அழகு குறிப்புகள்

உங்கள் மூக்கு உங்களின் குணாதிசயங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

நீங்கள் தும்மும் விதம் மரபணு ரீதியாக இருக்கலாம் என்பது உண்மையான தகவலாகும். நீங்கள் மிக சத்தமாக அல்லது அமைதியாக அல்லது மிதமான முறையில் தும்மலாம். தும்மல் என்பது முப்பெருநரம்பில் அரிப்பு ஏற்பட தொடங்கும் போது உண்டாகும்.

 

அதே போல் சளி உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தும் என்பதும் ஒரு அற்புதமான தகவலாகும். நீங்கள் உங்கள் மூக்கை விரும்பினாலும் சரி, வெறுத்தாலும் சரி, மூக்கைப் பற்றிய அற்புதமான தகவல்களை நம்பித் தான் ஆக வேண்டும்.

 

மூக்கு என்பது மனித முகத்தில் மிக முக்கியமான, பார்த்தவுடன் முதலில் தென்படுகிற ஒரு உறுப்பாகும். மூக்கின் வடிவம் உங்கள் குணாதிசயங்களை கூட குறிக்கும்.

பல்வேறு வடிவங்கள்

நாசி எலும்புகள், கீழ் பக்கவாட்டு குருத்தெலும்புகள் மற்றும் மேல்பக்கவாட்டு குருத்தெலும்புகள் ஆகியவற்றின் நிலைகள் தான் மூக்கின் வடிவத்தை தீர்மானிக்கிறது. இந்த மூன்று பகுதிகளின் ஏதேனும் கலவை அல்லது வேறுபாடுகள், தனித்துவமான மூக்கின் வடிவத்தை உருவாக்கும். பொதுவாக இனத்தின் அடிப்படையிலும் இது அமையும்.

ஜர்னல் ஆஃப் க்ரேனியோஃபேஷியல் சர்ஜெரியில் நடத்தப்பட்ட சமீபத்திய சர்வேயின் படி, 14 மனித மூக்கின் வடிவங்கள் கண்டு கொள்ளப்பட்டது. அதே போல் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ரசாயன பொறியியல் பேராசியரான ஆபிரகாம் தமிர், பி.எச்.டி., 1793 மூக்குகளின் படங்களை சர்வே செய்துள்ளார். அதன் படி இந்த மூக்குகள் அனைத்தும் கிரேக்க மூக்கு (நேரான) முதல் பருந்து மூக்கு (கூர்மையான மற்றும் கீழ்நோக்கி) வரை, அடிப்படை வகையின் கீழ் தான் சேர்ந்துள்ளது. அதில் மிகவும் பொதுவான வகையாக இருந்தது சதைப்பிடிப்பான மூக்கு.

பெரிய மூக்குகள்

பெரிய மூக்குகள் என்றால் மூக்கிற்கு குட்டையான அல்லது நீண்ட பாலத்தை கொண்டிருக்கும். பெரிய நாசித்துளைகளுடன் பரந்த நுனிகளை கொண்டிருக்கும். மூக்கு பெரிதாக இருந்தால், அவர்களுக்கு அதிக வலிமை, இயக்கம், தலைமை, ஈகோ மற்றும் தனிப்பட்டு பணியாற்றும் விருப்பம் ஆகிய குணங்கள் இருக்கும். பெரிய மூக்கை கொண்டவர்களுக்கு கட்டளையிட்டால் பிடிக்காது. தங்களுக்கு தாங்களே முதலாளியாக இருக்கவே அவர்கள் விரும்புவார்கள். மிகப்பெரிய பங்களிப்பை அளிக்க விரும்பும் இவர்கள், சிறிய வேளைகளில் சிறிய அளவே அக்கறை கொள்வார்கள்.

சிறிய மூக்குகள்

நீளத்திலும் அகலத்திலும் சிறியதாக இருக்கும் மூக்குகளின் நுனி தட்டையாகவோ அல்லது வட்ட வடிவிலோ இருப்பதில்லை. ஆக்கப்பூர்வ கற்பனைகள் மற்றும் சிறந்த தன்னிச்சையான இயல்புகளைப் பயன்படுத்தக்கூடிய குழு சார்ந்த நடவடிக்கைகளில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். சில நேரங்களில் அவர்கள் பொறுமை இழந்து, எரிச்சல் அடைவார்கள். இதனால் கோபத்தின் வெளிப்பாடு உச்சத்திற்கு செல்லலாம். ஆனால் அவர்கள் மற்றவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடியவர்கள். அதனால் அடுத்தவர்களின் நன்மைக்காக உதவுவார்கள். அப்படிப்பட்ட வேலைகளை சந்தோஷமாக செய்வார்கள். திரும்பத் திரும்ப செய்யக்கூடிய வேலைகளை அலுப்புத் தட்டாமல் செய்யவும், கடினமாக உழைக்கவும், செய்யும் வேலையை அவர்கள் விரும்பி செய்வார்கள்.

நீண்ட மூக்கு

உங்கள் மூக்கு நீளமாக இருந்தால், நல்ல வணிக ஆற்றல், பொதுவான புள்ளிகள், இலட்சியத்தைப் பற்றிய ஆரோக்கியமான உணர்வு, சிறந்த உள்ளுணர்வுகள் போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். உங்கள் தலைமைக்கு அனைவரும் நேர்மறையான வகையில் ஒத்துழைப்பார்கள். உங்களது மிகப்பெரிய பலத்தில் இருந்து தான் உங்களது மிகப்பெரிய பிரச்சனைகளே அடங்கியிருக்கும்.

