27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
cocer 16
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த 5 ராசி பெண்கள் மோசமான காதலிகளாக இருப்பார்களாம்…

நம் வாழ்க்கையில் நாம் அனைத்து விதமான ஆண்களையும், பெண்களையும் சந்திப்போம். சிலர் அடிபணிந்து செல்வார்கள், அமைதியான சிலர் இருப்பார்கள், வார்த்தைகளை விட செயல்களை அதிகம் நம்புபுபவர்கள் இருக்கிறார்கள், ஆனால் சிலரோ காதல் உறவுகள் என்று வரும்போது கட்டுப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.

இந்த வகை நபர்கள் அனைத்தும் தங்கள் விருப்பப்படி நடக்க வேண்டுமென்றும், அனைத்து முடிவுகளையும் தான்தான் எடுக்க வேண்டுமென்ற எண்ணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களே நினைத்தாலும் அவர்களால் அந்த குணத்தை மாற்றிக்கொள்ள முடியாது. இதற்கு அவர்கள் பிறந்த ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்த பெண்கள் இந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிப் பெண்கள் தங்கள் வாழ்வில் உள்ள அனைவரும், குறிப்பாகத் தங்கள் துணை தங்களை பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். ரிஷப ராசி பெண்கள் தங்கள் துணையின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தொழில் வாழ்க்கை இரண்டையுமே கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தீவிரமான எல்லைகளுக்கு செல்லலாம்.

கன்னி

கன்னி ராசி பெண்கள், சுதந்திரமானவர்கள் மற்றும் சுதந்திரமான சிந்தனைக் கொண்டவர்கள். இந்தப் பண்பு அவர்களைத் தங்கள் கூட்டாளிகளை ஆதிக்கம் செலுத்தச் செய்கிறது. தங்கள் துணையை ஆதிக்கம் செலுத்துவதே அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க சிறந்த வழி என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் இயல்பில் அடிபணிந்த ஒரு நபரை திருமணம் செய்து கொள்வார்கள். அதுதான் இவர்களின் இல்வாழ்க்கைக்கு நல்லது என்று நினைப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி பெண்கள் தங்கள் துணையை ஆதிக்கம் செலுத்தும் போது தங்களை ஒரு தொழில்முறை நிபுணராக கருத விரும்புகிறார்கள். அவர்கள் மைண்ட் கேம்களை விளையாடுவதிலும், கையாளுதல் மற்றும் இந்த நுட்பங்களைப் பயன்படுத்துவதிலும் சிறந்தவர்கள், அவர்கள் தங்கள் கூட்டாளர்களை ஆதிக்கம் செலுத்துவதில் இறுதியில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களின் முடிவுகளுக்கு துணை ஒப்புக்கொள்ளாத போது இவர்கள் பிரச்சினையைத் துவங்குவார்கள்.

தனுசு

தனுசு ராசிப் பெண்கள் அவர்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கும் போது தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தங்களுக்கு தேவையான ஒன்றை விரும்பும்போது, அதனை செய்ய, அவர்கள் தங்கள் கணவர் மீது ஆதிக்கம் செலுத்துவதை நாடுகிறார்கள், அதனால் அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். அது வீட்டு வேலைகள் முதல் அன்றாட வேலைகள் வரை எதுவாகவும் இருக்கலாம். இறுதியில் இவர்கள் நினைத்தது நிறைவேறியாக வேண்டும்.

மகரம்

மகர ராசிப் பெண்கள் பெரும்பாலும் சுயநலம் கொண்டவர்களாகவும், உறவில் இருக்கும் போது தங்களுக்கு ஏற்ற வகையில் எல்லாவற்றையும் செய்து முடிக்க விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் கூட்டாளியின் செயல்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்கள் மற்றும் அவர்களின் விருப்பப்படி நடந்துகொள்ள அல்லதுஅவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

Related posts

பெண்கள் தங்க நகைகள் அணிவதால் இவ்வளவு நன்மையா….

nathan

மலட்டுத்தன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் வாழைப்பூ

nathan

தினந்தோறும் திராட்சை பழம் சாப்பிடுங்கள்! கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

nathan

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்: இரத்தசோகை காரணமா?

nathan

இந்த 5 ராசிக்காரங்க எல்லாரையும் நம்பி ஈஸியா ஏமாந்துபோகும் முட்டாளாக இருப்பார்களாம்…

nathan

இந்த 6 ராசிக்காரங்க உங்களுக்கு காதலில் துரோகம் செய்ய அதிக வாய்ப்பிருக்காம்…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டாள் என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் தெரியுமா?

nathan

அவரம்பூ (Cassia auriculata)

nathan

சோற்றுக் கற்றாழைமருத்துவ குணங்கள்

nathan