28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sura puttu 26 1451126662
அசைவ வகைகள்

சுறா புட்டு

இதுவரை மீனைக் கொண்டு குழம்பு, வறுவல் என்று தான் சமைத்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் புட்டு செய்து சுவைத்ததுண்டா? அதிலும் சுறா மீனைக் கொண்டு புட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். குறிப்பாக இது வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் அளவில் இருக்கும்.

சுறா புட்டு ஹோட்டல்களில் அதிகம் கிடைக்காது. ஆனால் அதை வீட்டிலேயே எளிமையாக செய்து சாப்பிடலாம். இங்கு சுறா புட்டு ரெசிபியை வீட்டிலேயே எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

sura puttu 26 1451126662
தேவையான பொருட்கள்:

சுறா மீன் – 250 கிராம்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

புட்டு செய்வதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மற்றும் 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, அதில் மீன் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி மீன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மீன் நன்கு குளிர்ந்ததும், அதன் மேல் உள்ள தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

எண்ணெய் போதவில்லையெனில், சிறிது எண்ணெய் ஊற்றிக் கொண்டு, பின் அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு மசாலா மீனில் சேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுறா புட்டு ரெடி!!!

Related posts

செட்டிநாடு ஸ்டைல் இறால் குழம்பு

nathan

செட்டிநாடு எலும்பு குழம்பு

nathan

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

nathan

தக்காளி மீன் வறுவல்

nathan

கிராமத்து வறுத்தரைச்ச மீன் குழம்பு

nathan

சூப்பரான மட்டன் கொத்துகறி அடை செய்வது எப்படி

nathan

சூப்பரான கேரளா ஸ்டைல் சிக்கன் கட்லெட்

nathan

எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.

nathan

சிக்கன் குழம்பு: பேச்சுலர் ஸ்பெஷல்

nathan