தலைமுடி சிகிச்சை

இளநரையை போக்கும் அழகு குறிப்புகள்…!

வழுக்கைத் தலையில் முடி வளர: கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும், முடியும் வளரும். முடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் முடி வளர நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவாலாம். முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க பிஞ்சு ஊமத்தின் காயை அரைத்து பூசினால் புது முடி முளைக்கும். முடி வளர: முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும். சொட்டைத் தலையில் முடி வளர: பூசணி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும்.

a58bbecead31b3dbd60a912556084e71

முடி உதிர்வு: இரும்பு வாணலியை அடுப்பில் வையுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் 1 கப் கரிசலாங்கண்ணி சாறை அதில் ஊற்றுங்கள். ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அனைத்து விடுங்கள். செய்முறை இப்போது இதனுடன் 2 கப் தேங்காய் எண்ணெய், 2 ஸ்பூன் பட்டை பொடி, 5 ஸ்பூன் காய்ந்த ரோஜா இதழ்களை சேருங்கள். செய்முறை: இந்த எண்ணெயை தினமும் தடவி வர, முடி கொட்டுவது நின்று நன்றாக வளரத் தொடங்கும்.

பள்ளி செல்லும் குழந்தைகள் எனில், தினமும் 2 துளி எண்ணெய் தடவினாலே போதும். இளநரை மறைய: தேவையானவை: மருதாணி இலை 1 கப், கொட்டை நீக்கிய பெரிய நெல்லிக்காய் -5, முழு சீயக்காய் -4, சுத்தம் செய்த புங்கங்கொட்டை -1, கரிசலாங்கண்ணி- 4 ஸ்பூன் செய்முறை மேலே குறிப்பிட்ட பொருட்களை முந்தைய நாள் இரவே ஊற வையுங்கள். மறுநாள் இவற்றை அரைத்து விழுதாக்குங்கள். இதைத் தலைக்கு பேக் ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே அலசுங்கள். செய்முறை: வாரம் ஒரு முறை இந்த குளியல் போட்டால் நரை முடி அத்தனையும் கருப்பாகிவிடும். அடுத்த இளநரையும் வராது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button