ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டின் சூழலுக்கு ஏற்ப, கலாச்சாரத்திற்கு ஏற்ப வாழ்வியல் சார்ந்த அனைத்தும் கடைப்பிடிக்கப்படும். வாழ்வியலில் மிகவும் முக்கியமானது உடல்நலம், ஆரோக்கியம். நமது நாட்டில் பாட்டி வைத்தியம், ஆயுர்வேதம் என்பதை போல, ஒவ்வொரு நாட்டிலும் ஒருசில வைத்திய முறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்த வகையில், ஜப்பானில் நீர் சிகிச்சை என்பது மிகவும் பிரபலமானதாக இருந்து வருகிறது. இது ஒருவகையான ஜப்பானிய பாரம்பரிய மருத்துவ முறை எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த நீர் சிகிச்சை முறை இந்தியா, சீனா, எகிப்து மற்றும் ஐரோப்பிய கண்டத்திலும் கூட கடைபிடிக்கப்பட்டு வந்த பண்டையக் காலத்து மருத்துவ முறை தான் என்றும் கூறுகிறார்கள்.
ஒன்றரை லிட்டர்
தண்ணீர் நாள்தோறும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில், பல் துலக்குவதற்கு முன்னரே ஒன்றரை லிட்டர் தண்ணீரை குடித்துவிட வேண்டும். இதனால் உடல் உறுப்புகள் கழிவுகள் நீக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மேலும் உடல் சூடும் குறைகிறது.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இதுவொரு சிறந்த சிகிச்சை ஆகும். உடல் உறுப்புகள் சுத்தமாவது மட்டுமின்றி உடலில் உள்ள நச்சுக்களும் அழிவதால் மலச்சிக்கல் அறவே ஏற்படாது.
இதர உணவுகள்
நீங்கள் காலை எழுந்து நீர் குடித்த ஒரு மணி நேரத்திற்கு வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது. காபி, டீ, நொறுக்கு தீனிகள், காய்கறி, பழம் என எதையும் சாப்பிடக் கூடாது.
நரம்பு மண்டலம் முக்கியம்
நீங்கள் காலையில் நீர் அருந்துவதற்கு முந்தைய நாள் இரவு உணவு உண்ட பிறகு, நரம்பு மண்டலத்தை பாதிக்கும் எந்த ஒரு பொருளையும் உட்கொள்ளக் கூடாது. கஞ்சா போன்ற போதை பொருள், மது, சிகரட் என எதுவும் கூடாது.
தூய்மையான நீர்
ஒருவேளை நீங்கள் வீட்டில் சேமித்து வைத்திருக்கும் நீர் அசுத்தமாக இருக்கிறது என்று எண்ணினால், இரவே அதை காய்ச்சி, வடிக்கட்டி எடுத்து வைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. ஏனெனில், ஜப்பான் நீர் சிகிச்சையில் நீரின் தூய்மை மிகவும் அவசியமானது.
சிரமம்
ஆரம்ப நாட்களில் இதுக் கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால், போக, போக உங்களது உடல் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க ஆரம்பித்த பிறகு, உங்கள் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பல உடல் உபாதைகள், உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் குறைக்க முடியும்.
மருந்து,
மாத்திரை தேவை இல்லை தலைவலி, இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதயப் படபடப்பு, மயக்கம், இருமல், சளி , கல்லீரல் நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் , பித்தக் கோளாறுகள், உடல் எடை, வாயுத்தொல்லை, வயிறு சார்ந்த பிரச்சனைகள், இரத்தக் கடுப்பு, மலச்சிக்கல், இரத்தப்போக்கு, நீரழிவு, மாதவிடாய் நாட்கள் தள்ளிப் போவது, வெள்ளை படுதல் என பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகள் இன்றி கட்டுக்குள் வைக்கவும், தீர்வுக் காணவும் இந்த ஜப்பானிய நீர் சிகிச்சை முறை பயனளிக்கிறது.
சில நாட்களில்
இந்த ஜப்பானிய நீர் சிகிச்சை முறையை கடைப்பிடித்து வந்தால் ஓரிரு நாட்களில் மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் பித்தம் மற்றும் வாயுத்தொல்லை போன்றவற்றுக்கு தீர்வுக் காண முடியும்.
வாரங்களில்
மேலும் நீரிழவு நோய் சர்க்கரை அளவு ஏறக்குறைய இருந்தால் ஏழே நாட்களில் அதை கட்டுக்குள் கொண்டுவர முடியும். மற்றும் நான்கு வாரங்கள் இந்த ஜப்பான் நீர் சிகிச்சை முறையை கடைபிடித்து வந்தால் இரத்த அழுத்தத்தை சீராக்கிவிட முடியும் என்றும் கூறப்படுகிறது.
வாட்டர் கியூர்
தற்போதைய மருத்துவ வழக்கத்தில் இந்த ஜப்பானிய நீர் சிகிச்சை முறை “வாட்டர் கியூர்” என்றும் “வாட்டர் தெரபி” என்றும் கூறுகிறார்கள்.