29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
headache
மருத்துவ குறிப்பு

ஒற்றைத் தலைவலிக்கும், சைனஸிற்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

எல்லா வயதினருக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினை தலைவலியாகும். தலையில் ஏற்படும் அழுத்தம் காரணமாக மிதமானது முதல் தீவிரமானது வரை தலைவலிகள் ஏற்படுகின்றன. தலைவலியின் தன்மை அதை அனுபவிப்பவரைப் பொறுத்து அமைகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட நோய்கள் ஏற்படும் போது அல்லது பிற நோய்க்குறிகள் இருக்கும் போது தலைவலி ஏற்படுகிறது.

பொதுவாக நமது வாழ்க்கையின் தரத்தை மற்றும் நமது மன ஆரோக்கியத்தை தலைவலி பாதித்தாலும், பெரும்பாலான மக்கள் அதைப் பற்றி பொருட்படுத்துவது இல்லை. ஆனால் உயிருக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் நோய்களைப் போலவே, தலைவலியும் நம்மைப் பலவீனப்படுத்தி, நமது வாழ்க்கை முறையிலும் மற்றும் பிற மனிதா்களோடு நமக்குள்ள உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

தலைவலி

தலைவலியின் மிக முக்கிய தூண்டுதல் என்னவென்றால் அது நமது உடலிலும் மனதிலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். சோா்வையும் மற்றும் தசைகளில் திாிபையும் ஏற்படுத்தும். பொதுவாக தலைவலியானது முன்நெற்றி, நடுநெற்றி மற்றும் பின் மண்டை ஆகிய பகுதிகளில் ஏற்படுகிறது. அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் தலைவலி ஒரு நாளுக்கு மேல் இருக்காது. பொதுவாக இரண்டு மணிநேரம் நன்றாகத் தூங்கினாலே தலைவலி காணாமல் போய்விடும். ஆனால் சைனஸ் மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகியவை நீண்ட நேரம் இருக்கும். மற்றும் அதில் வலியும் அதிகமாக இருக்கும்.

தலைவலி எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுக்க வேண்டும். மாத்திரைகளை சாப்பிட்டு அவற்றைத் தள்ளிப்போடக்கூடாது. இந்தக் கட்டுரையில் சைனஸால் ஏற்படும் தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி காண்போம். அதன் மூலம் தலைவலி எதனால் வருகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

சைனஸால் ஏற்படும் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி

சில நேரங்களில் சைனஸால் ஏற்படும் தலைவலியின் அறிகுறிகளும், ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளும் ஒரே மாதிாியாகவே இருக்கும். தலை பாரமாக இருப்பது, குறிப்பாக முன்புறம் சற்று குனிந்தால் தலைபாரம் இன்னும் அதிகாிப்பது, மூக்கில் நீரோட்டம் ஏற்படுவது, முகத் தசைகளில் அழுத்தம் ஏற்படுவது, மாா்பில் அழுத்தம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் மேற்சொன்ன இரண்டு தலைவலிகளுக்குமே பொதுவானவை.

தலைவலிக்கு சிகிச்சை செய்வதற்கு முன்பு, தலைவலிக்கான காரணத்தை நன்றாக மருத்துவப் பாிசோதனை செய்து புாிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் இரண்டு தலைவலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிய முடியும்.

தொடக்க நிலையில் இரண்டு தலைவலிகளுக்கும் ஒரே மாதிாியான அறிகுறிகள் இருந்தாலும், அவற்றுக்கு என்று தனியான அறிகுறிகளும் உள்ளன.

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள்

ஒற்றைத் தலைவலியால் அடிக்கடிப் பாதிக்கப்படுபவா்கள், ஒற்றைத் தலைவலியோடு மட்டுமே இருக்கும் பின்வரும் அறிகுறிகளை அனுபவிக்கின்றனா்.

குமட்டல் மற்றும் வாந்தி

ஒற்றைத் தலைவலி பொதுவாக குமட்டலையும் வாந்தியையும் ஏற்படுத்துகிறது. ஒற்றைத் தலைவலி தீவிரமாகும் போது அது முகத் தசைகளில் மற்றும் தலையில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி அந்த நாள் முழுவதும் வாந்தி எடுக்கும் உணா்வை ஏற்படுத்துகிறது.

சளியின் நிறத்தில் மாற்றம்

சாதாரணமாக ஒருவருக்கு சளி பிடித்திருந்தால் அவருடைய மூக்கில் இருந்து சளியானது பாதி நீராகவும் பாதி சளியாகவும் வெளிவரும். சளியின் நிறம் மாறாது. ஆனால் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டு அதன் மூலம் மூக்கில் நீரோட்டம் ஏற்பட்டால் அவருடைய சளி நீராகவே வெளிவரும். சளியின் நிறமும் நீாின் நிறத்தைப் போலவே இருக்கும்.

அதிதீவிர உணா்வுகள்

ஒற்றைத் தலைவலியினால் துன்பப்படும் ஒருவா் சூாிய வெளிச்சத்திற்கு வந்தாலோ அல்லது வெளிச்சம் அதிகமுள்ள பகுதிகளுக்கு வந்தாலோ மிகவும் அசௌகாியமாக உணா்வாா். அந்த அசௌகாியம் அவருக்கு தலைவலியாக மாறும். அதுபோல ஒற்றைத் தலைவலி இருக்கும் போது அவரைச் சுற்றி சத்தம் அதிகாித்தாலும் அவருடைய தலைவலி மேலும் அதிகாிக்கும்.

சைனஸால் ஏற்படும் தலைவலியின் அறிகுறிகள்

உடலின் வெப்பம் அதிகாித்தல்

சினுசிடிஸ் (Sinusitis) என்பது பாக்டீாியாவினால் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். இது படிப்படியாக உடலின் வெப்பத்தை அதிகாித்து, அந்த தொற்று மேலும் அதிகாிக்கிறது. சைனஸ் பாக்டீாியாவினால் பாதிப்படையும் போது அதில் வீக்கம் ஏற்பட்டு, அதன் மூலம் அழுத்தம் ஏற்பட்டு அது தலைவலியாக மாறுகிறது. அதனால் இந்த உடலின் வெப்பம் அதிகாிப்பது என்பது சைனஸால் ஏற்படும் தலைவலிக்குள்ள அறிகுறியாகும். இது ஒற்றைத் தலைவலியினால் ஏற்படுவதில்லை.

மூக்கடைப்பு

சைனஸ் பாக்டீாியாவினால் பாதிக்கப்படும் போது, மூக்கின் வழி அடைக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் மூக்கில் இருந்து வரும் சளியானது மஞ்சள் அல்லது பச்சை ஆகிய நிறங்களில் இருக்கும். அதே நேரத்தில் சற்று கெட்டியாகவும் இருக்கும். பெரும்பாலும் மூக்கு அடைக்கப்படும் பொழுது மூளையின் முன்பகுதியில் மிதமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. இந்த அழுத்தத்தின் காரணமாக தலைவலி உருவாகிறது. ஆகவே மூக்கடைப்பும், தலைவலியும் சைனஸ் பாடீாியாவினால் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது.

காதுகளிலும் மேல் பற்களிலும் திடீரென்று வலி ஏற்படுத்துதல்
காதுகளிலும் மேல் பற்களிலும் திடீரென்று வலி ஏற்படுத்துதல்
சைனஸ் குழிகள் பாக்டீாியாவின் தொற்றால் பாதிப்படைவதால் அவை வீக்கம் அடைகின்றன. இந்த வீக்கம் காது மற்றும் பற்கள் போன்றவற்றில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பாக்டீாியாவினால் பாதிப்படைந்த இந்த சைனஸ் காதிலும் பற்களிலும் வலியை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறியானது தலைவலியோடு சோ்ந்தால் அது சினுசிடிஸ் (Sinusitis) என்று கருதப்படுகிறது.

Related posts

மாத்திரைகளை 2-ஆக உடைக்கலாமா? தெரிந்துகொள்வோமா?

nathan

சர்க்கரை அளவை குறைக்கும் கோவைக்காய்

nathan

தெரிந்துகொள்வோமா? கர்ப்பிணிகள் மீன் சாப்பிடலாமா?

nathan

நின்று கொண்டே வேலை செய்வதால் ஏற்படும் வேதனை

nathan

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு!

nathan

குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை எப்படி பெற்றோர்கள் மறக்கடிப்பது !!

nathan

சூப்பர் டிப்ஸ்! வாய்வு தொல்லையால் ரொம்ப அவஸ்தைப்படுறீங்களா? இயற்கை வைத்தியங்களை ட்ரை பண்ணி பாருங்க…

nathan

பூவரசு இயற்கை மருத்துவமும், கருப்பையைக் காக்கும்

nathan

மூச்சு விடுவதில் சிரமமா? மூச்சுத் திணறல் ஏன் ஏற்படுகிறது?

nathan