27.1 C
Chennai
Tuesday, Dec 3, 2024
09 1510221245 9
மருத்துவ குறிப்பு

கோபப்படறவங்களுக்கு இந்த ஒரு பழம் கொடுத்தா போதும். அப்டியே கூலாகிடுவாங்க தெரியுமா!தெரிஞ்சிக்கங்க…

நம் வீடுகளில் அன்றாட சமையலுக்கு பயன்படுகிற ஒரு பொருள் தக்காளி.மூன்று வேலை உணவிலும் ஏதோ ஒரு வகையில் தக்காளி இடம்பெற்றுவிடும்.விலையில் நம்மை அவ்வப்போது பயமுறுத்தினாலும் எக்கச்சக்கமான பலன்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது தக்காளி.

எப்போது நம்முடனேயிருக்கும் பொருட்களைப் பற்றியோ நபர்களைப் பற்றியோ நமக்கு அவ்வளவாக தெரியாது.அதே போலத்தான், நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியில் எண்ணற்ற பலன்கள் அத்தனை இருக்கிறது தெரியுமா ? அதனைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சுவரஸ்ய வரலாறு : மெக்ஸிகோவில், அஸ்டெக் இனத்தவர் உணவுக்காகத் தக்காளியைப் பயிரிட்டனர். அந்நாட்டைக் கைப்பற்றின ஸ்பானிய வெற்றி வீரர்கள் 16-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்றனர். நாவாட்டில் என்ற மொழியில் டாமாட்டில் எனப்படும் வார்த்தையைக் ‘கடன் வாங்கி’ இதை டாமாடே என்று அழைத்தனர். விரைவில், இத்தாலி, வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்த ஸ்பானிய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் புதிய சுவையை ருசிக்க ஆரம்பித்தனர்.

தக்காளி விஷம் : அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், வட ஐரோப்பாவிற்குத் தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அது நச்சுத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதால், தோட்டத்தில் அலங்காரச் செடியாக வளர்க்கப்பட்டது. இரவில் மலர்கிற ஒரு செடியாக, அதிக வாசனையுள்ள இலைகளையும் நச்சுத்தன்மையுள்ள தண்டுகளையும் கொண்ட ஒரு செடியாக இது இருந்தது. என்றாலும், அதன் பழத்தில் எவ்வித ஆபத்தும் இல்லையென்பது நிரூபிக்கப்பட்டது.

முக்கிய உணவு : ஐரோப்பாவுக்கு முதன்முதலில் கொண்டுவரப்பட்ட தக்காளிகள் மஞ்சள் நிறத்தில் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் இத்தாலியர்கள் அதை போமோடோரோ (தங்க ஆப்பிள்) என்றழைத்தனர். ஆங்கிலேயர் முதலில் அதை டொமாட்டே என்றும் பிற்பாடு அதை டொமாட்டோ என்றும் அழைத்தனர். ஆனால் “லவ் ஆப்பிள்” என்ற பெயரும் அதிக பிரபலமானது. ஐரோப்பாவிலிருந்து அட்லாண்டிக் வழியாகத் திரும்பவும் வட அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்ட தக்காளி, 19-ஆம் நூற்றாண்டில் அவ்விடத்தின் முக்கிய உணவாக ஆனது.

புற்றுநோய் : தக்காளியில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விட்டமின் சி நிரம்பியிருக்கிறது. இதிலிருக்கும் lycopene என்ற தாது உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக பெண்களை அதிகம் தாக்குகிற மார்பக புற்று நோயிலிருந்து தப்பிக்க தக்காளியில் இருக்கும் carotenoids உதவிடும்.

சிகரெட் : புகைப்பழக்கம் உடலுக்கு அதீத தீங்கு விளைவுக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த பாதிப்பின் வீரியத்தை தக்காளியைக் கொண்டு குறைக்க முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? தக்காளியில் இருக்கும் chlorogenic acid மற்றும் coumaric acid.அந்த வேலையை செவ்வணே செய்கிறது. அதே போல தக்காளியில் இருக்கும் nitrosamines நுரையிரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இதயம் : இன்றைக்கு யாரைக்கேட்டாலும் மாரடைப்பு, பைபாஸ் சர்ஜரி என்று சர்வசாதரணமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.தக்காளி இதய நலனில் முக்கியப்பங்காற்றுகிறது. தக்காளியில் இருக்கும் க்ளோரின், பொட்டாசியம், ஃபைபர் மற்றும் விட்டமின் சி ஆகியவை இதயம் சீராக இயங்குவதற்கு உதவி புரிகிறது. இது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்க பெரிதும் உதவுகிறது.

