29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
sunday
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த ராசிக்காரங்க திருந்தவே மாட்டீங்களா?…

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.

daily horoscope 7.4.18
சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்
மேஷம்
பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். அறச்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் வரும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 2

அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

ரிஷபம்
ரிஷபம்
புனித யாத்திரை செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆகாய மார்க்க பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்குள் புகழப்படுவார்கள். சுயதொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாண்டு லாபம் அடைவார்கள். இளைய சகோதரர்களால் சுப விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட எண் – 1

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு நிறம்

மிதுனம்
மிதுனம்
உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்களால் தனலாபம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருள்களை மீட்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை – தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் – 5

அதிர்ஷ்ட நிறம் – இளம்பச்சை

கடகம்
கடகம்
உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு

அதிர்ஷ்ட எண் – 2

அதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளை

சிம்மம்
சிம்மம்
பூர்வீக சொத்துக்களால் சுப விரயம் உண்டாகும். நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். புத்திரர்களின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். விவாதங்களைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 3

அதிர்ஷ்ட நிறம் – இளம்பச்சை

கன்னி
கன்னி
வாகனப் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வரும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான நாள்.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 7

அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம்

துலாம்
துலாம்
சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். புாட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கால்நடைகளால் லாபம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிகள் மேற்கொள்வீர்கள். தாயின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு

அதிர்ஷ்ட எண் – 8

அதிர்ஷ்ட நிறம் – கருப்பு நிறம்

விருச்சிகம்
விருச்சிகம்
எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு லாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். சாதுர்யமான பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 4

அதிர்ஷ்ட நிறம் – ஊதா நிறம்

தனுசு
தனுசு
சகோதரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் நிதானத்துடன் செயல்படவும். பயணங்களை மேற்கொள்வீர்கள். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை – வடக்கு

அதிர்ஷ்ட எண் – 3

அதிர்ஷ்ட நிறம் – இளம் மஞ்சள்

மகரம்
மகரம்
கூட்டுத் தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுப செய்திகள் வந்தடையும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை – கிழக்கு

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்

கும்பம்
கும்பம்
மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலைப்பளு அதிகமாகும். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை – தெற்கு

அதிர்ஷ்ட எண் – 9

அதிர்ஷ்ட நிறம் – அடர் சிவப்பு

மீனம்
மீனம்
பிள்ளைகளால் சுப விரயம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பயணங்களால் லாபம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். பூாவீக சொத்து சம்பந்தமான சுப விரயங்கள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை – மேற்கு

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்

Related posts

உங்க கனவில் இதெல்லாம் வந்தால் பணம் வரப்போகுதுன்னு அர்த்தமாம்…தெரிஞ்சிக்கங்க…

nathan

ஜாக்கிரதை…! இந்த வேலைகளில் இருப்பவர்களின் நுரையீரல் எப்பொழுதும் ஆபத்தில் இருக்குமாம்..

nathan

இந்த குணங்கள் உங்கிட்ட இருக்கா?மோசமான அப்பா & அம்மாவா இருக்கீங்களாம் தெரியுமா?

nathan

சிறந்த லட்சியங்களை அடைய குழந்தைகளுக்கு வழிகாட்டுங்கள்

nathan

ஆரோக்கியம் குறிப்புகள்

nathan

தெரிந்து கொள்ளுங்கள் ! 4-6 மாத குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சிறந்த திட உணவுகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…குளிர் காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்…

nathan

அருமையான டிப்ஸ்! அழகைக் கெடுக்கும் தொப்பை அதிரடியாக காணாமல் போக வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! காலையில் வெள்ளை பூசணி ஜுஸ் அருந்துங்கள்… ஆரோக்கியம் பெறலாம்!!!

nathan