இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி கூறப்படும் நிலையில், கருடபுராணத்தில் ஒரு மனிதனின் வறுமையை கொண்டு வரும் சில பழக்கங்களை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கருட புராணத்தின் படி செய்யக்கூடாத தவறுகள்
கருட புராணத்தின் படி, அழுக்கு ஆடைகளை அணிபவர் அன்னை மகாலட்சுமியை கோபப்படுத்துகிறார் என கூறப்படுகிறது. அன்னை லட்சுமிக்கு சுத்தம் என்பது மிகவும் பிடிக்கும் மேலும் சுத்தமாக இருக்கும் வீட்டிலேயே வசிக்க விரும்புவாராம்.
பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள் மற்றவர்களை மதிக்காமல் உதாசினப்படுத்தினால், அவர்கள் வீட்டில் லட்சுமி வாசம் செய்வதில்லையாம்.
மேலும் உழைக்காமல் சோம்பேரியாக இருப்பவர்களை மகாலட்சுமி விரும்புவதில்லையாம்.
இந்த உணவிற்கு நீங்கள் அடிமையா? புற்றுநோய் வரலாம் ஜாக்கிரதை
அதே போன்று எந்தவொரு வேலையும் செய்யாமல் நேரத்தினை வீணடிப்பவர்கள் தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாவார்கள். இவர்கள் வாழ்வில் வறுமை வந்துகொண்டே இருக்கும் என்று கருட புராணத்தில் கூறப்படுகின்றது.
தனது தவறை கண்டுகொண்டு திருத்தாமல், மற்றவர்களின் குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டும் நபர்களுக்கு வாழ்வில் ஏழ்மை வந்து சேருமாம்.