29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
hettinad vatha kulambu
செட்டிநாட்டுச் சமையல்

சுவையான செட்டிநாடு வத்த குழம்பு

செட்டிநாடு ரெசிபிக்களை தெரிந்து கொள்ள ஒவ்வொருவருக்குமே ஆவல் இருக்கும். ஆம், கடைகளில் சென்று செட்டிநாடு ரெசிபிக்களை ஆர்டர் செய்தால், கொஞ்சமாக தான் இருக்கும். ஆனால் அதையே எப்படி சமைப்பதென்று தெரிந்து கொண்டால், வீட்டிலேயே அற்புதமாக சமைத்து, நிறைய சாப்பிடலாம் அல்லவா!

இங்கு அந்த செட்டிநாடு ரெசிபிக்களில் ஒன்றான வத்த குழம்பை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்களேன்…

Chettinad Vatha Kulambu Recipe
தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் வத்தல் – 5 டீஸ்பூன்
வெங்காயம் – 3 (நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
தக்காளி – 1 (நறுக்கியது)
சாம்பார் தூள் – 3 டீஸ்பூன்
புளி – 1 எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 3 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 3
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

முதலில் புளியை நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் சுண்டைக்காய் வத்தல், வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது ஓரளவு கெட்டியாக, எண்ணெய் பிரியும் நிலையில் வரும் போது, அதனை இறக்கினால், செட்டிநாடு சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி!!!

Related posts

சுவையான தேங்காய் சேர்க்காத செட்டிநாடு மீன் குழம்பு

nathan

செட்டிநாடு வெள்ளை பணியாரம் செய்வது எப்படி

nathan

சிக்கன் செட்டிநாடு மசாலா செய்வது எப்படி

nathan

சுவையான செட்டிநாடு இறால் குழம்பு

nathan

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

nathan

சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்

nathan

செட்டிநாடு மட்டன் குருமா செய்முறை விளக்கம்

nathan

செட்டிநாடு இறால் குழம்பு!

nathan

செட்டிநாடு உப்பு கறி செய்முறை விளக்கம் chettinad samayal kurippu

nathan