சர்கரை நோய் : உணவில் அதிகமாக நார்ச்சத்து எடுத்துக்கொண்டால் அது நம் உடலின் ரத்தச் சர்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவிடும். தக்காளியில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது. அத்துடன், இது இன்ஸுலின் அளவையும் நம் உடலில் சேரும் கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

சருமம் : நம்முடைய உடலுக்கு மட்டுமல்ல தக்காளி சருமத்திற்கும் மிகவும் நல்லது. சருமத்தை பளபளப்பாக ஃப்ரஸாக்குவதற்கும். மாசு,மருவற்று தெரியவும் தக்காளியை பயன்படுத்தலாம். இதிலிருக்கும் விட்டமின் ஏ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்க பயன்படும். தக்காளியில் இருக்கும் பீட்டா கரோட்டீன் சூரிய ஒளியினால் ஏற்படும் நிற மாற்றங்களை சரி செய்திடும். அதோடு இது சருமத்தில் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

மன அழுத்தம் : தக்காளியில் ஃபோலிக் அமிலம் நிறைந்திருக்கிறது. இதனை எடுத்துக்கொண்டால் நம் மூளையில் homocysteine என்ற ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும். இது மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்கச் செய்யும். அதோடு சீரான தூக்கம், எதற்கெடுத்தாலும் அதிகமாக உணர்சிவசப்படுவது, சட்டென கோபப்படுவது ,எரிச்சல் போன்றவற்றை சீர்படுத்த தக்காளியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உதவிடும்.

பார்வை : தக்காளியில் இருக்கும் பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ கண் பார்வைக்கு மிகவும் நல்லது. விட்டமொன் ஏ ரெட்டீனாவின் செயல்பாடுகளுக்கு துணைபுரிகிறது. வயது மூப்பின் காரணமாக கண் பார்வையில் பிரச்சனை அதிகரிக்கும் அதனை தவிர்க்க தக்காளி போன்ற அதிகப்படியான lycopene, beta-carotene, மற்றும் lutein ஆகியவை அடங்கியிருக்கும் உணவினை எடுத்துக் கொண்டால் அவை கண் பிரச்சனையிலிருந்து நம்மை காத்திடும்.

செரிமானம் : நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்கப்பட்டு பின்னர் கழிவாக வெளியேர தக்காளி துணை நிற்கிறது. இது நம் உடலில் சேர்ந்திடும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது

சிறுநீரகப்பிரச்சனை : தக்களியை தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சிறுநீரகம் மற்றும் சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. இதில் அதிகப்படியான தண்ணீர் சத்து இருக்கிறது இது நீர்க்கடுப்பு இருந்தால் தவிர்க்கச் செய்திடும். நம் உடலில் அதிகப்படியாக சேரும் நச்சு, யூரிக் அமிலம், உப்பு, கொழுப்பு போன்றவற்றை நீக்கச் செய்திடும்.

எலும்புகள் : நம் உடலில் விட்டமின் சத்து குறைவது தான் நமக்கு osteoarthritis வருவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தக்காளியில் இருக்கும் Lycopene இதனை தடுக்கச் செய்கிறது. எலும்புகளின் உறுதித்தன்மைக்கு தக்காளி துணை நிற்கிறது.

தைராய்டு : தைராய்டு சுரப்பி சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. தக்காளியில் இருக்கும் மக்னீசியம் இந்த வேலையை கச்சிதமாக செய்திடுகிறது. இவை தைராக்சின் சுரப்பை அதிகப்படுத்துகிறது.

கர்பிணிப்பெண்கள் : கர்பிணிப்பெண்களுக்கு ஏற்படுகிற வாந்தி மற்றும் குமட்டலை தக்காளி குறைக்கிறது.ஃபோலேட் என்கிற சத்து கர்பிணிப்பெண்களுக்கு மிகவும் அவசியமானது.குழந்தையின் வளர்சியிலும் ஃபோலேட் முக்கியப் பங்காற்றுகிறது. முதல் ட்ரைம்ஸ்டரில் தக்காளி அதிகமாக சேர்க்கலாம்.

 

Related posts

சூப்பர் டிப்ஸ்! நினைவுத் திறனை அதிகரிக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

nathan

உங்களுக்கு தெரியுமா சீரகத்தை இதெல்லாம் உடன் கலந்து சாப்பிட்டால் போதும்.. பல நோய்களுக்கு மருந்தாகுமாம்..!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! குறைப்பிரசவம் நடக்க காரணமென்ன?

nathan

பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மோசமான 5 உணவு பழக்கம் எலும்புகளுக்கு ஆபத்து

nathan

இந்த 10 அறிகுறிகளையும் சாதாரணமாக எடுத்துக்காதீங்க!பெண்களே அவசியம் படிக்க..!

nathan

80 விதமான வாதநோய்களைப் போக்கும் தழுதாழை!

nathan

உங்களுக்கு தொியுமா கர்ப்ப காலத்தில் பெண்கள் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

மனித இனத்தை உலுக்கும் கொடூரமான நோய்கள்

nathan