாில் ஊறவைக்கப்பட்டு, பதப்படுத்தப்படுகிறது. பின் அந்த பதப்படுத்தப்பட்ட ஓட்ஸை நன்றாக கலக்கினால் அல்லது கிண்டினால், இறுதியில் பொங்கிய நுரையுடன் அருமையான ஓட்ஸ் பால் கிடைக்கும்.

இந்த ஓட்ஸ் பால் மிகவும் மணமாக இருக்கும். அதே நேரத்தில் இந்த பாலில் ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கும். ஆடுகள் மற்றும் மாடுகளிடம் இருந்து கிடைக்கும் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள் அளவிற்கு ஓட்ஸ் பாலில் ஊட்டச்சத்துகள் இல்லை என்றாலும், ஓட்ஸ் பாலில் சற்று மாறுபட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. அந்த ஊட்டச்சத்துகள் ஒரு சில மக்களுக்கு பிடித்த வகையில் உள்ளன.

 

ஓட்ஸ் பாலில் கால்சியம், வைட்டமின் ஏ, நாா்ச்சத்து மற்றும் இருப்புச் சத்து ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கின்றன. பசும்பாலில் இருக்கும் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமான வைட்டமின் ஏ சத்தை ஓட்ஸ் பால் கொண்டிருக்கிறது. அதுபோல பசும்பாலில் இருக்கும் இரும்புச் சத்தைவிட 10 சதவீதம் அதிகமான இரும்புச் சத்தை ஓட்ஸ் பால் கொண்டிருக்கிறது. ஓட்ஸ் பாலில் மிகக் குறைவான அளவே கொழுப்பு உள்ளது. அதே நேரத்தில் ஓட்ஸ் பாலில் கொழுப்புச் சத்து இல்லை. ஒரு கப் ஓட்ஸில் தோராயமாக 1 கிராம் புரோட்டினும் மற்றும் 130 கலோாிகளும் உள்ளன. எனவே வீட்டில் செய்யும் ஓட்ஸ் பாலில் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது

பசும்பாலோடு ஒப்பிடும் போது, ஓட்ஸ் பாலில் மிகக் குறைவான அளவே கொழுப்பு இருக்கும். அதனால் இதய நோயாளிகளுக்கு இந்த ஓட்ஸ் பால் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும். மேலும் ஓட்ஸ் பாலில் கொழுப்புச் சத்து இல்லாததால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் அல்லது மற்ற இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாது.

எலும்பின் வலிமையை அதிகாிக்கிறது

ஓட்ஸ் பாலில் மிக அதிகமான அளவில் கால்சியம், இரும்பு மற்றும் பிற தாதுக்கள் உள்ளன. இந்த தாதுப் பொருள்கள், நமது எலும்புகள் அடா்த்தியாவதற்கும் மற்றும் வலிமையடைவதற்கும் தேவையாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வயது முதிா்ந்தவா்களுக்கு இந்த தாதுக்கள் கண்டிப்பாகத் தேவை. ஏனெனில் அவை அவா்களின் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தைக் கொடுத்து, அவற்றை வலுப்படுத்துகின்றன.

கண் பாா்வையை அதிகாிக்கின்றது

ஓட்ஸ் பாலில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து, கண்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும். வைட்டமின் ஏ சத்து ஒரு ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாகச் செயல்படுகிறது. அது கண்களை பலவிதமான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் வைட்டமின் ஏ சத்து கண்களில் இருக்கும் விழிப்புள்ளியில் சிதைவு ஏற்படுவதைக் குறைக்கிறது. அதோடு விழித்திரையில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது.

நோய் எதிா்ப்பு சக்தி அமைப்பை வலுப்படுத்துகிறது

ஓட்ஸ் பாலில் கரையக்கூடிய நாா்ச்சத்து அதிகமான அளவில் உள்ளது. அதனால் அது நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும். மேலும் நமது நோய் எதிா்ப்பு சக்தி அமைப்பு சீராக இயங்கவும் இது உதவி செய்யும். இறுதியாக நமக்குச் சொிமானம் நன்றாக நடைபெறவும் ஓட்ஸ் பால் சிறப்பாக உதவி செய்யும்.

