25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
main
மருத்துவ குறிப்பு

கர்ப்பப்பை கட்டி (fibroids), மற்றும் என்டோமேட்ரியோசிஸ், ஏன் எதனால் எப்படி வருகிற…

இந்திய புள்ளியியல் விபரம்:

• குழந்தையின்மையால் பாதித்த நான்கு இந்தியப் பெண்களில் ஒருவர் முதல் இருவருக்கு என்டோமேட்ரியோசில் உள்ளது
• ஒவ்வொரு மூன்று வினாடிகளுக்கு ஒருமுறை இரு இந்தியப்பெண்ணின் கர்ப்பப்பை அகற்றப்படுகிறது-காரணம்- பைப்ராய்டு கட்டி. 35%இந்திய பெண்களுக்கு இது வரும் (உங்களுக்கு மூன்று பெண்களை தெரியுமானால், அவர்களில் ஒருவருக்கு கண்டிப்பாக வருங்காலத்தில் பைப்ராய்டினால் கர்ப்பப்பையை அகற்றுவார்கள்-இது உறுதி )
• வருடத்திற்கு 1.5லட்சம் இந்திய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருகிறது

பெண்கள் மாதவிடாய் ஆகும் போது ஏற்படும் கழிவு சில சமயம் வெளியேறாமல், கர்ப்பப்பை, பல்லோப்பியன் குழாய், வயிற்றுப்பகுதி போன்ற இடங்களில் தங்கி விட்டால் என்டோமேட்ரியோசிஸ் எனும் பிரச்சினை வரலாம். அவை கர்ப்பப்பை செல்களை போலவே மகளிர் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜஸ்டிரோனுக்கு பணிந்து செயலாற்றும். அதனால் மாதவிடாய் முன்னும் பின்னும் வலி வரக் காரணமாகின்றன. இந்த என்டோமேட்ரியோசிஸ் திசு நம் உள்காயத்தை தூண்டி விடுகிறது மற்றும் இம்யூன் சிஸ்டத்தை தூண்டுகிறது. இதனாலேயே இவர்களுக்கு குழந்தை உருவாவதில்லை.

Fibroid எனப்படும் கர்ப்பப்பை கட்டியின் திசுக்கள், ஈஸ்ட்ரோஜனுக்கு கட்டுப்படும். அதிக ஈஸ்ட்ரோஜன் இருந்தால் பெரிதாகும்.

சில வகையான மார்பக புற்றுநோய்கள், ஈஸ்ட்ரோஜன் அதிகமானால் வளரக்கூடியவை
அதிகமான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை குறைத்து நார்மலாக்கினாலே என்டோமேட்ரியோசிஸ் வராமல் தடுக்கலாம், பைப்ராய்ட் பெரிதாவதை தடுக்கலாம், சில மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.

அதிக ஈஸ்ட்ரோஜன் எப்படி உற்பத்தியாகிறது மற்றும் உற்பத்தியை தடுக்கும் வழிகள்:

1. அதிக இன்சுலின் அளவுகளை குறைத்தல்: மாவுச்சத்து (இட்லி, தோசை, சப்பாத்தி,சாதம் முதலியன) உணவுகள் இரத்தத்தில் க்ளுக்கோஸ் ஆக மாறும்–> இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்–> இன்சுலின் ஆரோமடேஸ் (aromatase) என்சைமை தூண்டும்–> ஆரோமடேஸ் என்சைம், ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை தூண்டும். அதனால் உணவில் மாவுச்சத்தை குறைக்க வேண்டும் (பேலியோ)

2. உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்தால்–>அடிப்போநெக்டின் ஹார்மோன் உற்பத்தி குறையும்–> இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்–> ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கும். அதனால் பேலியோ டயட் மூலம் வெயிட் மற்றும் இன்சுலின் அளவுகளை நார்மல் ஆக்க வேண்டும்

3. ரெகுலர் உணவுகள்–> குண்டாதல்–> கொழுப்பு செல்கள் PGE2 எனும் கெமிக்கலை உற்பத்தி செய்யும்–> PGE2 ஆரோமடேஸ் செயலை அதிகரிக்கும்–> அதிக ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி. அதனால் மாவுச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்

4. மாவுச்சத்து உணவுகள் மூலம் மேலே சொன்னது போல ஈஸ்ட்ரோஜன் அளவுகளை அதிக்ப்படுத்தினாலே போதும்–>அதிக ஈஸ்ட்ரோஜன் அளவுகள்–> இன்ப்லமேஷன் எனும் உள்காயத்தை தூண்டும்–> உள்காயம் ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இது ஒரு தொடர்கதை ஆகிவிடும். அதனால் மாவுச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்

5. பிளாஸ்டிக் மற்றும் பூச்சிமருந்து பயன்பாடு ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கும்

அதிக ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் வழிகள்:

1. உடற்பயிற்சி – இன்சுலின் அளவுகளை குறைத்து நார்மலாக்கி ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை சீராக்க

2. ஒமேகா 3 உணவுகள் அல்லது மாத்திரை-இன்ப்லமேஷன் எனும் உள்காயத்தை குறைக்க

3. காலிபிளவர், புரோக்கொளி, முட்டைக்கோஸ்-ஈஸ்ட்ரோஜனை ஈரல் மூலம் வெளியேற்ற

4. கெபிர் தயிர் அல்லது புளித்த காய்கறி (saurkraut, kimchi), கொம்பூச்சா- சிறுகுடல் கிருமிகளை மேம்படுத்தி ஈச்ட்ரோஜனை வெளியேற்ற

5. கிரின் டி, பூண்டு மற்றும் உணவில் தேவையான புரதம் (பேலியோ)

6. பேலியோ டயட்- இன்சுலின் மற்றும் அடிப்போநெக்டின் வகையறாக்களை சரியான அளவில் வைக்க

மேலே சொன்ன பிரச்சினைகள் வந்தவர்கள் டாக்டரின் மருந்துகளை எடுப்பதுடன் மேலே சொன்ன வழிமுறைகளை பின்பற்றினால் வியாதிகளின் தாக்கம் வெகுவாக குறையலாம்.

Related posts

முட்டுக்கட்டை போட்டும் தயக்கமும், பயமும்

nathan

மாரடைப்பு – இருதய வைத்திய நிபுணர்

nathan

குறைப்பிரசவம் நடக்கப்போகுது என்பதை எப்படி முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்?

nathan

நீரில் சீரகப் பொடியை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

இளம் பருவத்தினரைப் பாதிக்கும் மன அழுத்தம்

nathan

வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்

nathan

உங்களுக்கு ஆண்குழந்தை பிறப்பதற்கான பத்து அறிகுறிகள் தெரியுமா.!

nathan

லவ்வர் வேணுமா… மருந்து சாப்பிடுங்க…

nathan

மார்பகப் புற்றுநோய் ஏற்பட என்ன காரணங்கள் தெரியுமா..?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan