26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover 1
மருத்துவ குறிப்பு

பெண்களுக்கு பிறப்புறுப்பில் அடிக்கடி அரிப்பும் நமைச்சலும் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

இயற்கை படைத்த அற்புதமான சிற்பங்களில் மிகச் சிறந்தவள் பெண். உலக இனப்பெருக்கத்தின் மூலாதாரமே அவள்தான், அந்த புனிதமான படைப்பின் இசைவுச் சீட்டும், கடவுச்சீட்டும் இல்லாமல் எவர் ஒருவரும் இங்கே பிறக்க முடியாது.

ஏனென்றால் ஆதாம் ஏவாளின் ஆடுகளமாக இருந்த ஏதேன் தோட்டத்தின் மகிமை அப்படி. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் இயங்குவதற்கு வசீகரப் பொருளாக வாய்த்தது தான் இந்த பிறப்புறுப்புப் பகுதி.

பிறப்புறுப்பு

மதிப்பெண்களை அதிகம் பெற்ற அந்த மறைக்கும் பொருள், காலப்போக்கில் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டபடியே மக்கள் தொகையை உயர்த்திக் கொண்டிருக்கிறது. மனித இனப்பெருக்கத்தை விஞ்சும் அளவுக்கு நோய்களின் கூட்டுத்தொகை பலமடங்கு அதிகரித்துள்ளது. அரிப்பை உண்டாக்கும் வெஜினல் கேண்டியாடிசிஸ் என்ற பூஞ்சை நோய், அந்த புணர்புழைக்கும், பிறப்புறுப்புக்கும் சவலாகவே மாறியுள்ளது.

 

கர்ப்பிணிகளை படுத்தும் தொற்று

புணர் புழைகள் அதிகம் பாதிக்கப்படுவது பூஞ்சை தொற்றுகளால் தான் என்பது தெரியவந்துள்ளது.. குறிப்பாக கேன்டிட்டா அல்பிகேன்சால் என்ற பாக்டீரியாவால், யோனி துயரத்தை சுமக்கிறது. பூஞசை நோயால் ஏற்படும் தாக்கம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு பொதுவான ஒன்றாகவே இருக்கும் என்றாலும், சர்க்கரை நோய், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகளை படாதபாடு படுத்துகிறது.

பாதிப்பின் தீவிரம்

நோயின் அசாதாரணத் தன்மைகள் குறித்து அதன் அறிகுறிகளை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமாகும். என்ன காரணங்களால் ஏற்படுகிறது என்பதை உங்களுக்கு உணர்த்த எங்களிடம் சில டிப்ஸ் மற்றும் தீர்வுக்கான வழிமுறைகள் உள்ளன.உகந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை வீட்டில் உள்ள பொருட்களில் இருந்தே குணமாக்கலாம். அப்படி என்ன செய்து விடும் வெஜினல் கேன்டியாசிஸ் என்கிறீர்களா. இதோ அதன் கொடூர முகத்தைப் பாருங்கள்…

வெஜினல் கேன்டியாசிஸ்

வெஜினல் கேன்டிசியாஸில் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா. ஏனென்றால் பெயரே பழக்கத்தில் இல்லாதது போல தெரிகிறதே மக்கா. இருந்தாலும் பயப்பட வேண்டாம் அது உயிர்க்கொல்லி நோய் கிடையாது. இது ஒரு பொதுவான நோய்த் தொற்று அவ்வளவே. நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இந்த நோய்த்தொற்றால் பாதித்திருக்கக் கூடும். பாதிக்கப்படவும் வேண்டி இருக்கும்

பாதிப்பின் படிநிலைகள்

காடி, நுரைமம் என்ற வேறு அறிவியல் பெயர்களைக் கொண்ட பூஞ்சை தொற்று, மனித இனத்தை மூன்று வகைகளில் அச்சுறுத்துகிறது. மேலோட்டமாக பாதிப்பை உருவாக்கவல்லது இது. இடைநிலை மற்றும் தீவிரத் தன்மையுடன் பாதிப்பை உருவாக்கி விடக்கூடியது என்கிறது மருத்துவ உலகம்

 

காரணங்கள்

அநேகமான பெண்களின் யோனிகளில் இந்த நோய்த் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது. சிறுநீர், வாய், செரிமானப் பகுதி மற்றும் தோல் ஆகியவற்றில் இந்த பூஞ்சை நோய் பீடிக்கும்.

அறிகுறிகள்

கேன்டிட்டா என்ற நுண்ணுயிரி பொதுவாக ஒவ்வொருவரிடமும் சம அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வளவு பாகுபாடு இல்லாததாம் இது. கேன்டிட்டா அதிகரிக்கும்போது கேன்டியாசிஸ் தீவிரத்தன்மையை அடைகிறது. அரிப்பு தான் இதன் முக்கிய அறிகுறியாக இருக்கும். யோனியில் வலியையோ, எரிச்சலையோ ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும்போது உறுப்பில் வலியை உணர்த்தும்.உடலுறவின் போதும் யோனி கடுமையான வலியைக் கொடுத்து சந்தோஷத்தை கெடுக்கும்.

தடுக்கும் முறைகள்

கோன்டியாசிஸ் நோய்த் தொற்று ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் இம்சைக்கு உள்ளாக்கியிருக்கும். இதனை தடுக்க வழி தெரியாமல் திகைத்தவர்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்கு சாதாரணமான டிப்ஸ்கள் உள்ளது. முதலில் தூய்மையை பேணும்போது பூஞ்சை நோய்கள் அண்ட வாய்ப்பில்லை. உடம்பில் ஈரம் இல்லாமல் நன்றாக உலர விடுவது நல்லது. ஒழுங்கா பல் தேய்க்க கற்றுக்கொள்ள வேண்டும். புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும். பின்பற்ற இது என்ன அசாதாரண காரியமா. பிறப்புறுக்களில் பாதிப்பை தடுக்க காண்டம் பயன்படுத்துவது மெத்தச் சிறந்தது. கர்ப்பவதிகள் சீரான அளவில் சுரப்பிகளை பெற உயிரியல் சத்து பொதிந்த தயிரை எடுத்துக்கொள்ள வேண்டும்

 

தொற்று வகை – கேன்டிடல் இன்டர்டிகோ

ஒன்றோடென்று உராயும் பகுதிகளில் இந்த வகை நோய்த்தொற்றுக்கு உட்படலாம். கை, கால்கள், இடுப்பு, கவட்டுப்பகுதி, சிறிய மற்றும் பெரிய மடிப்பு விழும் இடங்கள் மற்றும் கழுத்தை கேன்டியாசிஸ் பாதிக்கும். கேன்டியாசிஸ் பாதித்த தோல் பகுதிகள் சிவப்பாக மாறி அது வீங்கத் தொடங்கும். இதனால் சிறு சிறு புண்கள் தோன்றவும் வாய்ப்பு உள்ளது. நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நபர், எரிச்சலை வலியையும் உணர முடியும்

நோயின் தாக்கம்

எசோபாஜியல் – இந்த நோய்த் தொற்று காரணமாக விழுங்கும்போது உள்நாக்கில் வலியை ஏற்படுத்துகிறது. நெஞ்சரிச்சல், மார்பு வலி ஆகியவற்றை உருவாக்குகிறது. கேஸ்டிரிக் கேன்டியாசிஸ்- இரப்பையில் புண்களை ஏற்படுத்துகிறது.

கேன்டிட்டா என்டரிடிஸ்- வயிற்று வலியை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவரை பலவீனமாக்குகிறது. அடிக்கடி குடல் இயக்கங்களால் வலி ஏற்படும். வயிற்றுப் போக்கு, நீரிழிவை போன்றவற்றால் பாதிப்பை உருவாக்கி மலக்குடல் ரத்தத்தில் கலக்கச் செய்யும் ஆபத்து உள்ளது

அனோ ரெக்டால் கேன்டியாசிஸ்- இதனை மலக்குடல் கேன்டியாசிஸ் என்பார்கள். நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் இந்த நோய்த்தொற்று, கடுமையான அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்துகிறது.

வல்வோ வெஜினல் கேன்டியாசிஸ்- இனப்பெருக்கு உறுப்புகளில் இந்த தொற்று ஏற்பட்டால் கவனமாக இருக்க வேண்டும். வெஜினல் பி.எச் கர்ப்பிணிகளின் உடல்களில் அசாதாரண மாற்றத்தை உருவாக்குகிறது. யோனியில் அரிப்பு, எரிச்சலை தோற்றுவிக்கக்கூடியதாகும்.

பலனிட்டிஸ்- ஆண்குறிகளின் நுனிப்பகுதியை பாதிக்கும் தொற்றாகும். ஒவ்வாமையை ஏற்படுத்தி அரிப்பை ஏற்படுத்தும். இதனால் கொப்புளங்கள் உருவாக வாய்ப்புள்ளது.

மருந்து – வெள்ளை தயிர்

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வெண்மையான தயிர் அருமையான மருந்தாக இருக்கும். கேன்டியாசிஸ் உருவாக பூஞ்சைகள் காரணமாக அமைகின்றன. பூஞ்சைகளின் வளர்ச்சியை தயிர் தடுக்கவல்லது . அமிலச்சுரப்பியை கட்டுப்படுத்துவதால் எரிச்சல், அரிப்பு போன்றவை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. ஆண்களுக்கும் வீடுகளில் கிடைக்கும் பொருட்கள் மூலம் கேன்டியாசிஸை குணப்படுத்தலாம்

தேவையான பொருட்கள்

30 மில்லி வெண்மையான தயிர்

பயன்படுத்தும் முறை

தயிரை யோனியின் உட்புறத்தில் தடவி, ஒரு மணி முதல் 2 மணி நேரம் வரை அது அப்படியே தொடர வேண்டும்

வாயை தூய்மை செய்யும் முறை

ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை அருமையான கிருமி நாசினிகள், ஏனென்றால் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டி பயாடிக் மிக அதிகமாக உள்ளது.தேயிலையில் கிடைக்கும் ஆயில் மறுஉற்பத்தியை அளிக்கக்கூடியது. இந்த மூன்று பொருட்களும் கேன்டியாசிஸூக்கு சக்தி வாய்ந்த சிகிச்சையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் சிடர் வினிகர் 250 மில்லி

எலுமிச்சை சாறு 15 மில்லி

தேயிலை எண்ணெய் 2 துளிகள்

பயன்படுத்தும் முறை

மூன்று கலவைகளையும் நன்றாக சேர்த்து குலுக்கு கலக்க வேண்டும். இந்த கலவை ஒரு நாளைக்கு இரண்டு முறை வாயில் கொப்பளித்து துப்பினால் கேன்டியாசிஸ் உங்களை விட்டு தூர ஓடும்-

Related posts

ஜப்பானியர்கள் தொப்பையின்றியும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வதன் ரகசியம் தெரியுமா?

nathan

நீண்ட நேரம் கணனி முன்பு அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள்?

nathan

இதய நோய் இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

nathan

மனக்கவலையை போக்க நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்

nathan

வெயில் காலத்தில் சானிடரி நாப்கின் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா குப்பைமேனி இலையை இந்த முறையில் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்..!!

nathan

உங்களுக்கு தெரியுமா பெண்கள் பலமுறை சிசேரியன் செய்தால் உடலில் ஏற்படும் விளைவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா தோல் நோய்களுக்கு மருந்தாகும் மரிக்கொழுந்து…..!

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்… இது உண்மையா? பொய்யா?

nathan