29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
dreaming 1
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்க கனவில் இதெல்லாம் வந்தால் பணம் வரப்போகுதுன்னு அர்த்தமாம்…தெரிஞ்சிக்கங்க…

கனவு என்பது ஒரு சாதாரண நிகழ்வு. தூங்கும் போது வரும் கனவுகள் பெரும்பாலும் எழுந்ததும் மறந்துவிடும். சில கனவுகள் நினைவில் இருக்கும். நாம் எதைப் பற்றி ஆழமாக நினைத்து அல்லது யோசித்துக் கொண்டிருக்கிறோமோ, அதுவே பெரும்பாலும் பலரது கனவில் வரும் என்பார்கள். அறிவியலின் படி, கனவுகள் எதிர்காலத்தின் கண்ணாடி. இதன் மூலம் ஒருவர் வரும் காலங்களில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்கிறார்.

ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. ஒருவருக்கு வரும் கனவு நல்லதா கெட்டதா என்பதை, அதன் அர்த்தத்தால் அளவிட முடியும். சில கனவுகள் வரவுள்ள செல்வத்தைக் குறிக்கும். இப்போது நாம் ஸ்வப்ன சாஸ்திரத்தில் உள்ள செல்வம் தொடர்பான கனவுகளைக் குறித்து காண்போம். உங்களுக்கு இந்த கனவுகள் வந்தால், உங்களை நோக்கி செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம்.

தெய்வங்களை காண்பது

கனவில் தெய்வங்களைக் காண்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஒருவரது கனவில் கடவுள் வந்தால், அது எதிர்காலத்தில் நீங்கள் பணம் பெறப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். இது தவிர, நீங்கள் உங்கள் வேலைகளில் பெரிய வெற்றியை அடையப் போகிறீர்கள் என்பதையும் குறிக்கும்.

குதிரை சவாரி

நீங்க குதிரையில் சவாரி செய்வது போன்ற கனவு காண்பது, செல்வத்தின் அடையாளமாகும். இது தவிர, இது புதிய வேலையைத் தொடங்க போவதையும் குறிக்கிறது. கனவில் யானையைப் பார்ப்பதும் புனிதமானதாக கருதப்படுகிறது. இது நீங்கள் பல மூலங்களில் இருந்தும் பணம் பெறப் போவதைக் காட்டுகிறது.

மேலே ஏறுவது

உங்கள் கனவில் நீங்கள் மேலே ஏறுவது போன்று கண்டால், பணம் அதிகம் சம்பாதிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். இம்மாதிரியான கனவு எதிர்காலத்தில் உங்களுக்கு சில வேலைகள் இருப்பதற்கான அறிகுறியும் கூட.

அர்த்தத்தை காண்பது

ஒருவர் தங்கள் கனவில் ஒரு விஷயத்திற்கான அர்த்தத்தை காண்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இம்மாதிரியான கனவு பொருளாதார நிலையில் முன்னேற்றத்தின் அறிகுறியாகும்.

சமைப்பது

நீங்கள் சமைப்பது போன்ற கனவை காண்பது நல்லது. ஏனெனில் இது ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறப் போகிறீர்கள் மற்றும் அதிக பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது என்பதைக் குறிக்கிறது. எனவே சமைப்பது போன்ற விஷயங்களைக் கண்டால் பயப்பட வேண்டாம். ஏனென்றால் இது நீங்கள் அதிக பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள் என்பதற்கான ஓர் அறிகுறி.

பண பரிவர்த்தனை

நீங்கள் உங்கள் கனவில் பணப் பரிவர்த்தனைகள் செய்வதைப் பார்த்தால், வரவிருக்கும் நாட்களில் நீங்கள் அதிக பணம் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

விவசாயி

கனவில் விவசாயியை காண்பது செல்வம் பெறுவதற்கான அறிகுறியாகும். அத்துடன், கனவில் உங்களைச் சுற்றி பச்சை பசேலென்று பசுமையைப் பார்ப்பது, உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவி வரப்போகிறார் என்பதற்கான அடையாளமாகும்.

பெண் நடனம் ஆடுவது

ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, கனவில் ஒரு பெண் நடனம் ஆடுவது போன்று காண்பது லாபத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. கனவு அறிவியலின படி, இம்மாதிரியான கனவுகள் கடுமையான நோயைக் குறிக்கின்றன.

மாதுளை, தயிர்

கனவில் மாதுளையை எண்ணிக் கொண்டிருப்பதைக் காண்பது உங்களிடம் செல்வம் அதிகம் சேரப் போவதைக் குறிக்கிறது. கனவில் வால்நட்ஸ் பருப்புக்களை சாப்பிடுவது அல்லது விநியோகிப்பது என இரண்டுமே மிகவும் நல்லது. இந்த கனவுகள் பொருளாதார நிலையில் முன்னேற்றத்தின் அறிகுறியாகும். இதேப்போல், நீங்கள் கனவில் தயிர் அல்லது வெற்றிலை சாப்பிடுவது போன்ற காண்பது சில எதிர்கால வேலைகளில் சந்திக்கப் போகும் வெற்றியின் அறிகுறியாகும். அதோடு தானியக் குவியலை கனவில் காண்பதும் நல்லது.

அரண்மனை அல்லது பெரிய வீடு

நீங்கள் உங்கள் கனவில் பெரிய அரண்மனை அல்லது பெரிய வீட்டைக் காண்பது ஒரு நல்ல அறிகுறி. இந்த மாதிரியான கனவு, செல்வம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதைக் குறிக்கிறது. அதே நேரத்தில், சொத்துக்கள் அதிகரிக்க போவதையும் குறிக்கிறது.

Related posts

குழந்தைகள் கண் பார்வை வளம் பெறச் சாப்பிட ஏற்ற 12 உணவுகள்

nathan

பேன் தொல்லையால் அவதியா? : இதோ சூப்பர் ஐடியா…!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஃபர்சனாலிட்டியை வெளிப்படுத்தும் 8 விஷயங்கள்!!!

nathan

முடி உதிர்தலை தடுக்கத் தேவையான முக்கிய 6 உணவுகள் எவை ? ஆய்வுகள் கூறியவை!!

nathan

கட்டாயம் இதை படியுங்கள் தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் ஆசனங்களின் பங்கு…!

nathan

அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு சில காரணங்கள். அவை எந்தெந்த காரணங்கள். அவற்றால் ஏற்படும் விளைவுகள் என்ன

nathan

ரொம்ப ஆபத்து??சாப்பிட்டபின் இந்த தவறை மறந்தும் செய்யாதீர்கள்!

nathan

தூசி எரிச்சலை ஏற்படுத்துமா? கட்டுப்படுத்த எளிய குறிப்புகள்

nathan

அதிகம் பயப்படுபவரா நீங்கள் அப்போ இத செய்யுங்கள்!…

sangika