24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
15881629
ஆரோக்கிய உணவு

காலையில் சாப்பிட கூடாதவைகளும் சாப்பிட வேண்டியவைகளும்…!!தெரிஞ்சிக்கங்க…

காலையில் காபிக்கு மற்றும் டீக்கு பதிலாக இளம் சூடான தண்ணீர் குடித்தால், உடல் எடை குறையும், கழிவுகள் வெளியேறும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சருமம் இளமையாகும், புத்துணர்வு கிடைக்கும், செரிமானம் சீராகும், மலச்சிக்கல் சரியாகும்.

வெறும் வயிற்றில் காரமான உணவை உண்ணுவதால், இரைப்பையில் எரிச்சல் ஏற்படுத்தும். உணவு செரிமானம் ஆகாமல் போய்விடும். ஆதலால் நட்ஸ் – பாதாம் போன்ற கொட்டைகளை இரவு ஊறவைத்து, காலையில் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். இரைப்பையில் pH அளவுகளை சீராக வைக்க உதவும். நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்.15881629

காலை நேரத்தில் புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அவை இரைப்பையில், அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாகும்.

காலையில் இனிப்பை சாப்பிடுவதால், உங்கள் இன்சுலின் அளவுகளை அதிகரித்து, நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும். தேனை காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால் உடலுக்கு பலம் தரும்.

தேனோடு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் ரத்தம் சுத்தமாகும். ரத்த ஓட்டம் சீராகும். வயிற்று எரிச்சலை குறைக்கும். செரிமானத்திற்கு உதவும். தூக்கமின்மை போகும். உடல் எடை குறையும்.

தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால், வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை தவிர்க்கலாம்.

கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றை பச்சையாகவே சாப்பிடலாம். ரத்தம் அபிவிருத்தியாக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். உடல் எடை குறையவும் உதவும். சருமத்தை பளபளப்பாக்கும்.

வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்டால், வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்தத்தில் அதிகமாக கலக்க நேரிடும். அது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். அதற்கு பதிலாக வெந்தயத்தை இரவில் ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

Related posts

சூப்பர் டிப்ஸ் செவ்வாழையில் இத்தனை நன்மைகளா?

nathan

தெரிந்துகொள்வோமா? அடிக்கடி பச்சையாக கேரட்டை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்தக கலவை சிறந்ததாக இருக்கும்!…

sangika

தெரிந்துகொள்வோமா? ஆரஞ்சு பழத்தின் தோலில் நிறைந்துள்ள ஆச்சரியப்பட வைக்கும் நன்மைகள்!

nathan

சுவையான அரைக்கீரை பொரியல்

nathan

சர்க்கரை நோயாளி வெறும் வயிற்றில் காபி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?

nathan

தெரிந்து கொள்ளுங்கள்!புற்றுநோயை தடுக்கும் சிறந்த மூன்று பழங்கள் எவை என்று தெரியுமா உங்களுக்கு?.

nathan

உண்மையில் கார்ன் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

nathan

உணவுக்குடல் புற்று நோயை தடுக்கும் அருமருந்து நெல்லிக்காய நீர்!!

nathan