26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
10
வீட்டுக்குறிப்புக்கள்

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்? பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதாமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப் பெட்டியான “பிரிட்ஜ்” என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம். இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும்.ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்த தகவல் இதோ, முதலில் பழங்களிலிருந்து ஆரம்பிக்கலாம்:

ஆப்பிள்: இதை குளிர்சாதன பெட்டியில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம். வாழைப்பழம் வெளியில் வைத்திருக்கலாம். பச்சை நிறம் நீங்கி 3 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. திராட்சை இதனை பிரிட்ஜில் கழுவாமல் வைத்திருந்து 6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும், ஆரஞ்சு, கமலா, கிரேப் ஃ புரூட், இதனை 2 வாரங்கள் பிரிட்ஜில் வைக்கலாம் பைனாப்பிள் – நன்கு பழுத்த பிறகு பிரிட்ஜில் 3 – 5 நாட்கள் தர்பூசணி துண்டு – பிரிட்ஜில் 6 – 8 நாட்கள் வைக்கலாம் எலுமிச்சை- இரண்டு வாரம் வைக்கலாம் பெர்ரி பழ வகைகள்- பிளாஸ்டிக் பையில் போட்டு 2-3 நாட்கள் வைக்கலாம். பேரிக்காய், சப்போட்டா, கொய்யா போன்றவைகள் – பழுக்கும்வரை வெளியில் வைத்திருந்து பிறகு பிரிட்ஜில் 3 -5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒரு மாதம் சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் அன்னாசி (முழுசாக) 1 வாரம் (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் காய்கறிகள்: பீன்ஸ்- இதை நன்கு கழுவி, பிரிட்ஜில் வைத்திருந்து 3 – 5 நாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும். கத்தரிகாய்- இதை வெளியிலும் வைக்கலாம், பிரிட்ஜில் வைப்பதானால் பிளாஸ்டிக் பையில் போட்டு 3 -4 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

தக்காளி- வெளியில், பிரிட்ஜ் இரண்டு இடத்திலும் வைக்கலாம் ஆனால் ஒரு வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். கேரட்- நன்கு கழுவி, தலைப்பாகத்தை நீக்கிவிட்டு பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் இரண்டு வாரம் வைத்திருக்கலாம். பீட்ருட்- இரண்டு வாரம் வைத்திருக்கலாம். காலிபிளவர், முள்ளங்கி– இரண்டு வாரம் பிரிட்ஜில் வைத்திருக்கலாம். வெண்டைக்காய்- 5 – 7 நாட்கள் பிரிட்ஜில் வைக்கலாம் உருளைக்கிழங்கு- வெளியில் காற்றோட்டமான இடத்தில் இரண்டு மாதம் வைக்கலாம் வெங்காயம்- வெளியில் காற்றோட்டமான இடத்தில் ஒரு மாதம் வைக்கலாம் குடமிளகாய்- நன்கு கழுவி உலர்த்திய பிறகு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு வாரம் வைக்கலாம்.

கீரைவகைகள்- பிளாஸ்டிக் பையில் 3 – 5 நாட்கள் வைக்கலாம். முட்டகோஸ், செல்லரி,- பிளாஸ்டிக் பையில் 2 வாரங்கள் வைக்கலாம். புரோக்லி, மஷ்ரும் – அதிகபட்சம் 2 -3 நாட்கள் வைக்கலாம். பூசனிக்காய், வெள்ளரிக்காய் – ஒரு வாரம் வைக்கலாம். புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வெள்ளரிக்காய் ஒரு வாரம் தக்காளி 1-2 நாட்கள் காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் காளான் 1-2 நாட்கள் அசைவ உணவுகள்:

முட்டை- பிரிட்ஜில் 3 -5 வாரங்கள் வைக்கலாம் அல்லது காலாவதியாகும் நாட்களுக்குள் பயப்னடுத்துவது நல்லது. வேக வைத்த முட்டை- பிரிட்ஜில் 5 -6 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். முட்டை வெள்ளைகரு- பிரிட்ஜில் 2 -3- நாட்களுக்குள் முட்டையின் மஞ்சட் கரு- 2 -4 நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். பிரஷ் சிக்கன், தோல் நீக்காதது – 1 – 2 நாட்கள் வைத்திருக்கலாம். பிரஷ் மட்டன், பீஃப் – 1 -3 நாட்கள் வைக்கலாம். மீன்- 1 – 2 நாட்கள் வைக்கலாம். மீன் க்பிள்ளட்ஸ்/ துண்டுகள்- நான்கு நாட்கள் வைக்கலாம். எறா, நண்டு – பிரிட்ஜில் இரண்டு நாட்கள் வைக்கலாம். சமைத்த இறைச்சி- நான்கு நாட்களுக்குள் பயன்படுத்திவிட வேண்டும். ஃ பிரீசரில் வைப்பதானால் நான்கு மாதங்கள் வரை வைக்கலாம். வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் சமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்கள் ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள் பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள் உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம் பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள் சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள் பால் பொருட்கள்: மற்றபடி பால். தயிர், வெண்ணெய் போன்ற டெயிரி/dairy பொருட்களை அவைகள் காலாவதியாகும் நாட்களை கவனித்து வாங்கி அதற்குள் பயன்படுத்திடுவது நல்லது. மேலும் அவைகளை நமது குடும்பத்தின் தேவைக்கேற்ற அளவில் வாங்குவது பண விரயத்தையும் தடுக்கும்.

பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள் மோர் 2 வாரங்கள் தயிர் 7-10 நாட்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம். இதனால், பணம் வீணாவதும் தவிர்க்கப்படும்.
10

Related posts

இந்த இயற்கை சாம்பிராணி உங்க வீட்ல வச்சா டெங்கு வராது தெரியுமா!!தெரிஞ்சிக்கங்க…

nathan

டெலிவிஷன் எது ரைட் சாய்ஸ்?

nathan

டைல்ஸ் கறையை போக்கி பளபளவென்று புதிது போல ஆக்க என்ன செய்ய வேண்டும்?

nathan

நம்ம இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் வினோத ஆசைகள்!!!

nathan

மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க டிப்ஸ்.

nathan

உங்க குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பெண்கள் கடைபிடிக்க சில முக்கிய விஷயங்கள்!

nathan

டிப்ஸ்.. சுலபமான முறையில் சாம்பார் பொடி செய்ய….!!

nathan

பணியிடத்தில் வரும் தூக்கத்தைத் தடுப்பது எப்படி?

sangika

குடும்ப தலைவிகளுக்கு சிறந்த ஆலோசனைகள்!…

sangika