35.1 C
Chennai
Saturday, Jun 20, 2026
அழகு குறிப்புகள்முகப்பரு

பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் மறைய -சூப்பர் டிப்ஸ்

பசு மஞ்சள் கிழங்கு 1, வேப்பம் தளிர் கொஞ்சம் இரண்டையும் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்கப் போகுமுன் முகத்தைக் கழுவி இந்த விழுதை வடுக்களை மூடுவதுபோல் தடவுங்கள். 15 நிமிஷம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் வடுக்களால் ஏற்பட்ட கருமை மறைந்து தோல் மிருதுவாகும்.

வேப்பங்கொழுந்து 2 கொத்து, கருந்துளசி 5 இலைகள் இந்த இரண்டையும் சேர்த்து அரைத்து அதனுடன் அரை டீஸ்பூன் கடலை மாசைக் கலந்து பருக்கள் மீது பூசி விடுங்கள். நன்றாகக் காய்ந்ததும் கலவையோடு சேர்த்து பருக்களும் உதிர்ந்துவிடும். பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு அரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள்.

முகம் மலர்ந்து விடும். மறுநாள் சிறு துண்டுகளாக்கிய வெட்டி வேர் -5, துளசி இலை 6 இவற்றைக் கொதிநீரில் போட்டு ஆவி பிடித்து பிறகு முகத்தைத் துடைத்துவிட்டு ஐஸ் கட்டிகளை பருக்கள் இருந்த இடத்தின் மேல் வைத்து ஒத்தி எடுத்தால் பருக்கள் இருந்த சுவடுகளே தெரியாமல் போய்விடும், தோலும் மிருதுவாகும்.

நித்திய மல்லிச் செடியின் இலைகளை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து அரைத்து பருக்களின்  மேல் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை நல்ல நீரால் கழுவிக் வந்தால், நாளடைவில் பருக்கள் மறைந்து விடும்.

Related posts

சூப்பரான கத்தரி வெந்தயக்கறி

nathan

புருவம் வளர எளிய வழிகள்

nathan

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் பிரபல தொகுப்பாளினி யார் தெரியுமா?

nathan

முகம் மிகவும் மிருதுவாக எளிய அழகு குறிப்புகள்!!

nathan

புருவ அடர்த்திக்குகாரணம் என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா 2022 இல் இந்த அதிர்ஷ்ட எண் உங்க சக்தியை மின்னல் வேகத்தில் அதிகரிக்கும்….

nathan

பொதுவாகவே முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகிறது எப்படி தெரியுமா..?

sangika

ஹெல்த் ஸ்பெஷல்.. தைராய்டு பிரச்சனைக்கு தீர்வு தரும் சில கீரைகளின் பங்கு…?

nathan

வெளியான தகவல்! சர்வதேச ஏலத்திற்கு செல்லும் இலங்கையின் இரத்தினக்கல்!

nathan