23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22 622084ac0
அழகு குறிப்புகள்

திகைப்பில் உலக நாடுகள் !ரஷிய ராக்கெட்டில் இந்தியகொடி ?

செயற்கைக்கோள்களை ஏற்றிச் செல்லும் ராக்கெட்டில் இந்தியாவின் கொடியை மட்டும் மறைக்காமல் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது.

உலக வரலாற்றில் முதல் முறையாக, பூமியில் நடைபெறும் போரின் தாக்கம் விண்வெளியில் உணரப்பட உள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது விதித்த பொருளாதாரத் தடைகளால் சர்வதேச விண்வெளி நிலையம் கேள்விக்குறியாகும் என்று ரஷியா கூறியதை அடுத்து, தற்போது தாங்கள் ஏவவுள்ள ராக்கெட்டில் இருந்து விண்வெளித் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளையும் அகற்றியுள்ளனர்.

இந்தியாவின் கொடியைத் தவிர ! ரஷிய விண்வெளி நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் (ROSCOSMOS)-இன் தலைவர் டிமிட்ரி ரோகோசின், வெள்ளிக்கிழமை ஏவப்பட உள்ள ஒன்வெப் (OneWeb) ராக்கெட்டில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கொடிகளை பைகோனூர் ஏவுதளத்தில் உள்ள தொழிலாளர்கள் மறைப்பதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டார்.

ஆனால், அதில் இந்தியாவின் கொடி அப்படியே விடப்பட்டது. மேலும் வீடியோவை வெளியிட்ட, ரோகோசின் ரஷிய மொழியில், “பைக்கோனூரில் உள்ள ஏவுகணைகள் சில நாடுகளின் கொடிகள் இல்லாமல், எங்கள் ராக்கெட் மிகவும் அழகாக இருக்கும் என்று முடிவு செய்தோம்”என்று தெரிவித்தார்.

இதன்படி பைக்கோனூர் ஏவுதளத்தில் உள்ள ஏவுகணைகள், சோயூஸ் ராக்கெட்டில் உள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து கொடிகளில் வெள்ளை ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, அவை முழுவதுமாக மறைக்கப்பட்டது.

சோயூஸ் ராக்கெட் பல்வேறு நாடுகளில் இருந்து 36 செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது, இது ஒன்வெப் திட்டத்தின் கீழ் பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்கும்.

இந்த திட்டம் 648 செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவற்றில் 428 செயற்கைக்கோள்கள் ஏற்கனவே ஏவப்பட்டுள்ளன, அவை அனைத்தும் சோயூஸ் ராக்கெட்டை பயன்படுத்துகின்றன.

பார்தி ஏர்டெல் குழுமம் மற்றும் இங்கிலாந்து அரசு இந்த திட்டத்தின் உரிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவப்பழகு ஸ்க்ரப்

nathan

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல தொகுப்பாளினி யார் தெரியுமா?

nathan

முடி உதிர்தல், இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணி

nathan

‘டிரை பிரஷ்ஷிங்’ பயன்படுத்துவது பற்றித் தெரியுமா?

sangika

சனியின் மாற்றம்: இந்த ராசிகளின் காட்டில் பண மழை

nathan

சூப்பர் டிப்ஸ்.. முக அழகிற்கு…

nathan

உங்கள் வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருக வேண்டுமா?

nathan

கருவளையத்திற்கு தீர்வு தரும் எலுமிச்சை

nathan

ருசியான காராமணி பூண்டு பிரியாணி எப்படிச் செய்வது?

sangika