27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
10 juice 1519987297
ஆரோக்கிய உணவு

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ் -தெரிஞ்சிக்கங்க…

நம் உடலில் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் மிகவும் முக்கியமான பணிகளை செய்கின்றன. அதுவும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து, உடலினுள் ஓடச் செய்வதால், இந்த உறுப்புக்களில் கழிவுப் பொருட்கள் அல்லது டாக்ஸின்களின் அளவு நாம் நினைப்பதை விட அதிகமாகவே இருக்கும். மேலும் அன்றாடம் நாம் அனைவருமே ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மட்டும் தான் சாப்பிடுகிறோமா என்ன? நிச்சயம் இல்லை. இப்படி ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களையும் உண்பதால், உடலினுள் ஏராளமான அளவில் கழிவுகள் தேங்க வாய்ப்புள்ளது. பலரும் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்வது என்பது கடினமான ஓர் செயல்முறை என்று நினைக்கலாம். ஆனால் இந்த உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு சரியான பொருட்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தினாலே போதும்.

இக்கட்டுரையில் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்யும் ஜூஸ்கள் மற்றும் அந்த ஜூஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் உடலில் இருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறுவதோடு, கொழுப்புக்களும் கரைந்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். சரி, இப்போது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்யும் ஜூஸ்கள் குறித்து காண்போமா…!

போதுமான தண்ணீர் குடிப்பது அவசியம் பொதுவாக எந்த ஒரு உறுப்பையும் சுத்தம் செய்ய ஆரம்பிக்கும் போது, முதலில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக 2-3 லிட்டர் தண்ணீரை தினமும் குடிக்க வேண்டியது அவசியம். இப்படி ஒருவர் போதுமான அளவு நீரைக் குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் எளிதில் வெளியேறும். ஆகவே உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்ய நினைத்தால், முதலில் அதிகளவு நீரைக் குடியுங்கள். powered by Rubicon Project அடுத்ததாக, ஜூஸ்களில் சேர்க்கப்படும் பொருட்களின் நன்மைகள் குறித்துக் காண்போம்.

தர்பூசணி தர்பூசணி சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தும். ஏனெனில் இதில் வளமான அளவில் வைட்டமின் சி, பேண்டோதெனிக் அமிலம், காப்பர், பளோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ (கரோட்டினாய்டுகள்), வைட்டமின் பி1, வைட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் உள்ளது. அதோடு, தர்பூசணியில் நீர்ச்சத்தும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.

ஸ்ட்ராபெர்ரி சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த டாப் 50 உணவுகளைப் பட்டியலிட்டனர். அந்த பட்டியலில் ஸ்ட்ராபெர்ரியும் ஒன்று. ஆய்வாளர்கள் ஸ்ட்ராபெர்ரி, சர்க்கரை மற்றும் இரத்த சர்க்கரை அளவிற்கும் இடையேயான உறவு குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதில் அதிகளவு சர்க்கரை, தேவையில்லாத இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது தெரிய வந்தது. ஆனால் ஸ்ட்ராபெர்ரி பழம் உயர்ந்து இருக்கும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக தெரிய வந்தது. எனவே உங்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள நினைத்தால், ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிடுங்கள்.

அதோடு இப்படி இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்வதற்கு காரணமாக பாலிஃபீனால்கள் தான் காரணம் எனவும் கண்டறிந்தனர். ஆகவே சர்க்கரை நோயாளிகள் இந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை அச்சமின்றி அன்றாடம் ரசித்து ருசிக்கலாம்.

மாம்பழம் மிகவும் பிரபலமான மாம்பழம், அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் பழம். இது நல்ல சுவையுடன் இருப்பதோடு, நல்ல ப்ளேவரையும் கொண்டது. அதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளையும் தன்னுள் கொண்டது. மாம்பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் பாலி பீனோலிக் ஃப்ளேவோனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் நிறைந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றில், மாம்பழத்தில் குடல், மார்பகம், இரத்தம், புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுத்து பாதுகாப்பு அளிக்கும் பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே பல்வேறு சோதனை ஆய்வுகளிலும், மாம்பழத்தில் உள்ள பாலிபீனோலிக் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மார்பகம் மற்றும் குடல் புற்றுநோயைத் தடுப்பதாக கண்டறியப்பட்டிருந்தது.

