29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
fruits1 16
ஆரோக்கிய உணவு

உடல் எடையைக் குறைக்க ட்ரை பண்றீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

இன்று ஏராளமான மக்கள் தங்களின் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எடையைக் குறைப்பதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். அதுவும் டயட்டுடன், உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். இதனால் பல நேரங்களில் எடையைக் குறைக்க முயலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உடற்பயிற்சியுடன், டயட்டையும் தொடங்குகிறார்கள். ஆனால் 10 நாட்களுக்குப் பிறகு அது முடியாமல் பழையவாறு மாறிவிடுகிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க டயட் மற்றும் உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம். எடுத்த உடனேயே கடினமாக முயற்சிக்காமல், படிப்படியாக ஆரம்பிக்க வேண்டும். முக்கியமாக உடல் எடையைக் குறைக்க முயலும் போது, முதலில் உடல் எடையை அதிகரிக்கத் தூண்டும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாக டயட்டின் போது ஃபுரூட் சாலட் சாப்பிடுவார்கள். அந்த ஃபுரூட் சாலட் தயாரிக்க தேவையான பழங்கள் பார்த்து கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் சில பழங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். ஆனால் பல பழங்களில் கலோரிகள் அதிகமாக இருக்கும். அந்த மாதிரியான கலோரி அதிகம் நிறைந்த பழங்களை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் அது எடை இழப்பிற்கு சற்று உதவியாக இருக்கும். இப்போது எடையைக் குறைக்க வேண்டுமானால் எந்த பழங்களை சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம்.

அன்னாசிப்பழம்

அன்னாசி மிகவும் ஆரோக்கியமான பழம் தான். ஆனால் எடையைக் குறைக்க நினைப்போர் இப்பழத்தை சாப்பிடக்கூடாது. இயற்கையாகவே அன்னாசி மிகவும் இனிப்பானது. இதில் உள்ள கலோரிகளால் உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஆகவே இந்த பழத்தை அதிக உடல் பருமனைக் கொண்டவர்கள் உட்கொள்ளக்கூடாது.

அவகேடோ

பொதுவாக உடல் எடையைக் குறைக்கும் போது அதிக கலோரி நிறைந்த பழங்கள் மற்றும் பிற உணவுகளை உட்கொள்ளக்கூடாது. அவகேடோ பழத்தில் கலோரிகள் அதிகம் உள்ளன. ஒரு 100 கிராம் அவகேடோ பழத்தில் 160 கலோரிகள் உள்ளன. அவகேடோ பழத்தில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் வளமான அளவில் உள்ளது. ஆகவே இப்பழத்தை சாப்பிடுவதாக இருந்தால், குறைவான அளவில் சாப்பிடுங்கள்.

திராட்சை

திராட்சையில் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. ஆகவே நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, மிகக்குறைவான அளவிலேயே திராட்சையை சாப்பிட வேண்டும். 100 கிராம் திராட்சையில் 67 கலோரிகள் மற்றும் 16 கிராம் சர்க்கரை உள்ளது. ஆகவே நீங்கள் டயட்டில் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிடுவது உங்கள் எடை இழப்பு திட்டத்தில் இடையுறை ஏற்படுத்தலாம்.

வாழைப்பழம்

பழங்களில் வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான மற்றும் விலை குறைவில் கிடைக்கும் ஓர் பழம். ஆனால் வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிட்டால், உடல் எடையைக் குறைப்பது என்பது கடினமாக இருக்கும். ஏனெனில் வாழைப்பழத்தில் கலோரிகள் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளது. ஒரு வாழைப்பழத்தில் சுமார் 150 கலோரிகள் உள்ளன. இம்மாதிரியான சூழ்நிலையில் ஒரு நாளைக்கு 2-3 வாழைப்பழங்களை சாப்பிட்டால், அதன் விளைவாக உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மாம்பழம்

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பழமும் கூட. ஆனால் நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், மாம்பழத்தை சாப்பிடக்கூடாது. அப்படியே சாப்பிட்டாலும், 1-2 துண்டுகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாம்பழத்தில் கலோரிகள் அதிகளவில் உள்ளன. ஆகவே இது உங்களின் எடை இழப்பு திட்டத்தை அழிக்கலாம்.

லிச்சி

பிங்க் நிறத் தோலைக் கொண்ட லிச்சி பழம் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமான பழமும் கூட. ஆனால் ஒரு கப் லிச்சியில் 29 கிராம் சர்க்கரை உள்ளது. எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின், லிச்சியை உங்கள் டயட்டில் சேர்ப்பது நல்ல யோசனையல்ல.

Related posts

தெரிஞ்சிக்கங்க…நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் இந்த செடியைப் பற்றி தெரியுமா?

nathan

மொறுமொறுப்பான மீன் மிளகு வறுவல்!

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…!!

nathan

குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

nathan

படிக்கத் தவறாதீர்கள் வெந்தய டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்களாம் பால் குடிக்கக்கூடாதாம்..

nathan

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்

nathan

உங்களுக்கு தெரியுமா சின்ன வயசுல சாப்பிட்ட இந்த பழம் பித்த நீர், மூல பிரச்சனைகளை குணப்படுத்துகிறதாம்..!

nathan

மஞ்சளில் இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan