26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் நன்கு வளர என்ன செய்யலாம்?

1382819_538587316222569_243594936_n♣ தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.

♣ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.

♣ சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்சவேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.

♣ நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.

♣ தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

♣ வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.

♣ கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

♣ ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி / செம்பரத்தை பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.

♣ கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். தேங்காய் எண்ணெயில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.

♣ கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். ஆகவே வாரம் 1-2 முறை விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.

Related posts

உங்க முடி பொலிவாகவும் அடர்த்தியாகவும் வளர குப்பைமேனி டோனர் தயாரிப்பது எப்படி?

nathan

கூந்தலுக்கு ஹேர் கலரிங் செய்யும் போது கவனிக்க வேண்டிவை

nathan

இவைகளும் உங்கள் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணம் என்பது தெரியுமா?

nathan

நரைமுடியை தங்க நிறமாக மாற்றும் எலுமிச்சை சாறு-ஈஸி டிப்ஸ்

nathan

அழகு குறிப்புகள்:முடிக்கு முக்கியத்துவம் தர்றீங்களா?

nathan

சூப்பர் டிப்ஸ் ! பெண்களின் தலை முடியின் வளர்ச்சி உதவும் கற்றாழை எண்ணெய்…!!

nathan

நரை முடியை தடுக்கும் கடுகு எண்ணெய்

nathan

முடி உதிர்வை தடுத்து, புதிய முடிகளை வளர செய்ய கொய்யா இலைகளை இப்படி பயன்படுத்துங்கள்!

nathan

பொடுகை நீக்க சில டிப்ஸ்…

nathan