25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
670402742Gauva
தொப்பை குறையஆரோக்கிய உணவு

தொப்பை குறைக்கும், இதய நோய் தடுக்கும்… 5 பழங்கள்! தெரிஞ்சிக்கங்க…

கொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை… எளிதாகக் கிடைக்கும் பழங்கள். இந்தப் பழங்களில் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. பழங்கள் எண்ணற்ற நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தரக்கூடியவை. மலச்சிக்கல் தொடங்கி இதய நோய் வரை அனைத்தையும் குணப்படுத்தக்கூடியவை என்று சொன்னால் மிகையாகாது.

19

கொய்யா
கொய்யாப்பழம். இது, விலை மலிவாகக் கிடைக்கும் பழங்களில் ஒன்று. இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், வளரும் சிறார்களின் எலும்புகளுக்கு பலமும் உறுதியும் தரும். மலச்சிக்கல் கோளாறு இருப்பவர்கள் நார்ச்சத்து நிறைந்த கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வெறுமனே சாப்பிடப் பிடிக்காதவர்கள் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம்.
சொறி, சிரங்கு மற்றும் ரத்தச்சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் நிறைந்த கொய்யா தோல் வறட்சியைப் போக்குவதுடன் முதுமைத் தோற்றத்தைக் குறைத்து இளமையை மிளிரச் செய்யும்.

20

பப்பாளி
ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழங்கள் வரிசையில் பப்பாளியும் ஒன்று. இதில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளதால், பல் தொடர்பான குறைபாட்டையும் சிறுநீர்ப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்கவும் நல்லதொரு மருந்தாகிறது. மேலும், இது நரம்புகள் வலுப்பெறவும், ஆண்மை பலம் பெறவும், ரத்த விருத்தி பெறவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும் துணைபுரியக்கூடியது.

பெண்களைப் பாடாகப்படுத்தி எடுக்கும் மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்ய நல்லதொரு மருந்தாகச் செயல்படுகிறது. மேலும் இதில் உள்ள கரோட்டின் சத்து, புற்றுநோய்க்கு எதிரியாகும். நுரையீரல் புற்று, உணவுக்குழாய் மற்றும் இரைப்பைப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கக்கூடியது.

பழுக்காத பப்பாளிப்பழத்தை (நன்கு கனியாதது) தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால், சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். மேலும் செரிமானக் கோளாறு, வயிற்றுக்கடுப்பு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல மருந்தாகும்.

21

அன்னாசி
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து உள்ளது. இது உடலுக்கு பலம் தருவதுடன், ரத்தத்தை விருத்தி செய்யக்கூடியது. வெள்ளைப்படுதல் பிரச்னை உள்ள பெண்கள் தொடர்ந்து அன்னாசிப்பழம் சாப்பிட்டு வந்தால், நிவாரணம் கிடைக்கும். அன்னாசியில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீஸ், மினரல் போன்ற முக்கிய சத்துகள் அடங்கியுள்ளன. மினரல் சத்துகள் உடலில் ஏற்படும் வளர் சிதை மாற்றத்துக்கு முக்கியப் பணி ஆற்றக்கூடியது. கொழுப்புச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள அன்னாசி இதய நோய் வராமல் தடுக்கக்கூடியது.

தொப்பை பலரை பாடாய்ப்படுத்தி எடுக்கும் பிரச்னை. அப்படிப்பட்டவர்களுக்கு அன்னாசி நல்ல மருந்து. அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு டேபிள்ஸ்பூன் பொடியாக்கிய ஓமம் சேர்த்து நீர் ஊற்றி காய்ச்ச வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எழுந்து வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாள்கள் குடித்துவந்தால், தொப்பை குறையும். மிளகு ரசத்துடன் அன்னாசிப்பழம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

22

மாதுளை
இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்கள் உள்ள மாதுளம்பழம் இதயம், மூளை போன்றவற்றுக்கு சக்திதரக்கூடியது. புளிப்பு மாதுளை வயிற்றுக்கடுப்பைப் போக்கும். ரத்தபேதிக்கு நல்ல மருந்தான மாதுளை, தடைபட்ட சிறுநீரை வெளியேற்றவும் செய்யும். குடல்புண்ணையும் ஆற்றும்.
கர்ப்பக் காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த மாதுளம்பழத்தின் சாற்றை அருந்தினால் பலன் கிடைக்கும். மேலும், கர்ப்பக்கால ரத்தச்சோகையைப் போக்கும். பொதுவாக அனைவருக்கும் வரக்கூடிய உடல்சோர்வைப் போக்க மாதுளம்பழத்தின் சாற்றுடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.
கடுமையான இதய வலியைக் குணமாக்க மாதுளை நல்மருந்து. மாதுளம்பழத்தின் மேல்புறம் ஓட்டை போட்டு, அதன் உள்ளே 15 மி.லி பாதாம் எண்ணெயை ஊற்றி, பாத்திரத்தில் வைத்து சூடுபடுத்தினால் பழத்துடன் எண்ணெய் கலந்துவிடும். பிறகு அந்தப் பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி நிற்கும்.

23

வாழை
இயற்கையாகவே வாழைப் பழங்கள் அமில எதிர்ப்புச் சக்தி நிறைந்தவை. அதனால், தினமும் வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், மெலிந்த தேகம் உள்ளவர்கள் என அனைவருமே வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதன் பலனை பெற்றுக்கொள்ளலாம்.

புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமென்றால், வாழைப் பழத்தைச் சாப்பிடலாம். வாழைப்பழத்தில் உள்ள பி 6, பி 12 போன்றவை புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோட்டினை சிறிது சிறிதாக குறைக்க உதவும். இதன் மூலம் புகைபிடிப்பதில் இருந்து விடுபட முடியும்.

Related posts

தினமும் 1 முட்டையா? ஆண்மை குறைவா?!

sangika

கீரைகளும் மருத்துவப் பயன்களும் 40 வகை

nathan

உங்களுக்கு தெரியுமா 2 வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாத எலுமிச்சை ஊறுகாய்!.. செய்வது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

nathan

வல்லாரை கீரையில் உள்ள வல்லமை இவ்வளவு நாளா தெரியாம போச்சே!

nathan

தினசரி உணவுகளில் சேர்க்கப்படும் இந்த இரசாயனங்களால் உயிருக்கே ஆபத்தாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா புழுங்கலரிசியா? பச்சரிசியா? எது ஆரோக்யத்துக்கு நல்லது.

nathan

பூசணிக்காயை விரும்பி சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள்

nathan