25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
22 6211a1680
அழகு குறிப்புகள்

வெளிநாடு ஒன்றில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட இலங்கை பெண் -பதற வைக்கும் தகவல்!

இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டுக்காக பணிப்பெண்ணாக சென்ற போது தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்றவரை வீட்டு உரிமையாளர் தடுத்து வைத்து மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

தான் சுகயீனமடைந்த நிலையில் இருப்பதாகவும் உரிமையாளர் தன்னை விடுவிக்க பல லட்சம் ரூபாய் பணம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனவும் தன்னை அந்த நபரிடம் இருந்து காப்பாற்றுமாறும் குறித்த பெண் தனது காணொளியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த பெண்ணை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான உதவிகளை அந்த நாட்டு தூதரகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, சுற்றுலா விசா மூலம் டுபாய் நாட்டிற்கு சென்ற இலங்கை பணிப்பெண்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் இலங்கைப் பெண்கள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்குள்ளாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுலா விசாவில் டுபாய்க்கு அழைத்துச் செல்லப்படும் பெண்களை வேலைக்கு அனுப்பாமல், உணவு நீர் வழங்காமலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது

Related posts

கருவளையத்திற்கு தீர்வு தரும் எலுமிச்சை

nathan

கோடைக்காலங்களில் சரும நோய்

nathan

துண்டுகளையும், வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து சுவையான பாயாசம்

sangika

சிறுநீரக கல் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் எலுமிச்சை

nathan

வெளிவந்த தகவல் ! நடிகர் சரத்குமாரை அறிமுகப்படுத்தியது இவர்தான்!

nathan

கருவளையம் போக்கும் கைமருந்து

nathan

சருமத்தைப் பாதுகாப்பதுப் எப்படி?…..

sangika

ஜூஸில் விஷமா? நான் பண்ணல.. கோர்ட்டில் அந்தர்பல்டி அடித்த காதலி..

nathan

சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் விவாகரத்து!! திருமண வாழ்க்கையை உடைத்த தம்பி

nathan