பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமான ரசனைகள், விருப்பங்கள் இருக்கும். ஆனால் அனைத்து பெண்களுக்குள்ளும் ஒன்று மட்டும் ஒத்துப்போகும். அது என்னவெனில் தாடி வைத்த ஆண்களைப் பிடிப்பது.
ஆம், பல பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும். ஓர் இடத்தில் என்ன தான் ஷேவிங் செய்து ஆண்கள் அழகாக இருந்தாலும், தாடி வைத்த ஆண்களின் மீது தான் பெண்களின் கண்கள் இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
ஆணுக்குரிய தோற்றம்
தாடி வைத்த ஆண்களை பெண்களுக்கு பிடிக்க முதன்மையான காரணம், அது தான் ஆணுக்குரிய தோற்றத்தைத் தருகிறதாம்.
முதிர்ந்த தோற்றம்
தாடி வைத்த ஆண்கள் பார்ப்பதற்கு முதிர்ந்தவராவும் மற்றும் வாழ்க்கை பற்றி மிகவும் தீவிரமானவராகவும் காணப்படுகிறார்களாம். மேலும் பெண்களுக்கு பார்ப்பதற்கு சிறுவர் போன்று காணப்படுபவர்களை விட, முதிர்ந்தவர் (Mature) போன்று காணப்படுபவர்களைத் தான் பிடிக்குமாம்.
முத்தம் கொடுக்க தூண்டும்
தாடி வைத்த ஆண்களைக் காணும் போது முத்தம் கொடுக்கத் தோன்றுவதோடு, அவர்களுக்கு முத்தம் கொடுக்கும் போது, அந்த தாடி உணர்வை மேலும் தூண்டுமாம். அதனாலேயே பெண்களுக்கு தாடி வைத்த ஆண்களைப் பிடிக்கிறதாம்.
வலிமையான தோற்றம்
ஆண்கள் தாடி வைத்திருந்தால், அது அவர்களை வலிமையானவர்களாகவும், நம்பிக்கை உள்ளவர்களாகவும் வெளிக்காட்டுமாம்.
செக்ஸியானவர்கள்
பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்கள் செக்ஸியாக காணப்படுவார்களாம்.
ரவுடி லுக்
முக்கியமாக பெண்கள் தாடி வைத்துக் கொண்டு ரவுடி லுக்கில் இருக்கும் ஆண்களால் தான் அதிகம் ஈர்க்கப்படுவார்களாம். இதற்கு தாடி வைத்துக் கொண்டு இருந்தால், அது அவர்களை தைரியமானவர்களாக காட்டுவதோடு, அவர்களுடன் இருந்தால் நல்ல பாதுகாப்பு கிடைக்கும் உணர்வு ஏற்படுவது தான் காரணமாம்.
அனைத்து உடைகளும் பொருந்தும்
ஆண்கள் தாடி வைத்திருந்தால், எந்த உடை அணிந்தாலும் பொருத்தமாக இருப்பதோடு, பெண்களின் கண்களை கவரும் வண்ணம் இருக்கிறார்களாம்.
ட்ரிம் செய்வதே சிறந்தது
முக்கியமாக பெண்களுக்கு நீளமாக தாடி வைத்திருக்கும் ஆண்களைப் பிடிக்காது. அளவாக அல்லது தாடியை ட்ரிம் செய்து ஸ்டைலாக இருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும்.