33.9 C
Chennai
Wednesday, Jun 26, 2024
rice
ஆரோக்கிய உணவு

வெள்ளை சாதம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா?தெரிஞ்சிக்கங்க…

இந்த காலத்தில் இளைஞர்களின் பெரும் சவாலாக இருப்பது உடல் எடையை குறைப்பது. எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்து பல தவறான முடிவுகளை எடுத்து அவர்களது ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கின்றனர்.

அந்த வகையில் சிலர் வெள்ளை சாதத்தை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று நினைத்து ஒதுக்கி விடுகிறார்கள். அனால் நிபுணர்கள் சாதம் சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவும் என்று கூறியுள்ளனர்.

 

ஆனால் அதற்கான சில வழிமுறைகள் உண்டு எனவும் அதை தவறாமல் பின்பற்றினால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். சரி வாங்க நிபுணர்கள் கூறிய வழிமுறைகளை குறித்து பார்க்கலாம்..

 

வெள்ளை அரிசியில் வைட்டமின் பி மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளதால் எடை குறைப்பு செயல்முறையை ஊக்கப்படுத்துகிறது. இருப்பினும் வெள்ளை அரிசியின் அதிகப்படியாக உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் வெள்ளை அரிசியின் பகுதியைச் சரிபார்க்க வேண்டும். நீங்கள் குறைந்த அளவை உட்கொள்வதை உறுதி செய்து கொள்ளவும். மற்ற வகை கார்போஹைட்ரேட்டுகள் அல்லது கொழுப்புகளை அரிசியுடன் இணைக்க வேண்டாம்.

அரிசி உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க சிறந்த வழிகளுள் ஒன்று காய்கறிகள் அல்லது கீரைகளுடன் ஒரு சிறிய கிண்ணம் அரிசியை சேர்த்து கொள்வது ஆகும். சாதத்தை தவிர தோசை போன்ற உணவுகளையும் எடுத்து கொள்ளலாம்.
அரிசியை சில மணி நேரம் ஊறவைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிடலாம். கட்டாயமாக குக்கரில் சமைத்த உணவை எடுத்து கொள்ள கூடாது.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஹார்மோன் இம்பேலன்ஸ் எனப்படுகிற கோளாறுகளை ஓட ஓட விரட்ட வைப்பது, மஞ்சள்

nathan

இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை!…

sangika

முட்டைக்கோஸ் (கோவா) ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

nathan

கொழுப்பைக் குறைக்கும் கொத்தவரைக்காய்..!

nathan

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை நீரை குடிக்கலாமா? தெரிந்துகொள்வோமா?

nathan

காளான்களை அதிகம் சாப்பிடுவது அதிக பிரச்சனைகளை உருவாக்குகிறது…

nathan

கறிவேப்பிலை சாறு

nathan

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாசி.

nathan

தெரிஞ்சிக்கங்க…எளிதில் செரிமானம் அடையாமல் தொந்தரவு கொடுக்கும் உணவுகள்!!!

nathan