கூந்தல் வளரவில்லையே என அடிக்கடி கவலைப்படுவீர்களா? கவலைப் பட்டால் இன்னும் அதிகம்தான் முடி கொட்டும். ஆகவே கவலையை தூக்கி வீசிவிட்டு எப்படி கூந்தலை வளர்க்கலாம் என பாருங்கள்.
அந்த காலத்தில் சீகைக்காய் அரப்பு தவிர வேறெதுவும் உபயோகித்ததில்லை நம் பாட்டிக்கள். இன்று நேரமில்லை என சோம்பல் பட்டுக் கொண்டு ஷாம்பு உபயோகிக்கிறோம். ஷாம்பு உபயோகிப்பதில் தவறில்லை.ஆனால் வாரம் ஒரு ஷாம்பு, கண்ணில் தோன்றும் விளம்பரங்களில் வரும் ஷாம்புக்களை எல்லாம் வாங்கி உபயோகித்தால் அது தவறு. தரமான ஒரே பிராண்ட் ஷாம்பு உபயோகிக்கலாம்.
அதுவும் தாண்டி இன்னும் எப்படி கூந்தல் வளர்ச்சியை பெறலாம் எனக் கேட்டால் சீகைக்காயை உபயோகிக்கலாம். சீகைக்காயை வெறுமெனே உபயோகித்தால் கூந்தலில் வறட்சி ஏற்படும். ஆகவே அதனை பல மூலிகைகள் கலந்து உபயோகியுங்கள். அதற்கான சில டிப்ஸ் உங்களுக்காக. செய்முறைகள் மிக எளிமையே. பலன் நீங்கள் ஆச்சரியப்படும் வகையில்.
சீகைக்காய் ஷாம்பு : சீகைக் காய் மற்றும் நெல்லிக்காய் பொடியை சம அளவு எடுத்து வெதுவெதுப்பான நீர் ஊற்றி நன்றாக கலக்குங்கள். இதனை 10 நிமிடம் அப்படியே ஊற விடவும். பின்னர் அதனை தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.
சீகைக்காய் மாஸ்க் : தேவையானவை : சீகைக்காய் – 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட் – 1 டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி – அரை டீஸ்பூன்
எல்லாவற்றையும் நன்றாக கலந்து தலையில் ஸ்கால்ப்பிலிருந்து நுனி வரை தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.
சீகைக்காய் டோனர் : சீகைக்காய் – 1 டீஸ் பூன் மஞ்சள் – ஒரு சிட்டிகை வேப்பிலைபொடி – 1 டீஸ்பூன் புதினா எண்ணெய் – 5 துளிகள்
சீகைக்காய் பொடியில் மஞ்சள், புதினா எண்ணெய் மற்றும் வேப்பிலைப் பொடி கலந்து முடியின் வேர்க்கால்களில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து தலையை அலசுங்கள். இதனால் பொடுகு, காயம், தொற்று ஆகியவை நீங்கி, கூந்தலின் வேர்க்கால்கள் புத்துயிர் பெறும். வளர்ச்சியை தூண்டும்
அடர்த்தியை தரும் மூலிகைப் பொடி : தேவையானவை : சீகைக்காய் பொடி- 200 கிராம் பூந்திக் கொட்டை – 100 கி(பொடித்தது) வெந்தயப் பொடி – 100 கி கருவேப்பிலை – கையளவு துளசி இலை – கையளவு.
மேலே கூறிய எல்லா பொருட்களையும் இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். அவை மொறுமொறுப்பான பிரவுன் நிறத்திற்கு மாறும். இவற்றை பின்னர் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு காற்று பூகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும். இந்த மூலிகைப் பொடியை தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அதில் நீர் கலந்து தலையில் தடவிக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து தலை முடியை அலசவும். வாரம் இருமுறை உபயோகித்தால் வேகமாக பலன் கிடைக்கும்.
சீகைக்காய் நீர் : 2 கப் நீரில் 2 ஸ்பூன் க்ரீன் டீயை கலந்து கொதிக்க விடுங்கள் நன்றாக கொதித்ததும் அதில் சீகைக்காய் 2 டீஸ்பூன் சேர்க்கவும். அடுப்பை குறைவான தீயில் வைத்திடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். இதனை வடிகட்டி, தலைக்கு குளிக்கும்போது கடைசியாக இந்த நீர் கொண்டு அலசவும். கூந்தல் பளபளக்கும். மென்மையாக மாறும்,