29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
21 61b
ஆரோக்கிய உணவு

மாதுளை பழ தோலில் இவ்வளவு நன்மை இருக்கா? தெரிந்துகொள்வோமா?

பழங்களிலேயே மிக அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைய வைட்டமின்களும் நிறைந்த பழங்களில் ஒன்று என்றால் அதில் மாதுளையும் அடங்கும்.

இந்த பழத்தில் நமது உடலுக்கு தேவையான எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய ஒரு நாட்டு மருந்தாகவும் உள்ளது.

 

மேலும் இந்த பழம் அதிக ருசி மிகுந்த பழம் என்பதால் அனைவராலும் உண்ண கூடியது. அதுபோல் இதன் தோலில் எண்ணற்ற பயன்கள் அடங்கியுள்ளது.தற்போது அவற்றை தெரிந்து கொள்வோம்.

 

மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி தூக்கி வீசாதீர்கள். அதை நன்கு கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு உலர்த்தி, பொடி செய்து அதை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். வழக்கமாகக் குடிக்கும் தேநீருக்கு பதிலாக இந்த பொடியைச் சேர்த்து டீ வைத்துக் குடிக்கலாம். கஷாயம் போட்டு, அல்லது சுடுநீரில் கலந்தும் குடிக்கலாம்.
ஒரே மாதிரி நிறம் இல்லாமல் (uneven skin tone) இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் மாதுளை பொடியுடன் சிறிது தேன் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வந்தால் முகம் பொலிவு பெறும். பிக்மண்டேஷன் உள்ளவர்கள் இதை வாரம் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தொடர்ந்து ஒரு மாதத்துக்கு ஃபிரஸ்ஸான மாதுளை தோலினை இடித்து சாறெடுத்து 50 மில்லி அளவு குடித்து வந்தால் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறைவதோடு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு ரிவர்ஸ் செய்வதற்கு இந்த மாதுளை தோல் பயனுள்ளதாக இருக்கும். இரவு தூங்கும்முன் குடித்தால் அதிகாலை நேர சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
பெரிய பிரச்சினை எதுவும் இல்லாமல் இயல்பாகவே காது மந்தமாகக் கேட்கும் பிரச்சினை உள்ளவர்கள் இந்த மாதுளை பொடியில் மிக அதிக அளவு ஆக்சிஜனேற்றிகள் இருக்கின்றன. இவை காது கேளாமை பிரச்சினையை சரிசெய்யும்.
மாதுளையின் தோலில் பாலிஃபினைல் அதிகம் இருக்கிறது. இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, வயிற்றில் உள்ள அழற்சியை சரிசெய்து குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

Related posts

இதை குடிச்சிட்டு தான் இவ்வளவு ஆரோக்கியமா வாழ்தாங்க! பழைய சோற்றின் அருமை தெரியுமா உங்களுக்கு?

nathan

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தூதுவளையின் மருத்துவ குணங்கள்

nathan

கெட்ட கொழுப்பை நீக்கும் பிஞ்சு பாகற்காய் சூப்

nathan

சூப்பரான நார்த்தங்காய் சாதம்

nathan

நீரிழிவு நோயாளிகளுக்கான கோடைக்கால சாலட் ரெசிபி -ஹெல்த் ஸ்பெஷல்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த பழத்தின் கொட்டையை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்குமாம்!

nathan

தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ?

nathan

ஒரே நாளில் மூட்டுவலியை விரட்டியடிக்கும் இயற்கை பானம்! சூப்பர் டிப்ஸ்

nathan

டைப் 2 சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு கப் முளைகட்டிய பச்சைப்பயிறு சாப்பிடுங்கள்!சூப்பர் டிப்ஸ்

nathan