குட்டையான மூக்கு

இவ்வகையானவர்கள் விசுவாசத்துடனும், அக்கறையுடனும் இருப்பார்கள். ஆனால் இயக்கம் மற்றும் லட்சியத்தில் சற்று பின்தள்ளியே இருப்பார்கள். போட்டியான நிலைகளில் இவர்களுக்கு உணர்வு ரீதியான வலிமை இருக்காது. கடுமையான ஈகோ மற்றும் இயக்கத்தை கொண்டவர்கள் முன்னால் இவர்கள் பெரும்பாலும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருப்பார்கள். குழந்தை போன்ற இனிமையான, உணர்ச்சி வயப்பட்ட, அன்பான ஆனால் சுலபத்தில் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள்.

நேரான மூக்கு

இதனை கிரேக்க மூக்கு என்றும் அழைப்பார்கள். இவ்வகையானவர்களுக்கு நாசித்துளைகள் குறுகலாக இருக்கும். மேலும் ஈர்க்கத்தக்க வகையிலும் இருக்கும்! நேரான மூக்கை கொண்டவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும், உதவும் குணத்துடனும் இருப்பதாகவும் கருதப்படுகிறார்கள். வாழ்க்கையின் வெற்றிக்கு தொடர்புடைய சீரான கட்டுப்பாட்டை இவர்கள் காண்பிப்பார்கள்.

மேல் பக்கம் திரும்பிய மூக்கு

நீண்ட, வளைந்த, நுனியில் லேசாக மேல்நோக்கிய உச்சத்துடன் கிட்டத்தட்ட குழிவான சாய்வை கொண்ட மூக்கை உடையவர்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாகவும், அன்பானவர்களாகவும், முழுமையான குணமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவ்வகையானவர்கள் அன்பான, ஆதரவு அளிக்கின்ற மற்றும் ஊட்டமளிக்கும் வகையில் இருப்பார்கள்.

கொக்கி வடிவிலான மூக்கு

இவ்வகையான மூக்கை கொண்டவர் பெரிய மூக்கை கொண்டவரின் குணத்துடன் ஒத்துப்போவார். ஆனால் மிகைப்படுத்தல் சற்று இருக்கக்கூடும். இவ்வகையான ஆட்களுடன் சுலபமாக பழக அவர்களை மதித்து, அவர்கள் முக்கியமானவர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். பருந்து போன்ற மூக்கை கொண்டவர்கள் எப்போதும் தங்கள் சொந்த பாதையை பின்பற்றுவார்கள். பல பேர் பின்பற்றும் பாதையை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

ரோமானிய மூக்கு

உங்கள் மூக்கு உங்களின் குணாதிசயங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?

ரோமானிய மூக்கை கொண்டவர்கள் பலசாலியாகவும் லட்சியவாதிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் மிகப்பெரிய தலைவர்களாகவும் திடமான ஆளுமையையும் கொண்டிருப்பார்கள். முடிவுகள் எடுப்பதில் அவர்கள் அவசரப்பட மாட்டார்கள். மேலும் அனைத்தையும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்வார்கள்.

அலை போன்ற மூக்கு

மூக்கின் நுனியில் அலை போன்ற புடைப்பு இருப்பதால் கவனிக்கத்தக்க வகையில் இருக்கும் இத்தகைய மூக்கு. அதே போல் நுனி பெரிதாக காணப்படும். இவர்கள் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியை விரும்பும் குணமுடையவர்கள்.

நூபிய மூக்கு

நீண்ட வடிவிலான இவ்வகையான மூக்கின் அடிப்பகுதி மிகவும் பரந்த வண்ணம் இருக்கும். இவ்வகையான மூக்கை கொண்டவர்களுக்கு ஒரு உதாரணம் கூற வேண்டும் என்றால் அது தான் நம் பராக் ஒபாமா. இவ்வகையானவர்கள் பிரச்சனைகளுக்கு எப்போதுமே புதிய வழியிலான தீர்வுகளை பார்ப்பார்கள். இவர்கள் மிகவும் ஆர்வத்துடனும், திறந்த மனத்துடனும் இருப்பார்கள். ஈர்ப்பு, சொல் திறம் மற்றும் உணர்ச்சி ரீதியாக கட்டுப்படுத்தக் கூடிய குணங்களை இவர்கள் கொண்டிருப்பார்கள்.

Related posts

சூப்பர் டிப்ஸ் உதடுகளை கருமையின்றி வைத்துக் கொள்வது எப்படி?

nathan

ஒவ்வொரு ஸ்கின் டைப்புக்கும் ஒவ்வொரு வகையான மேக்கப் !

sangika

மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்க சில வழிகள் உள்ளன. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

nathan

நீங்களே பாருங்க.! விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு மார்ட்ன் உடையில் சமந்தா…

nathan

யாரையும் மதிக்காமல் விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா? -நடந்தது என்ன?

nathan

ஃபேஷியல் டிப்ஸ்

nathan

உங்கள் முகம், மாசு மரு இல்லாத பளிங்கு போல் பிரகாசிக்க இதோ சில சிகிச்சை முறைகள்…

nathan

முயன்று பாருங்கள்..முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

nathan

முதுமையில் இளமை…

nathan