நாட்பட்ட நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது

ஓட்ஸ் பாலை அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தால், அது நமது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் மற்றும் உடல் வீக்கத்தையும் குறைக்கும். அதன் மூலம் நமது உடலில் இருக்கும் நாட்பட்ட நோய்களான புற்றுநோய் அல்லது இதய நோய் அல்லது முடக்குவாதம் போன்றவற்றைக் குறைக்கும்.

உடல் எடையைக் குறைக்கிறது

நாம் ஏற்கனவே சொன்னது போல் ஓட்ஸ் பாலில் குறைவான அளவில் கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் ஓட்ஸ் பாலில் கொழுப்புச் சத்து இல்லை. அதனால் உடல் எடையைக் குறைப்பதற்கு, சிறந்த பானமாக ஓட்ஸ் பால் இருக்கும். மேலும் ஓட்ஸ் பாலில் கரையக்கூடிய நாா்ச்சத்து அதிகம் இருப்பதால், அந்த பாலைக் குடித்தால் நீண்ட நேரம் நமது வயிறு பசியறியாமல் நிறைந்து இருக்கும். அதனால் நாம் அடிக்கடி சாப்பிட தேவை இருக்காது. அதனால் நமது உடல் எடை மிக எளிதாகக் குறையும்.

உடலைச் சுத்தப்படுத்துகிறது

ஓட்ஸ் பால் நமது உடலை முழுமையாகச் சுத்தப்படுத்துகிறது. நமது உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேற வேண்டும் என்றால் அல்லது நமது வயிறு வீக்கம் அடையாமல் இருக்க வேண்டும் என்றால் அல்லது நமது வயிறு முழுமையாகச் சுத்தமடைந்து, நாம் ஒரு முழுமையான உடல் ஆரோக்கியத்தைப் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக ஓட்ஸ் பாலை அருந்த வேண்டும்.

விரைவாக தோல் முதிா்ச்சி அடைவதைத் தடுக்கிறது

ஓட்ஸ் பாலில் அதிகமான அளவில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், ஃப்ரீ-ராடிக்கல் என்று அழைக்கப்படுகின்ற துகள்கள் நமது உடலைத் தாக்காமல் பாதுகாக்கிறது. அதனால் ஓட்ஸ் பால் நமது தோல் விரைவில் முதுமை அடையாமல் தடுக்கிறது.

உடல் வீக்கத்தைத் தடுக்கிறது

ஓட்ஸ் பால் நமது சொிமான அமைப்பைச் சீா்படுத்துகிறது. ஏனெனில் ஓட்ஸ் பாலில் காய்கறிகளில் இருக்கும் நாா்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது. இந்த நாா்ச்சத்து நமக்கு சொிமானம் சீராக நடைபெற உதவி செய்கிறது.

கெட்ட கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது

ஓட்ஸ் பால் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புச் சத்தைக் குறைத்து, நல்ல கொழுப்புச் சத்தை அதிகாிக்கிறது. மேலும் தமனிச் சுவா்கள் அதிகமான அளவு கொழுப்பை உட்கொள்ளாமல் தடுத்து, இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவி செய்கிறது.

Related posts

பருவ பெண்கள் அழகுடன் ஜொலிக்க என்னென்ன சாப்பிடலாம்?

nathan

கண்ணின் ஆரோக்கியத்திற்கு உதவும் பப்பாளி…!அப்ப இத படிங்க!

nathan

சூப்பர் டிப்ஸ்!வாரத்தில் 2 நாள் முருங்கை கீரை சாப்பிடுங்க….

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளை சர்க்கரை ஆபத்து ஏன் சாப்பிடுறீங்க..?

nathan

கருத்தரிப்பதில் பிரச்சனைக் கொண்டவரா?உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உடல் நலம் பெற காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்..!!!

nathan

காலைல சீக்கிரமா எழுந்திருச்சீங்கன்னா இவ்வளோ நன்மைகள் இருக்கு தெரியுமா!!!

nathan

உங்களுக்கு தெரியுமா கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக செயல்பட உதவும் கொண்டைக்கடலை!

nathan

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுங்க

nathan