22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
Hdf69a8b0fd914065a6a3e5
ஆரோக்கியம் குறிப்புகள்

ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பெண்களின் ஹேண்ட் பேக்குகள்.!தெரிஞ்சிக்கங்க…

பெண்கள் கண்ணைக் கவரும் அழகுடன் இருக்கும் கைப்பையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

பெண்கள் எங்கு சென்றாலும், கைப்பையை எடுத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. பல வகைகளில் கைப்பைகள் தயாரிக்கப்படுகின்றன. கண்ணைக் கவரும் அழகுடன் இருக்கும் அவற்றை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அதைப்பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

முதுகுத்தண்டு பாதிப்பு:

பெண்கள் தற்போது, பெரிய அளவிலான கைப்பைகளைப் பயன்படுத்துகின்றனர். இதில், பல பொருட்களை வைத்துக்கொண்டு தோளில் சுமந்து செல்கின்றனர். இதனால், தோள்பட்டை பகுதிக்கான ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும், தோள்பட்டையில், கைப்பை மாட்டும் இடத்தில், அதிகம் அழுத்தம் ஏற்படும். இதன் காரணமாக, நரம்புகள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சினை தோள், கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு என பரவலாம்.

உருவத்தில் மாற்றம்:

தோள்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தரும் வகையிலான ‘ஹேண்ட் பேக்’ மாட்டும் போது, அதற்கேற்ப தோளின் ஒரு பக்கம் தாழ்வாகவும், மற்றொரு பக்கம் உயர்த்தி இருக்கும் வகையிலும் இயல்பாக மாறும் நிலை ஏற்படும். இதனால், நாளடைவில் இரு தோள்களும் சமமாக இல்லாமல், ஒருபுறம் கீழாகவும், மறுபுறம் மேலாகவும் இருப்பது போல் தோற்றமளிக்கும். அதேபோல், முதுகில் அதிக எடையை சுமந்து செல்லும்போது, முதுகுத் தண்டுவடம் வளைந்து கூன் விழவும் வாய்ப்புள்ளது. இதைத் தவிர்ப்பதற்கு சில மாற்று வழிகளை பின்பற்றலாம். அவை:

சுமைகளை எளிதாக்குதல்:

பையில், எந்த பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை முன்னரே தீர்மானிக்க வேண்டும். அதற்கேற்ப, அவசியமான பொருட்களை மட்டும் ஹேண்ட் பேக்குகளில் எடுத்துச் செல்லலாம். செல்லும் இடத்தில், தேவையான பொருட்கள் மட்டும் வாங்க வேண்டும். இதனால், சுமைகளை எளிதாக்க முடியும்.

அடிக்கடி மாற்றுதல்:

அதேபோல், ஹேண்ட் பேக்குகளில் அதிக எடை இருப்பதாக உணரும்போது, அதை நீண்ட நேரம் ஒரே தோளில் சுமந்து செல்வதைத் தவிர்க்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை, பையை ஒவ்வொரு தோளிலும் மாற்றலாம். இதன் மூலம் தோளில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். இல்லாவிடில், சிறிது நேரம் ஹேண்ட் பேக்கை கழற்றிக் கைகளில் பிடித்துக் கொள்வதால், தோள் பகுதிக்கு ஓய்வு கொடுக்க முடியும்.

மைக்ரோ பைபருக்கு மாறுங்கள்:

பெண்கள் பலரும் தோல் ரக ஹேண்ட் பேக்குகளைத்தான் அதிகம் விரும்புகின்றனர். இது ஆரோக்கியமானது என்றாலும், இந்த வகையான பைகளின் எடை, சற்று அதிகமாக இருக்கும். அதனுடன், நாம் கூடுதலாகப் பொருட்கள் வைக்கும்போது, எடை மேலும் அதிகரிக்கும். இதற்குப் பதிலாக, ‘மைக்ரோ பைபர்’ ரகப் பைகளைப் பயன்படுத்தும்போது, எடை குறைவாக இருக்கும்.- source: maalaimalar

Related posts

தெரிஞ்சிக்கங்க…மன அழுத்தம் ஏற்பட இவை தான் காரணங்கள்.!

nathan

அபார்சன் ஏற்படமால் தவிர்ப்பது எப்படி?.!!

nathan

திருமணத்துக்கு பின் மனைவியிடம் கணவன் இதெல்லாம் கேட்கவே கூடாதாம்..!அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்

nathan

உங்களுக்கு இதுல எந்த மாதிரி தொப்பை இருக்குன்னு சொல்லுங்க.. அதை குறைக்கும் தீர்வுதான் இது.!

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! இளம் பெண்கள் கவனத்திற்கு,. இரவில் உறங்கும் போது இதை மறவாதீர்…

nathan

வீடு முழுக்க கொசு தொல்லையா? விரட்டி அடிக்க இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இந்த 5 ராசிக்காரங்க அவங்களுக்கு வேணும்ங்கறது கிடைக்க எப்படி வேணாலும் ட்ராமா போடுவாங்களாம்…

nathan

வாயை சுத்தமாக, துர்நாற்றமின்றி வைக்க இதோ சில வழிகள்…

nathan