25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
fat loss
ஆரோக்கியம் குறிப்புகள்அழகு குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஒரு வாரத்தில் உடல் பருமனையும் குறைக்க சூப்பர் பானம்!…

வட இந்திய பானமான ஜல்ஜீரா உடல் சூட்டை குறைத்து , வெயில் கால நோய்களிலிருந்து பாதுகாப்பு கொடுப்பதுடன், உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது.

 

ஜல்ஜீரா பானம் தயாரிக்கும் முறை:

ஜல் என்றால் நீர், ஜீரா என்றால் சீரகம். இந்த பானத்தை வீட்டின் சமையல்அறையில் இருக்கும் பொருட்களைக்கொண்டு எளிய முறையில் தயார் செய்து விடலாம். முதலில் தேவையான அளவு சீரகத்தை மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியுடன், தண்ணீர், உப்பு, புதினா இலைகள், கொத்துமல்லி இலைகள், சுக்குப்பொடி (காய்ந்த இஞ்சியில் தூள்) , சிறிய அளவு புளி, எலுமிச்சை ஜூஸ், தேவைக்கேற்ப இனிப்பு( சர்க்கரை / கருப்பட்டி/ நாட்டுச்சர்க்கரை) ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் இதைக் குளிரச் செய்து தண்ணீரில் கலந்துஅருந்தலாம்.

ஜல்ஜீரா பானத்தில் உள்ள நன்மைகள்:

ஜல்ஜீரா பானத்தில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களுமே வயிற்றுக்கு இதம் அளிப்பவை. கோடை காலங்களில் ஏற்படும் செரிமான பிரச்னைகளை தவிர்த்து நல்ல செரிமானத்தன்மையை ஊக்குவிக்கிறது இந்த பானம்.

வெயில் காலங்களில் பொதுவாக சந்திக்க கூடிய நெஞ்செரிச்சல், அசிடிட்டி, குமட்டல், மயக்கம் போன்ற பிரச்னைகளை தடுக்கும் தன்மை கொண்டது ஜல்ஜீரா பானம்.

ஜல்ஜீரா பானம் நல்ல பசியை தூண்டக்கூடியது. கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு பசியின்மை பிரச்னை அதிக அளவு இருக்கும். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக அமையும் இந்த பானம்.

கோடை காலங்களில் பெரும்பாலான மக்கள் சந்திக்க கூடிய பிரச்னை மலச்சிக்கல். ஜல்ஜீரா பானத்தை அருந்துவதன் மூலம் உடலுக்கு நீர் சத்து அதிகளவில் கிடைப்பதால் மலச்சிக்கல்சரியாகும்.

மிககுறைந்த அளவு எரிசக்தியை கொண்ட ஜல்ஜீரா பானத்தை உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின் எப்படி உட்கொண்டாலும் உடல் எடை குறைவதற்கான வாய்ப்பினை அதிகரிப்பதுடன். உடலுக்கு தேவையான நீர்ச்சத்தினையும் இது கொடுக்கிறது.

கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் மயக்கம், வாந்தி போன்ற தொந்தரவுகளை கட்டுக்குள் வைத்திடவும் இந்த பானம் உதவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! உடற்பயிற்சி செய்வதற்கு 1 மணிநேரத்திற்கு முன்

nathan

முதுகு வலி பல நோய்களுக்கு எச்சரிக்கை மணி!

sangika

நள்ளிரவிலும் இட்லி கிடைக்கும்!!இந்தியாவில் இட்லி ATM மெஷின் அறிமுகம்

nathan

இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்களுக்குள் வெடித்த மோதல்

nathan

இரவு உணவில் இவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!….

sangika

வெந்நீரில் குளிக்க கூடாது! இது முற்றிலும் தவறு!..

sangika

பயத்தம் பருப்பில் பளபளப்பு!

nathan

தினமும் உலர்திராட்சை… நன்மைகளோ ஏராளம்!

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan