30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
headache
மருத்துவ குறிப்பு

தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

ஒருவருக்கு தலைவலி பல காரணங்களால் வரும். அதில் இரத்த நாளங்கள் சுருங்கினால், நியூரான்களின் அசாதாரண செயல்பாடு, மரபணுக்கள், அதிகமாக புகைப்பிடிப்பது, அதிகமாக மது அருந்துவது, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, அதிகமாக தூங்குவது, வலி நிவாரணியை அதிகமாக பயன்படுத்துவது, கழுத்து மற்றும் கண்களுக்கு கொடுக்கப்படும் சிரமம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பலர் தலைவலி வந்தால், வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் தலைவலியில் இருந்து உடனடி நிவாரணத்தை ஒருசில இயற்கை வழிகள் வழங்கும். உடல் வறட்சியால் தலைவலி வந்தால், தண்ணீர் குடித்ததும் சில நிமிடங்களில் தலைவலி போய்விடும். அப்படி நீர் குடித்தும் தலைவலி போகாமல் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில வழிகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து குடியுங்கள்.

துளசி

துளசி தலைவலிக்கு காரணமான இறுக்கமான தசைகளை தளர்வடையச் செய்து, தலைவலியில் இருந்து விடுவிக்கும்.

* ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 3-4 துளசி இலைகளைப் போட்டு மிதமான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, பின் வடிகட்டி அதில் தேன் சேர்த்து கலந்து குடியுங்கள்.

* ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் துளசி இலைகள் அல்லது சில துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து, அந்நீரில் ஆவி பிடியுங்கள்.

* இல்லாவிட்டால், சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள் அல்லது துளசி எண்ணெயை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, நெற்றியில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

லாவெண்டர் ஆயில்

லாவெண்டர் ஆயிலில் இருந்து வீசும் வாசனை டென்சனால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். ஆய்வில் லாவெண்டர் ஆயில், ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறியில் இருந்து விடுவிக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.

* சில துளிகள் லாவெண்டர் எண்ணெயை சுவாசியுங்கள். இல்லையெனில், 2 கப் கொதிக்கும் நீரில் 2 துளிகள் லாவெண்டர் ஆயில் சேர்த்து, ஆவி பிடியுங்கள்.

* இல்லாவிட்டால், 2-3 துளிகள் லாவெண்டர் ஆயிலை 1 டேபிள் ஸ்பூன் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, அந்த கலவையை நெற்றியில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

ஐஸ் பேக்

ஐஸ் கட்டியில் உள்ள குளிர்ச்சித்தன்மை தலைவலிக்கு காரணமான அழற்சியைக் குறைக்க உதவும். மேலும் இது வலியை மரத்துப் போகச் செய்யும்.

* ஒற்றைத் தலைவலி இருந்தால், ஐஸ் கட்டிகளை கழுத்திற்கு பின்புறம் வையுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

* இல்லாவிட்டால், ஒரு துணியை ஐஸ் நீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியை நெற்றியின் மீது 5 நிமிடங்கள் வைத்து எடுங்கள். இப்படி பல முறை செய்யுங்கள். இதனால் சீக்கிம் தலைவலி போய்விடும்.

ரோஸ்மேரி ஆயில்

ரோஸ்மேரி எண்ணெயில் உள்ள ரோஸ்மேரினிக் அமிலம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தலைவலியை சரிசெய்யும். அதற்கு சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, நெற்றியில் தடவி மசாஜ் செய்யுங்கள். ஆனால் இந்த ரோஸ்மேரி ஆயில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல.

கிராம்பு

கிராம்பு டென்சனால் ஏற்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

* சில கிராம்புகளை நசுக்கி, துணியில் போட்டு கட்டி, அதன் வாசனையை நுகருங்கள். இதனால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* இல்லாவிட்டால், 2 துளிகள் கிராம்பு எண்ணெயை 1 டேபிள் ஸ்பூன் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, அந்த எண்ணெயை நெற்றிப் பகுதியில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் சீக்கிரம் தலைவலி பறந்தோடிடும்.

* 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 டீஸ்பூன் கல் உப்பு மற்றும் 2 துளிகள் கிராம்பு எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையை நெற்றியில் தடவி மசாஜ் செய்யுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் இரண்டிலும் உள்ள பண்புகள், உடலில் அமில மற்றும் காரத்தன்மையை சமநிலையில் பராமரித்து, தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

* தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க, ஆப்பிளை உப்பு தொட்டு சாப்பிடுங்கள்.

* இல்லாவிட்டால், 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு டம்ளர் நீரில் கலந்து குடியுங்கள்.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெயில் உள்ள மென்தால், தலைவலிக்கு காரணமான இரத்த நாளங்களில் உள்ள அடைப்பை விடுவிக்க உதவும். மேலும் இது சாந்தப்படுத்தும் பண்புகளைக் கொண்டது.

* 1 டேபிள் ஸ்பூன் பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது நீரில், 3 துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையை நெற்றியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். அல்லது, புதினா இலைகளை கையால் நசுக்கி நெற்றியில் தடவுங்கள்.

* இல்லாவிட்டால், கொதிக்கும் நீரில் சில துளிகள் புதினா எண்ணெய் சேர்த்து, அந்நீரில் சில நிமிடங்கள் ஆவி பிடியுங்கள்.

Related posts

கைக்குழந்தை விடாமல் தொடர்ந்து அழுதால் .

nathan

பல் அழுக்குகள் நீங்கி பளிச்சென இருக்க இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!

nathan

மகளுக்கு தந்தை சொல்லிக் கொடுக்க வேண்டியவை

nathan

துணியில் படிந்திருக்கும் பல்வேறுபட்ட கடினமான கறைகளை எளிதாக போக்குவதற்கான டிப்ஸ்!!!

nathan

கர்ப்பமாக முயலும்போது என்ன செய்ய வேண்டும்?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

மூக்கடைப்பை போக்க சில வழிமுறைகள்…..

sangika

பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறையை எளிதில் நீக்க வேண்டுமா? அப்ப இத முயன்று பாருங்கள்

nathan

உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் இந்த 4 உணவுகளை உடனே சாப்பிடுங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா எவ்வளவு காபி, டீ குடிக்கலாம்?

nathan