28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
4158f9d1 9e1a 4360 b34e 09b9a98d6088 S secvpf
சிற்றுண்டி வகைகள்

அகத்திக்கீரை சொதி

தேவையான பொருட்கள் :

அகத்தி கீரை- 1 கட்டு
பெரிய வெங்காயம்- 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 4
பால் – 1கப்
உப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை :

• கீரை நன்றாக கழுவி இலைகளை மட்டும் ஆய்ந்து தனியாக வைக்கவும்.

• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

• பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு போட்டு கொதிக்க விடவும்.

• வெங்காயம், தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடுவும்.

• கீரை நன்றாக வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றி கொதி வந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு இறக்கிவிடலாம்.

• அகத்திக்கீரை சொதி தயார். இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்.

4158f9d1 9e1a 4360 b34e 09b9a98d6088 S secvpf

Related posts

பாசி பருப்பு இனிப்பு தோசை

nathan

சுவையான சத்தான கம்பு தோசை

nathan

சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு

nathan

ராகி முறுக்கு: தீபாவளி ரெசிபி

nathan

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்

nathan

மசாலா பராத்தா

nathan

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட்!…

sangika

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

nathan

சத்தான வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan