27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
dsfs 1 russia attack 1. L styvpf 1
அழகு குறிப்புகள்

இந்தியாவில் வீடுகளின் கிணறுகளில் தீப்பிழம்பு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள வீடுகளின் கிணறுகளில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிவது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி மற்றும் கூட்ட நாடு பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீரில் தீப்பிடித்து எரிந்து வருகிறது.

இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கிணறுகளில் இவ்வாறு தீப்பிழம்புகள் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில கிணறுகளில் பெற்றோல் வாசனை வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

அதேநேரத்தில் அதிகாரிகள் இந்தப் பகுதியில் உள்ள பெற்றோல் குதங்களில் இருந்து கிணறுகளில் பெற்றோல் கலந்து இருக்கலாம், அதன் மூலமும் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

பாலக்காடு மாவட்டத்தில் கேரளாவிலேயே மிக அதிகமாக வெயில் கொடுமை அதிகரித்துள்ளது.

வெயில் கொடுமையால் ஏற்பட்ட வெப்பத்தின் விளைவாக தீ பிடித்து இருக்குமா எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மையான காரணம் என்ன என்று இதுவரை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கிணற்றில் தீப்பிடித்து எரிவதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முகத்திற்கு கன்னங்கள் தனி அழகை தர இதை செய்து வாருங்கள்……

sangika

படித்ததில் பிடித்தது… உங்கள் *வாழ்நாள்* முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் *இயற்கையின்* அற்புதத்தை பாருங்கள், உங்கள் கால்களின் பாதங்களில். *பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில்* *சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.* *மனித உறுப்புகளை அழுத்தி மசாஜ்* செய்வதன் மூலம் குணமாகும்.

nathan

லீக் ஆன நயன்தாரா – விக்கி திருமண அழைப்பிதழ்!

nathan

சூப்பர் டிப்ஸ்.. முகத்தை பொலிவாக்கும் பாதாம் மாஸ்க் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்…!!

nathan

சிம்பிளான அலங்காரம் உங்கள் மதிப்பை கூட்டும்

nathan

சூப்பர் டிப்ஸ் நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்…?

nathan

இதை நீங்களே பாருங்க.! இறுக்கமான ஆடையில் குக்வித் கோமாளி பிரபலம்! ஷாக் கொடுக்கும் சிரீயல் நடிகை தர்ஷாவின் புகைப்படம்..

nathan

முகம் பளபளப்பாக எளிய அழகுக் குறிப்புகள்!

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! நடிகர் வடிவேலுவின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா

nathan