தொடர்ச்சி… மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ப்ளேவோனாய்டுகளான பீட்டா-கரோட்டீன், ஆல்பா-கரோட்டீன் மற்றும் பீட்டா-கிரிப்டோஜாந்தின் போன்றவை அதிகளவில் உள்ளது. இத்துடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் உள்ளது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க தேவையானவையாகும். இதில் உள்ள கரோட்டீன்கள் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

நற்பதமான மாம்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. 100 கிராம் மாம்பழத்தில் 156 மிகி பொட்டாசியமும், 2 மிகி சோடியமும் உள்து. பொட்டாசியம், உடலில் திரவங்களின் அளவைக் கட்டுப்படுத்த மற்றும் செல்களுக்கு தேவையான சத்தாகும். மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும்.

சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில் கல்லீரலை சுத்தம் செய்யவும், நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் உதவும். ஒருவர் சிட்ரஸ் பழங்களை அன்றாடம் சாப்பிட்டால், அது தலைவலி, நாள்பட்ட சோர்வு, அடிவயிற்று பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும்.

கேரட் கேரட் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது தெரியும். அதோடு கேரட் சூப்பர் உணவுகளுள் ஒன்றும் கூட. ஏனெனில் இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும், மாரடைப்பில் இருந்து தடுக்கும், குறிப்பிட்ட புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும் மற்றும் இளமையிலேயே முதுமையாக காட்சியளிப்பதைத் தடுக்கும்.

புதினா புதினா குளிர்ச்சி நிறைந்தது. இது உடலை சுத்தம் செய்வதோடு, வேறு பல ஆரோக்கிய நன்மைகளையும் தன்னுள் கொண்டது. அதில் தலைவலி, அஜீரண கோளாறு, சுவாச பிரச்சனைகள், குமட்டல், காய்ச்சல், வயிற்று வலி மற்றும் வயிற்று பிடிப்புக்களில் இருந்து விடுவிக்கும். புதினாவில் மென்தால், மென்தோன் மற்றும் மென்தில் எஸ்டர் உள்ளது. இதனால் தான் இது நல்ல நறுமணத்துடன், பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் ஜூஸ்! தயாரிக்கத் தேவையான பொருட்கள்: * ஸ்ட்ராபெர்ரி – 1 கப் * எலுமிச்சை – 1 * தர்பூசணி – 5 கப் * புதினா – சிறிது

தயாரிக்கும் முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸை தினமும் ஒரு டம்ளர் என ஒரு 10 நாட்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும். இதனால் உங்கள் சிறுநீரகங்கள் சுத்தமாக இருக்கும்.

கல்லீரலை சுத்தம் செய்யும் ஜூஸ்! தேவையான பொருட்கள்: * தோல் நீக்கப்பட்ட எலுமிச்சை – 1 * தோல் நீக்கப்பட்ட மாம்பழம் – 1 கப் * தோல் நீக்கப்பட்ட ஆரஞ்சு – 3 * தோல் நீக்கப்பட்ட கேரட் – 3

தயாரிக்கும் முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பானத்தை தினமும் ஒரு டம்ளர் என 10 நாட்கள் குடித்து வர, கல்லீரலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகள் வெளியேறி, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

10 juice 1519987297

Related posts

பன்னீர் பற்றி கவனத்தில் வைக்க வேண்டியவை

nathan

1 பழம்… 14 பலன்கள்… பிரமிக்கவைக்கும் மாதுளை!

nathan

கறிவேப்பிலைப் பொடி

nathan

ப்ரோக்கோலி புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது

nathan

வேகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

nathan

பழங்களின் மருத்துவ குணங்கள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பச்சை மிளகாயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் மகத்துவமிக்க பலன்கள்

nathan

சிவப்பு நிற பழங்களில் எவ்வளவு நன்மைகள்? தெரிஞ்சிக்கங்க…

nathan