31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்

நள்ளிரவில் நீண்ட நேரம் போன் பேசிய மனைவி… கணவனுக்கு நேர்ந்த சோகம்!

நீண்ட நேரம் செல்போனில் பேசிய மனைவியை தட்டிக்கேட்ட கணவனை நேர்ந்த கதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி பாரீஸ் நகரைச் சோ்ந்தவா் இலக்கியா(24). இவர் மேடை நடனக் கலைஞா்களுக்கு ஒப்பனை செய்யும் வேலைபாா்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி அருகே நடைபெற்ற நடன நிகழ்ச்சிக்கு வந்த போது, எடப்பாடியை அடுத்த மசையன் தெரு பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதனால், இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவா்கள் இருவரும் பெற்றோா் எதிா்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டனா்.

மேலும், இந்த தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் சிலகாலம் பிரிந்து வாழ்ந்துள்ளனர். அதன் பின்னர் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த நாள் இரவு இலக்கியா செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தத போது செல்போனில் நீண்ட நேரம் யாருடன் பேசுகிறாய் என மனைவியிடம் பாலமுருகன் கேட்டுள்ளாா்.

இதில் ஆத்திரம் அடைந்த இலக்கியா, சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து பாலமுருகனை பலமுறை குத்தியுள்ளார். இதனால், படுகாயமடைந்த பாலமுருகனை அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாா், கையில் ரத்தக் கறையுடன் நின்றுகொண்டிருந்த இலக்கியாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

உங்களுக்கு தெரியுமா தேங்காய் பாலை கொண்டு முக பருக்களை நீக்கி இளமையான முகத்தை பெறுவது எப்படி..?

nathan

முகத்தில் ஆப்பிள்சாறு

nathan

Dry Brushing. பிரபலமாகும் அழகு சிகிச்சை

nathan

உங்கள் அழகை அதிகரிக்க ஒரு சிம்பிள் வழி சொல்லட்டுமா? நீங்கள் முப்பதுகளில் இருக்கிறீர்களா?

nathan

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

nathan

பூர்ணாவை பார்த்து மற்ற நடிகைகள் கத்துக்கோங்க.. நிர்வாண காட்சியில் சொன்ன இயக்குனர்..

nathan

எப்போதுமே இளமையான முகத்தை பெற நினைத்தால் அதற்கு இத செய்யுங்கள்….

sangika

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் நீக்கும் எளிய முறை

nathan

வறண்ட சருமத்தை கையாள நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து பார்க்கக் கூடிய சில எளிய தீர்வுகள்

nathan