27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
48b4ecdb7b
முகப் பராமரிப்பு

பழங்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வது எவ்வாறு….?தெரிந்துகொள்வோமா?

பழங்களினால் ஃபேஷியல் செய்யும்போது பக்கவிளைவுகள் வராது என்ற நம்பிக்கை கிடைக்கிறது. குறிப்பாக கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்களில் நிறைய நன்மைகள் உண்டு.

பன்னீர் திராட்சையை விதையோடு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து 2 நாட்கள் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். 2 நாட்களுக்கு பிறகு திறந்து பார்த்தால் மெல்லிய வெள்ளை ஏடு படிந்திருக்கும். இதற்கு Alpha Hydroxy Acid (AHD). என்று பெயர். அதை நன்றாக கலக்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு சின்ன பாட்டிலில் ஊற்றி எடுத்துக் கொண்டு பஞ்சினால் முகம், கழுத்துப்பகுதிகளில் தடவி 10 நிமிடம் வைத்துவிட்டு, தண்ணீரால் முகத்தை கழுவலாம்.

AHD வெயிலினால் ஏற்படும் கருமையை நீக்கி முகத்திற்கு நல்ல பொலிவைக் கொடுக்கும்.
திராட்சைச் சாறுடன் அரிசி மாவு கலந்து முகத்திற்கு அப்ளை செய்யும்போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் நீங்கி, முகம் பளிச்சென்று ஆகும்.பட்டர் ஃப்ரூட் என்று சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன் சிறிது வெண்ணெய், தேன் கலந்து முகத்தில் தடவுவதால், முகத் தோலில் உள்ள வறட்சி நீங்கி, தோலின் முதுமைத் தன்மையைக் குறைக்கும். வாழைப் பழத்தின் தோல் மிகவும் நல்லது.

வாழைப்பழத்தோலை ஒட்டியிருக்கும் சதைப்பகுதியுடன், 10 சொட்டு கிளிசரின், கால் டீஸ்பூன் சர்க்கரை கலந்து தோலை அப்படியே முகத்தில் வைத்து தடவி 5 முதல் 10 நிமிடம் வைக்க வேண்டும். இந்த வாழைப்பழ ஃபேஷியல் இறந்த செல்களை நீக்கி, நிறத்தை அதிகப்படுத்தக் கூடியது.

அடுத்து ஸ்ட்ராபெர்ரியில் என்சைம்கள் அதிகம் உள்ளது. இவை இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்டாக செயல்படுகிறது. ஸ்ட்ராபெர்ரியை மிக்சியில் அரைத்து 10 சொட்டு தேன், மக்காச்சோள மாவு கலந்து முகத்தில் போடும்போது நல்ல பலன் கிடைக்கும்.
தர்ப்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி, உலோக வடிகட்டியில் போட்டு கரண்டி வைத்து மசித்தால் கிடைக்கும் சாறு 10 மிலி, சாத்துக்குடி சாறு 10 மிலி, இத்துடன் ஜவ்வரிசி மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகம் கழுத்திற்கு தடவினால் நல்ல பளபளப்பையும் கொடுக்கும்.

Related posts

முகப்பொழிவு தரும் துவரம்பருப்பு

nathan

பெண்களே கண்டதை முகத்துக்கு போடாம அழகை அதிகரிக்கணுமா?

nathan

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா தேவையற்ற முடிகளை ஷேவ் செய்வதால் ஏற்படும் விளைவுகள்…!!

nathan

வீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ்

nathan

பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள்!…

sangika

beauty tips? முக அழகிற்கு ஆரஞ்சு தோல் எவ்வாறு பயன்படுகிறது தெரியுமா…?

nathan

உதடுகளை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika