நெய் உடலுக்கு நன்மைகளை கொடுக்கிறது. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
பகல் பொழுதில் உண்ணும் முதல் சாதத்தில் சிறிதளவு நெய் சேர்த்து உண்பது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைக் குறைக்கும்.
மேலும், மலச்சிக்கல், பித்தம், வாதம், கப நோய்கள், சொறி முதலிய நோய்களும், சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தீரும்.
இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல.
கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
அதே சமயம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால், அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.ஆனால் அதிகளவில் தொடர்ந்து சாப்பிட்டாலும் இதயநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது.
நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.