25 C
Chennai
Wednesday, Nov 13, 2024
201709051214258728 1 napkins. L styvpf
ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சரியான அளவிலான நாப்கினைப் பயன்படுத்துகிறீர்களா?

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் 15,000 நாப்கின்கள் வரை பயன்படுத்துகிறார் என்கிறது ஓர் ஆய்வு. ஆகவே, அதைத் தேர்ந்தெடுப்பதிலும், பயன்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இது பெண்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டது.

‘’பொருத்தமில்லாத அளவில் நாப்கினைப் பயன்படுத்துவதால், 80 சதவிகிதம் பெண்கள் கறைபடும் பிரச்சனையைச் சந்திக்கிறார்கள். மாதவிடாய் நாள்களின் உதிரப்போக்குக்கு ஏற்பவும் ஒவ்வொரு பெண்ணின் உடலமைப்புக்கு ஏற்பவும் நாப்கின்கள் மீடியம், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜ் எனப் பல அளவுகளிலும் பேக், ஃப்ரன்ட் கவரேஜ் எனப் பல வகைகளிலும் வடிவமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணும் இதில் தன் தேவை என்ன என்பதன் அடிப்படையில் நாப்கின் வாங்குவது நல்லது.

உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் முதல் மூன்று நாள்களுக்கு மற்றும் இரவு நேரங்களில் பயன்படுத்த எக்ஸ்எல் சைஸ் நாப்கின்கள், உதிரப்போக்குக் குறையத் தொடங்கும் நான்கு, ஐந்தாவது நாள்களில் மீடியம்/லார்ஜ் சைஸ் நாப்கின்கள் எனப் பயன்படுத்தலாம். அதேபோல, மெனோபாஸை எதிர்கொள்ளும் பெண்களும் தேவையைப் பொறுத்து எக்ஸ்எல் நாப்கின்களைப் பயன்படுத்தலாம்.

 

பிரசவ நேரத்தில் அந்நாள்களின் அசௌகர்யங்களைக் கருத்தில்கொண்டு பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும், நீளமும் அடர்த்தியும் அதிகம்கொண்ட ‘மெட்டர்னிட்டி பேடு’ பயன்படுத்தலாம். இதை மருத்துவமனையிலேயே வழங்குவார்கள். ஒவ்வொரு பெண்ணின் உடலைப் பொறுத்தும் குறிப்பிட்ட ரக நாப்கின் ஆற்றும் வினை மாறுபடலாம்.

எனவே, மாதவிடாய் நாள்களில் ஒவ்வாமை, கட்டி என்று அவதிப்படும் பெண்கள், வேறு வகை நாப்கின்களைப் பயன்படுத்திப் பார்க்கலாம். எளிமையான காட்டன் பேடுகள், ஹெர்பல் நாப்கின்களைத் தேர்ந்தெடுக்கலாம். இன்று துணியினாலான ரெடிமேடு நாப்கின்களும் கிடைக்கின்றன. குறிப்பாக, வீட்டில் இருக்கும் பெண்கள் இவற்றைப் பயன்படுத்தலாம்.

பள்ளி, கல்லூரி, வேலை என்று வெளியே பல மணி நேரம் செலவிட வேண்டிய பெண்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் நாப்கின்களைப் பயன்படுத்தலாம். வீட்டில் இருக்கும் பொழுதுகளில், உதிரப்போக்குக் குறையும் நான்காவது, ஐந்தாவது நாட்களில் எல்லாம் மேற்கூறிய வகை நாப்கின்களைப் பயன்படுத்தலாம்.

Related posts

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க… கூச்ச உணர்வு, கைகளிலும் கால்களிலும் உணர்வின்மை குறைக்க 5 எளிய வீட்டு வைத்தியம்..!!

nathan

பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்!…

nathan

பனியால் சருமம் வறண்டு போகிறதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கொழுப்பை விரைவில் குறைக்க உதவும் 10 நிமிட உடற்பயிற்சிகள்!!!

nathan

உங்களுக்கு நீர் உடம்பா? குறைக்க உதவும் சில எளிய இயற்கை வழிகள்!

nathan

உங்களிடம் இருக்கும் இந்த பழக்கம் உங்கள் திருமணத்திற்கு எதிரி என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

டயட் மேனியாடயட்கள் எடைக்குறைப்பை மையமாகக் கொண்டே உள்ளன

nathan

கண் பார்வை சீர்கெடாமல் இருக்க நீங்கள் தவறியும் செய்துவிட கூடாதவை!!

nathan