Other News

நள்ளிரவில் மர்மமாக தலைதெறிக்க ஓடும் சிறுவன்! நீங்களே பாருங்க.!

இளைஞர் ஒருவர் வேலைமுடிந்து நள்ளிரவில் தினமும் 10 கி.மீற்றர் ஓடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வேலைமுடிந்து ஓட்டம்
உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா(19). இவர் நொய்டா செக்டார் 16 பகுதியில் உணவகம் ஒன்றில் வேலை சென்று வருகின்றார். இவரது வீட்டிற்கும் வேலை பார்க்கும் இடத்திற்கும் 10கிமீற்றர் தூரம் உள்ளது.

இவர் மற்றவர்களை போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தாமல், பணி முடிந்ததும் நொய்டா சாலையில்10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகின்றார்.

 

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம்

தயாரிப்பாளர் சந்திப்பு
இதனை நெடுநாளாக பட தயாரிப்பாளர் வினோத் காப்ரி கவனித்துவந்த நிலையில், நேற்றைய தினம் பிரதீப்பை அழைத்து வீட்டில் சென்றுவிடுவதாக கூறியுள்ளார்.

ஆனால் குறித்த சிறுவன் தனது ஓட்டத்தை நிறுத்தாமல் உதவி எதுவும் வேண்டாம் என்று வியர்க்க வியர்க்க ஓடிக்கொண்டுள்ளார்.

ஓடிக்கொண்டிருந்த சிறுவனிடம் எதற்காக இவ்வாறு ஓடுகிறாய் என்று தான் காரில் பயணித்துக் கொண்டே கேட்டுள்ளார். அதற்கு சிறுவன் கூறிய பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

 

சிறுவனின் பதில்
பிரதீப் கூறும்போது, காலையில் தன்னால் பயிற்சி மேற்கொள்ள முடியாது. ஏனெனில் தினமும் காலை 8 மணிக்கு எழுந்து, பணிக்கு செல்வதற்கு முன் உணவு சமைக்க வேண்டும் என கூறுகிறார். இந்த பயிற்சி ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க மேற்கொள்கின்றார்.

தனது தாய் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், இளைய சகோதரர் ஒருவரும் இருப்பதாக கூறியுள்ளார்.

குறித்த காணொளி வைரலாகிவிடும் என்று இயக்குனர் கூறியதற்கு, சிறுவன் வைரலானால் பரவாயில்லை என்றும் நான் தவறு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

மூன்றாவது முறையாக பிரபல இயக்குனர் அவரை இரவு சாப்பாட்டிற்கு அழைத்த போது, உதவியை மறுத்த சிறுவன் தனது சகோதரர் பசியோடு இருப்பார் என்று கூறி தனது ஓட்டத்தினை நிறுத்தாமல் சிறுவன் மேற்கொண்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி, அதனை 40 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். இந்த வயதில், குடும்ப சுமையை ஏற்று கொண்டு, இலட்சிய நோக்குடன் ஓடி கொண்டிருக்கும் பிரதீப்புக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button