27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
c8759d
ஆரோக்கிய உணவு

புதினா இலையில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா?தெரிந்துகொள்வோமா?

புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.

 

அதுமட்டுமின்றி இதன் அற்புதமான மருத்துவ பயன்களை உள்ளது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

 

புதினா இரத்தத்தை சுத்தமாக்கும், வாய் துர்நாற்றத்தை நீங்கும், பசியை தூண்டும்.
புதினா அசைவ மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது.
புதினா மலச்சிக்கலை நீக்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.
புதினாவை நீர் சேர்க்காமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால் தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.
புதினாக் கீரையானது மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் புதினா சாற்றை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீர் போல தயார் செய்து குடித்து வர எரிச்சல் குறையும்.
புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்துக் குடித்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
புதினாக்கீரை துவையலை வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயங்களில் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

Related posts

சிகப்பு நிற பழங்களை ஏன் சாப்பிட வேண்டும்?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பித்தம் குறைய வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா பீநட் பட்டரின் ஆரோகிய நன்மைகள்!

nathan

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி!

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க குழந்தை எடை குறைவா இருக்கா? அப்ப இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க…

nathan

சுவையான சத்தான கம்பு லஸ்ஸி

nathan

ஆரோக்கியமற்ற உணவை நிராகரிக்க உங்கள் மூளையை பழக்க இதோ சில வழிகள்!….

sangika

பலாப்பழம் சாப்பிட்டால் உடனே இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

nathan

இதோ மாதம் ஒருமுறை முள்ளங்கி ஜூஸைக் குடிங்க கிடைக்கும் நன்மைகள் !இத படிங்க!

nathan