குமட்டல் என்பது மிகவும் தொல்லை தரும் ஒன்றாகும். உங்களது வயறானது உங்களுக்கு வாந்தி வரப்போவது போன்ற ஒரு உணர்வை தரும். இதனை வைரஸ்கள் தூண்டுகின்றன. இது செரிமான பிரச்சனை அல்லது கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படலாம்.
கர்ப்பகாலத்தில் உண்டாகும் குமட்டலானது அடிக்கடி வரும். எதைப்பார்த்தாலும் அருவெறுப்பு அடைந்து கொண்டு குமட்டல் ஏற்படும். இது கர்ப்ப காலத்தில் அடிக்கடி ஏற்படுவது கொடுமையான ஒரு நிகழ்வாகும். இதில் இருந்து மீண்டு வர சில டிப்ஸ்கள் இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சாப்பிட்ட உடன் படுத்தல்:
குமட்டலாக இருக்கிறது என்று நீங்கள் படுத்துக்கொள்ள கூடாது. அதுவும் குறிப்பாக சாப்பிட்ட உடன் படுத்துக்கொள்ள கூடாது. சாப்பிட்டு அரைமணி அல்லது ஒரு மணிநேரம் கழித்த பிறகு தான் படுத்துக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட உடன் வாயுத்தன்மை உள்ள ஜீஸ்களை பருகுவதை தவிர்க்க வேண்டும்.
2. காற்றோட்டம் :
குமட்டல் ஏற்பட்டால் காற்றோட்டம் மிகவும் அவசியமாகிறது. ஜன்னலை திறந்துவிட்டு அதன் அருகில் இயற்கை காற்றை வாங்கிய படி அமரலாம். அல்லது மின் விசிறியை போட்டு விட்டு அதன் அருகில் அமரலாம்.
3. குளிர்ந்த ஒத்தடம்
குமட்டல் பிரச்சனை ஏற்படும் போது, உங்களது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். எனவே உங்களது பின் கழுத்து பகுதியில், ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரை துணியில் நனைத்து, சில நிமிடங்கள் ஒத்திடம் தரலாம். இது உடலின் வெப்பநிலையை குறைத்து, அதிக வெப்பநிலையால் உண்டான குமட்டலில் இருந்து விடுதலை தரும்.
4. தியானம்
குமட்டலாக இருக்கும் போது மன அமைதி மிகவும் அவசியமாகிறது. தியானம் அல்லது மூச்சை நன்றாக இழுத்து விடுவது போன்றவைகள் உங்களுக்கு குமட்டலில் இருந்து விடுதலை தருவதாக அமையும்.
5. சிந்தனையை மாற்றுங்கள்
உங்களுக்கு குமட்டல் உண்டாகும் போது சிந்தனையை அதன் மீதே வைக்காமல், உங்களது சிந்தனையை மாற்றுங்கள். புத்தகம் படித்தல், இதமான பாடலை கேட்பது போன்ற மனதை இதமாக்கும் வேலைகளில் ஈடுபடுங்கள்.