b7a4573
மருத்துவ குறிப்பு

காலை வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிங்க! சூப்பர் டிப்ஸ்

வேம்பின் இலை, பூ, பழம், பட்டை, காய் என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயனுள்ளவை.

வேப்பம் பூவுக்கு சமையலில் முக்கிய பங்குண்டு. இதைக் கொண்டு ரசம், பச்சடி, குழம்பு தயார் செய்து சாப்பிடுவார்கள்.

புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் வேப்பம் பூவில் உள்ளன.

இது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிக உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.

 

செரிமானத்தை சீராக்கும்
வேப்பம் பூவில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்தை சீராக்கும். குடல் இயக்கத்தை மேம்படுத்தும். இதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்பட்டு குறைவாக சாப்பிட உதவும். எனவே எடை குறைப்பு எளிதாகும். மேலும் வேப்பம் பூவில் உள்ள மூலக்கூறுகள் அதிக கலோரிகளை எரிக்க உதவும்.

வேப்பம் பூ ரத்தத்தை சுத்திகரிக்க உதவுவதால், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உடலில் இருந்து வெளியேறும். உடலில் இருந்து நச்சுக்களை நீங்குவதால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

 

உ்டல் எடையைக் குறைக்கும்
வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நீரில் ஊற வைத்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

வேப்பம்பூவை தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.

வேப்பம் பூவை உலர்ந்த நிலையிலும், பொடியாகவும் பயன்படுத்தலாம். இருந்தாலும் உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தும்போது, புதிதாக பறித்த வேப்பம் பூக்களை பயன்படுத்துவதே சிறந்தது.

Related posts

இல்லற வாழ்க்கை சுமுகமாக தொடர்வதற்கு மனைவியை ரசியுங்கள்..

nathan

உங்க தொப்பையோட ஒரே போராட்டமா இருக்கா? இதோ சில வழிகள்!

nathan

பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப்பையை எடுப்பது நல்லதா?

nathan

சிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்

nathan

உங்கள் குழந்தையோடு விளையாட நேரம் ஒதுக்குங்கள்

nathan

உள்காய்ச்சல் ஏறுதா?

nathan

இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள்…

nathan

இதை படியுங்கள்! உடல் பாதிப்பில் உள்ளது எனக்கூறும் சில வினோதமான அறிகுறிகள்

nathan

கருப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை கரைக்கும் இயற்கை வழிகள்

nathan