29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800 9
மருத்துவ குறிப்பு

முதுகுவலியால் அவஸ்தை படுகின்றீர்களா?… உங்களுக்குதான் இந்த விஷயம்

நாள் முழுக்க நாற்காலியில் அமர்ந்திருக்கும் வேலை செய்யும் எல்லோரும் இருக்கும் பிரச்னை முதுகுவலி. முதுகுவலிக்கு காரணம் நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகள்தான். நம்மை மீறியும் சில விஷயங்கள் நடக்கலாம். இருந்தாலும் முதுகுவலியைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டிய சின்ன சின்ன விஷயங்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பார்ப்போம்!

உடல் பருமன்:
அதிகப்படியான உடல் பருமன் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் சமச்சீரின்மை போன்றவற்றை ஏற்படுத்துவதுடன் மூட்டு, முதுகு வலியையும் அழைத்துக்கொண்டு வருகிறது. எனவே, உடல் எடையைக் குறைப்பது, கட்டுக்குள் வைப்பது மூட்டு, முதுகுவலி வராமல் தடுக்க முதல் முயற்சியாக இருக்கட்டும்.

உடற்பயிற்சி இன்மை:
உடற்பயிற்சி எல்லாம் பாடி பில்டிங் செய்பவர்களுக்கு உரியது. சாதாரண வேலை செய்யும் எங்களுக்கு எதற்கு பயிற்சி என்று பலரும் நினைக்கின்றனர். நம்முடைய தசைகள் வலுவாக இருக்க பயிற்சி அவசியம். முதுகுக்கான பயிற்சிகள் செய்யும் போது முதுகெலும்பு வலுபெறும்.

உடல் அமைப்பைக் கவனிக்க வேண்டும்:
எப்படி அமர்கின்றோம், எப்படி நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம் என எல்லாமே முதுகுடன் தொடர்புடையதுதான். நீண்ட நேரம் தவறான பொஷிஷனில் அமரும்போது அதிகப்படியான அழுத்தம் முதுகெலும்பு மீதுதான் விழுகிறது. முதுகு பகுதி முழுவதும் நாற்காலியில் படும்படி சரியான நாற்காலியில் அமராததும் முதுகுவலிக்கு முக்கிய காரணம்தான்.

பர்ஸ் கூட முதுகுவலிக்கு காரணம்தான்!
பர்ஸை வழக்கமாக பின்பாக்கெட்டில் வைப்போம். பர்சில் ஆதிகால பொக்கிஷம் முதல் கடைசியாக வந்த பஸ் டிக்கெட், பெட்ரோல் பில் வரை எல்லாம் குப்பையாக குவிந்திருக்கும். இதை பின்பக்கத்தில் வைத்துக்கொண்டு அமரும்போது உடலின் பாஸ்ச்சர் எனப்படும் உடல் அமைப்பே மாறும். இதுகூட முதுகுவலியை ஏற்படுத்தலாம்.

நல்ல தரமான படுக்கை:
நாம் தூங்கும் படுக்கை கூட முதுகுவலிக்கு காரணமாகிவிடலாம். சௌகரியமான படுக்கை, தலையணைகளைப் பயன்படுத்துங்கள். முதுகெலும்பை வளைக்காமல் நேராக படுத்துப் பழகுங்கள்.

அனைத்தையும் விட முக்கிய விஷயம் ஒன்று உள்ளது. முதுகுவலி மிகத் தீவிர பிரச்னையாகும் வரை காத்திருக்க வேண்டாம். தொடக்க நிலையிலேயே மருத்துவர்களின் ஆலோசனையை நாடும்போது, எளிய பயிற்சி, பர்ஸ், எடை தூக்குதல், உடல் எடை குறைத்தல் உள்ளிட்ட எளிய மாற்றங்கள் மூலமாகவே பிரச்னையை தவிர்க்க முடியும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா கண்களின் அழகை பராமரிப்பதில் இவ்வளவு நன்மைகளா..!

nathan

முடியாது என எதுவுமில்லை! உலகில் முதன்முறையாக மூன்று பெற்றோருக்கு பிறந்த ஒரு குழந்தை!

nathan

குழந்தையை விடுதியில் சேர்த்து படிக்க வைக்கலாமா?

nathan

மொபைல் போனில் பேசும்போது கடைப்பிடிக்க வேண்டியவை

nathan

உங்களுக்கான தீர்வு கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை சரிசெய்வது எப்படி?

nathan

இந்தியாவில் 6.3 கோடி பேருக்கு சுத்தமான நீர் இல்லை – திடுக் அறிக்கை!

nathan

நீங்கள் தினமும் கழுத்து வலியால் கஷ்டப்படுறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

வெண் புள்ளியிலிருந்து விடுதலை பெற சூப்பரான இயற்கை வைத்தியம் – தெரிந்துகொள்வோமா?

nathan

கட்டாயம் இதை படியுங்கள் டெங்குக் காய்ச்சலின்போது உணவின் முக்கியத்துவம் என்ன?

nathan