திருநீற்றுப்பச்சை 4 இலைகளை மென்று சாறை விழுங்க வாய்ப்புண் குணமாகும்.
1 பிடி நெல்லியிலைகளை நன்கு கொதிக்கவைத்து இளம்சூட்டில் வாய் கொப்புளிக்க வாய்ப்புண் குணமாகும்.
நெல்லிபட்டையை தூள் செய்து தேனில் குழைத்து வாய்ப்புண் மீது தடவ குணம் ஆகும்.
மணத்தக்காளி இலைகளை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.
மணத்தக்காளி இலைகளை மென்று சாறை 1 நாளைக்கு 6 முறை விழுங்கி வர வாய்ப்புண் குணமாகும்.
மருதாணி இலைகளை 1 மணிநேரம் ஊறவைத்து காய்ச்சிய கஷாயத்தால் வாய் கொப்புளிக்க வாய்வேக்காடு, வாய்ப்புண், தொண்டைப்புண் ஆறும்